ஒன்னோட அண்ணன் பெக்டரி வாங்கிட்டானாம்.

ஊமைக் காதல் நாடகம்
காட்சி: 03

கதாபாத்திரங்கள்

இனியா (கதாநாயகி)
ராதன் (கதாநாயகன்)
அபி (இனியாவின் தங்கை)
மேனகா (இனியாவின் தாய்)
பாரதி (இனியாவின் தந்தை)
செல்லம்மா (ராதனின் தாய்)
கெளரி (ராதனின் சகோதரி)
கெளதமி (இனியாவின் நண்பி)
சுவர்னா (ராதனின் அத்தை)

(காலங்கள் உருண்டோடுகையில் இனியா, ராதன் இருவருதும் வாழ்க்கை நிலையில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன. ராதன் வெளிநாடு சென்று மிகப் பெரிய கம்பெனியின் மெனேஜர் ஆக இருந்தான். ஆனால் இனியாவோ மாவட்டத்திலே உயர்தரப் பரீட்சையில் முதலாவது இடம் பெற்றிருந்தும் ஒரு சாதாரன கொழுந்து பெக்டரியில் கொழுந்து பறிக்கும் தொழிலாளியாக மாறியிருந்தால். ராதன் தனது தந்தை பட்ட கடன்கள் எல்லாம் மீள செலுத்தி விட்டு செல்வந்தனாகியது மாத்திரமன்றி பாரதி நடத்திச் சென்ற 80 ஏக்கர் நிலத்திற்கும், அவரது பெக்டரியிற்கும் உரிமையாளனாக உயர்ந்து விட்டான். இனியாவின் குடும்ப நிலைமையோ அடுத்த வேலை சோற்றிற்கும் கதியற்றுப் போன ஒரு நிலையாக இருந்தது. டாக்டர் சங்கர் அன்று சொன்ன வார்த்தை இன்று பளித்தது. எது எப்படியாக இருந்த பொழுதிலும் இனியா-ராதனின் காதல் எது வித ஏற்றத்தாழ்வுகளும் இன்றி அப்படியே வளர்ந்து சென்றது.

ஒரு தகரக் கூட்டுக்குள் நாழ்வர் வசிக்கின்றனர். குடும்பத்தின் நிலை தனை கருதி பாரதியின் ஏக்கக்குரல் வெளியாகிறது.)

அபி:- அம்மா பசிக்குதும்மா. சீக்கிரமா சாப்பாட்ட எடுத்து வைமா. எனக்கு இதுக்கு மேல பசிதாங்க முடியல!

மேனகா:- அம்மா கொஞ்சம் பொறுத்துக்கம்மா. அப்பா வேலக்கி போயிருக்காரு ஏதாவது எடுத்து வருவாரு.

அபி:- அம்மா நேது ராத்திரியும் இத தானேமா சொன்ன? என்னால முடியல மா.

இனியா:- சும்மா கத்தாம இரு அபி. வீட்டுல சாப்பாட்டுக்கு இருந்தா தானே தாரது. அப்பா ஏதாச்சும் எடுத்து வந்தா தா உண்டு.

அபி:- என்னம்மா சொல்ற. அம்மா அப்பா ஜாலிக்காக இந்த வீட்டுல இருக்குறதா சொன்னாரே. அப்போ எல்லாம் தெனம் தெனம் வீசிற சாப்பாடு நெஞ்சிருக்கும். அதுல ராத்திரிக்கு தூங்க கூட முடியல மா கொசு கடிக்குது.

மேனகா:- நான் இந்த அஞ்சு வயசு புள்ளக்கி என்னான்னு சொல்லி புரிய வக்கிறது? நா என்ன தங்கம் பண்ணுறது? செல்வத்துல குளிச்சிக்கிட்டு இருந்து திடீர்னு இப்டி ஆன்மா அதுதான் இப்படி இருக்கு. அடுத்த வேல கஞ்சிக்கு அழுகுறனே.

இனியா:- ஊருக்கே தர்மம் பண்ணவரு எங்கப்பா அவருக்கு இப்படி ஒரு நெலம ஆயிருச்சே. நா படிச்சி வேலையும் இல்ல கொழுந்து பறிக்க போய் கிட்டு இருக்கேன்.

மேனகா:- ஊருக்கே கொடுக்கல்லடி பேருக்கு கொடுத்தாரு ஒங்கப்பா. அப்பவே சொன்னே ஏழங்களோட வயித்துல அடிக்காதிங்கன்னு எவ்வளவு கெஞ்சினேன்.

இனியா:- என்னம்மா சொல்ற? எல்லாம் புதுசு புதுசா இருக்கு.

மேனகா:- அவங்களுக்கு ஒரு லச்சம், இவங்களுக்கு ரெண்டு லச்சம்னு கொடுத்தது எல்லாமே. அட்டக்கி ரெத்த தானம் பண்ணுறது இந்த தொழிலாளிங்களாடது தான்டி.

அபி:- அது தான் ஆண்டவன் நம்மல இருக்கப் புடிச்சிட்டான் இல்லம்மா?

இனியா:- நம்ம அப்பா இவ்வளவு மோசமானவரா??

(கதவை திறந்து வீட்டுக்குள் நுழைந்த பாரதி அழுது கொண்டே.)

பாரதி:- ஆமாம்மா. ஒன்னோட அப்பா மோசமானவரா தான். அள்ளி அள்ளி கொடுக்கும் போது கூட இருந்தவன் எல்லாம் இன்னக்கி எனக்கு கொஞ்சம் கொரஞ்சி போனதும் காலால எட்டி ஒதக்கிறானுங்க!

அபி:- என்னப்பா சொல்றிங்க ஒதக்கிறாங்களா? எங்கப்பா காய்த்த காணல்ல!

பாரதி:- காயம் ஒடம்புல இல்லம்மா மனசுல இருக்கு! மனசுல இருக்கு!

மேனகா:- இதெல்லாம் எப்பயோ புரிஞ்சிருக்கனும். இப்ப அழுது என்ன பயன்?

இனியா:- சும்மா இரும்மா ஏற்கனமே அவரு வேதனைல இருக்காரு.

பாரதி:- நீ சும்மா இரும்மா அவ சொல்லட்டும். அவ சொன்னப்போ எல்லாம் அவைக்கு பேசினேனே! இப்ப இந்த கெதி தேவ தான்.

அபி:- அப்பா என்னப்பா எடுத்து வந்த? நேத்து ராத்திரில இருந்து எதுவுமே சாப்டல்ல. ரொம்ப பசிக்குது.

பாரதி:- அடடா நான் மறந்தே போயிட்டேன் என் செல்லத்தக்கது பசிக்குதுல்ல. இந்தா மேனகா இத சமச்சி போடு. என் செல்லத்துக்கு மிட்டாய் புடிக்கும்ல இந்தம்மா சாப்புடு.

( மனம் நிறைய வேதனையுடன் பாரதி.)

பாரதி:- அம்மா இனியா வீட்டு சாமானெல்லாம் கணக்கா கட்டி வெச்சிடும்மா. ராத்திரிக்கு லாரி வரும் நாம போயிடனும்.

மேனகா:- என்னங்க சோதன இது? இந்த எடத்த விட்டா நாம எங்க தா போறது கடவுளே.

பாரதி:- அழுவாதம்மா என்ன மன்னிச்சிறு. நீ வாழ்ந்த வாழ்கக்கி. இங்க இர்க்குற நம்மலோட பெக்டரிய யாரோ ராதன் சந்திரசேகரன்னு புதுசா சின்ன பையன் ஒருத்தன் வெலக்கி வாங்க போறானாம். பெக்டரிய புதுசா செய்யனுமாம். பையன் பிரான்ஸ்ல இருக்காறாம் ரெண்டு வருஷத்துல பெக்டரிய வந்து பாப்பானாம்.

இனியா:- அப்ப நாம எல்லாம் எங்க அப்பா போறது?

பாரதி:- நுவரெலியா போவ போறம்மா. அங்க தான் அப்பா வேல செய்ய போறே. நம்ம கெளதமியும் அங்க தா வரப்போறா.

இனியா :- அவளுமா என்னப்பா சொல்ற?

(இதற்கிடையே இனியாவின் வீட்டிற்குள் நுழைந்த கெளதமி அழுது புலம்புகிறாள்.)

கெளதமி :- இனியா எங்கிருக்க?

இனியா:- வாடி சாமான் எல்லாம் கட்டிட்டன் இனி போறது தான் மிச்சம்!

கெளதமி:- என்னடி சாதரணமா சொல்ற?

இனியா:- வேற எப்படி சொல்றது? ஆண்டவன் ரொம்ப எறக்கமா இருக்கானே. எப்புடிடி போறது? என்னால தாங்க முடியல.

கெளதமி:- எங்களுக்கு இப்படி ஒரு நெலம ஆயிருச்சே.

இனியா:- நம்மட தல விதி இப்படித்தான் எழுதிருக்கு அழுவாதடி தங்கமே.

கெளதமி:- என்னால தாங்க முடியலடி. பொறந்த ஊர விட்டு பிரிஞ்சு போறமே

(இனியா எழுத ஆரம்பிக்கிறாள்)

என் மனதிற்கு இனிய ராதனிற்கு! நீங்க மொதல் தடவ பாக்கும் போது பணக்காரியாக இருந்த இனியா இன்னக்கி ஒரு ஏழயாக எழுதுறது. எங்கப்பாவ எல்லாரும் ஏமாத்திடாங்க, இப்ப அவருக்கு பெக்டரி இல்ல. அத அவரோட நண்பர்கள் ஏமாத்தி எடுத்து கிட்டாங்க. இப்ப யாரோ ஒங்க ஊரு காரங்க எடுக்க போறாங்களாம். நாம அடுத்த வேல சோத்துக்கும் வழியில்லாம இருக்கோம். நான் எக்ஸாம் எழுதிட்டேன் இப்ப கொழுந்து பறிக்க போறேன். நீங்க இப்ப பெரிய பணக்காரனா ஆகி இருப்பீங்க.. ஆனா என்ன மறந்திருக்க மாட்டிங்கன்னு நெனக்கிறேன்.

நான் இப்ப இருக்குற வீட்டயும் விட்டுட்டு ஒங்க ஊருக்குத் தான் போலவ போறேன். இந்த எடத்துல நம்மலுக்கு வேல கெடயாதாம். நா எங்க போனாலும் ஒங்கள தான் நெனசிட்டு இருப்பேன். எப்ப சரி ஊருக்கு வந்தா என்ன ஒரு தடவ பாத்துட்டு போவ வாங்க.

இனியா.

இனியா:- கெளதமி இந்த கடிதத்த மறக்காம எடுத்துக்கணும் ஞாபகப்படுத்து.

கெளதமி:- சரி இனியா நீ கொஞ்சம் சாஞ்சிக்க. நா வீட்டுப்பக்கம் போய் வாரேன்

(ராதனின் வீடு. இங்கு இவர்களது நிலை இவ்வாறு இருக்க ராதனது நிலை முற்றிலும் மாற்றமாக இருந்தது. ராதன் பிரான்ஸில் இருந்து வீட்டிற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டான்.)

கெளரி:- அம்மா அண்ணா கோல் பண்ணிருக்காரு சீக்கிரமா வாமா. அண்ணா இப்ப தானே இன்னும் கொஞ்சம் நேரம் பேசலாம்ல.

ராதன்:- அடியே 30 நிமிஷமா ஒன் கூட தான் பேசுறே அம்மா கிட்ட கொடு.

கெளரி:- சரி சரி கட்சியாகவும் என் கூட பேசு.

செல்லம்மா:- ராதா எப்பிடிப்பா இருக்க? நல்லா இருக்கியா?

ராதன்:- எனக்கென்ன அம்மா நான் நல்லா இருக்கேன். நீ எப்டிம்மா இருக்க?

செல்லம்மா:- நா இருக்கேன் நீ செஞ்ச புண்ணியத்தால நா ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.

செல்லம்மா:- நான் செஞ்ச புண்ணியம் இல்லம்மா. அந்த இனியா பண்ணுன புண்ணியம். அதில்ல அம்மா.

செல்லம்மா:- சொல்லுப்பா என்ன விஷயம் ஏதோ முக்கியமா சொல்லப்போற?

ராதன்:- அம்மா கடவுள் அருளால மஸ்கெலியா லயன் பெக்டரிய வெலக்கி வாங்க போறேன்.

செல்லம்மா:- அடடா என்னப்பா சொல்ற ரொம்ப சந்தோஷமா இருக்கு. கெளரி இங்க பாரு ஒன்னோட அண்ணன் பெக்டரி வாங்கிட்டானாம்.

கெளரி:- என்ன அண்ணா சொல்ற நெசமா?

ராதன்:- அம்மா மிச்சம் நேரம் கெடயாது. நா சொல்றது கவனமா கேளுங்க. நா அங்க இருக்குற பெக்டரிய பூட்ட சொல்லியிருக்கேன். அதோட அங்க இருக்குற தொழிலாளிங்க அரவாசி நம்ம ஊர் பெக்டரிக்கி தான் வேலக்கி வருவாங்க. அதுல பாரதினு ஒரு குடும்பம் வரும் அவர்களுக்கு நம்ம வீட்டோட முன் பக்கத்துல எடத்த ஏற்பாடு பண்ணின கொடுங்கம்மா. அதோட அங்க லயன்கள்ள துப்பரவு செய்யும் ஏதாச்சும் முக்கியமான சாமான் கெடச்சா அத பத்திரமா எடுத்து ஒங்களோட கைல கொடுக்க சொல்லி சங்கருக்கு சொல்லியிருக்கேன் சரியா? நீங்க பத்திரமா பாத்து காரியங்கள் கவனிச்சிகிங்கம்மா. சரியா?

செல்லம்மா:- சரிப்பா அப்படியே செஞ்சிடுறன் ராதா.

ராதன்:- சரிம்மா நா ஆபிஸ்கு போவனும் அப்பறமா பேசுறே கவனமா இருங்க சரியா?

செல்லம்மா:- சரிப்பா ராதா நீயுமெ கவனம்.

(வீட்டுடன் பேசிய பின்னர் ராதன் கனவுலகில் மூழ்கினான்)

இனியா ஒன்ன நம்மளோட கல்யாணத்துக்கு முன்னாடியே நம்ம வீட்டுக்கு எடுக்கப் போறேன். ஒங்க வீட்டோட நெலம இப்ப ரொம்ப மோசமான இருக்கும். அது எனக்கு தெரியும். பாவம் ரொம்ப கஷ்ட பட்டிருப்ப. எப்படியோ என் செல்லம் ஒன்ன என் வீட்டுக்கே வர வச்சினட்டேன்.

(ராதனின் வீடு)

சுவர்னா:- மதினி நீ பட்ட துன்பத்துக்கு ஆண்டவ எவ்ளோ பெரிய இன்பம் கொடுத்துட்டான்.

செல்லம்மா:- ஆமா மதினி! எம்புள்ளயோட ஏக்கம். ஊரே அறிஞ்ச ஒரு கடனாளியோட மகன் இன்னக்கி ஒரு பெக்டரி ஓனர்.

சுவர்னா:- வேண்டுதல் என்ன சரி வேண்டிக்க மதனி. ஊர்ல தெரிஞ்சா கண்ணு பட்டுறும். அதோட கடவுளுக்கும் நன்றி சொல்லனும்ல.

செல்லம்மா:- நா ஏற்கனமே இனியா ராதன் ரெண்டு பேருக்குமே வேண்டிக்கிட்டேன். அந்த ரெண்டு பேரும் பண்ணுன தியாகமும், புண்ணியமும் தான் நாம இன்னக்கி இப்படி இருக்க காரணம். கடவுளே கோடி நன்றி உனக்கு.

(இப்படியாக இவர்கள இருவருதும் நிலைமை இருக்க இனியா இரவோடு இரவாக நுவரெலியா நோக்கி பயணமாகிறாள். ஆனால் அவள் எழுதிய கடிதத்தை அவளது வீட்டிலேயே விட்டுவிட்டாள். இனி என்ன நடக்கும்? கடிதம் யார் கைக்கு கிடைக்கப் போகிறது? சங்கரின் கையில் கிடைக்குமா இல்லை தவறி விடுமா? இனியா ராதனின் வீட்டிலேயே நுழையப் போகிறாள். இனிமேலும் காதல் கதை சுவாரஸ்யமாக இருக்குமா? பார்க்கலாம் அடுத்த காட்சியில். எதிர்பார்ப்புகள் பலவற்றுடன் இன்றைய காட்சி முடிவடைகிறது)

Fathima Badhusha Hussain Deen
Faculty of Islamic Studies and Arabic Language
South Eastern University of Sri Lanka
Author: admin