காலத்தின் கோலம்

  • 89

நானிலமும் கவி பாடும் – என்
நா கூட நலம் வேண்டும்
நல் மனம் கொண்ட நம் தலைவனுக்கு நாற்பத்தெட்டாம் பிறந்த தினமே!

வடுவாய் இருந்த எம் வலிகளை
வாசமுள்ள பூக்களாய்
புது மணம் பரப்பச் செய்து
பூங்காவனமாக்க நீ
புதைகுழியிலும் பாடு பட்டாய்!

விதி வலியது
காலம் செய்த கோலத்தால்
உன் கை இரண்டும் விலங்கிடவே
எம் கண்கள் இரண்டும் குளமாகி கலங்கி
பல இரவுகள் நாமும் கையோந்தினோம்!

கருகித் தான் விறகும் தீயாகும் போது
கலங்கித் தான் நீரும் தெளிவடையும் போது
உன் காயம் தான் நாளை கதிரவனாகும்!

தலைவனே கலங்காதே!
நம் வன்னி மண் என்றும் வரண்டதில்லை!
எம் வன்னி மைந்தன் என்றும் வீழ்ந்ததில்லை!

இன்றைய சம்பவங்கள் உன்னை சிறைப்படுத்தினாலும்
நாளைய சரித்திரத்தில்
நீ சாதனையாளனாவாய்!

தன்னலமில்லா என் தலைவனாய் நீ
துணிச்சலாய் முன்னேறி
தவறுகளை சுட்டெறித்து
தரணி எங்கும் தடம் பதிக்க
என் வாழ்த்துக்கள்!

Shima Harees
University of peradeniya
Puttalam Karambe

நானிலமும் கவி பாடும் – என் நா கூட நலம் வேண்டும் நல் மனம் கொண்ட நம் தலைவனுக்கு நாற்பத்தெட்டாம் பிறந்த தினமே! வடுவாய் இருந்த எம் வலிகளை வாசமுள்ள பூக்களாய் புது மணம்…

நானிலமும் கவி பாடும் – என் நா கூட நலம் வேண்டும் நல் மனம் கொண்ட நம் தலைவனுக்கு நாற்பத்தெட்டாம் பிறந்த தினமே! வடுவாய் இருந்த எம் வலிகளை வாசமுள்ள பூக்களாய் புது மணம்…

4 thoughts on “காலத்தின் கோலம்

  1. 970182 40536The next time I learn a weblog, I hope that it doesnt disappoint me as a lot as this 1. I mean, I do know it was my choice to read, however I actually thought youd have something attention-grabbing to say. All I hear is actually a bunch of whining about something which you could fix for people who werent too busy in search of attention. 318320

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *