உங்கட புள்ளய நல்ல குணத்தோட வளர்த்திருக்கிங்க இத விட வேர என்ன வேணும்.

  • 56

அவளோடு சில நொடிகள்
தொடர்:-06

பசியாவின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் ஹஸீனாவின் சிந்தனையை ஆட்டிப் படைக்க ஆரம்பித்தது பல நிமிங்டகள் யோசித்தாள். பசியாவை சமாதானப்படுத்த முடியாது என உணர்ந்து கொண்டு இறுதியாக தீர்மானத்துக்கு வந்தாள்.

“ம்ம்ம். சரி உன்ட வழிக்கே வாரன்.”

“இப்புடி மொட்டையா சொன்னா சரியா? வல்லாஹி பன்னி சொல்லு.”

“ஓகே வல்லாஹி நான் கல்யாணம் முடிக்கன் போதுமா?”

அன்று முதல் கொண்டு இன்று வரை தன்னை சூழ இருப்பவர்களுடைய சந்தோஷத்தைப் பற்றியே யோசித்து பழகியதால் சுயநல தீர்மானம் என்பதற்கே அவளிடத்தில் இடம் இல்லாதிருந்தது. தன் வலிகளை மறைத்தாள் மீண்டும் சிரித்தாள்.

ஹஸீனாவின் முடிவைக் கேட்டது தான் தாமதம் பசியாவின் முகத்தில் சந்தோஷம் தாண்டவமாடியது உடனே சுஜூதில் வீழ்ந்து இறைவனுக்கு நன்றிகள் பல சொல்லிக் கொண்டு எழுந்தாள்..

அவள் எதிர் பார்க்கவில்லை ஹஸீனா சம்மதிப்பாளென இருந்தும் தன் இறைவனிடத்தில் பொறுப்புச் சாட்டி விட்டு முயற்சித்தாள் அதன் விளைவாய் நல்ல முடிவையும் பெற்றுக் கொண்டாள்.

“ப்பாஹ். அல்ஹம்துலில்லாஹ் அல்ஹம்துலில்லாஹ். இந்த ஒரு வார்த்த போதும் உண்மைலயே இப்ப தான் எனக்கு நிம்மதியா இருக்கு வாப்பாவும் உம்மாவும் இத கேட்டா இன்னம் சந்தோசப்படுவாங்க தாங்ஸ் டா.” என்று கூறியவாறு கண்ணீர் கலந்த புன்னகையோடு ஹஸீனாவைக் கட்டியனைத்து முத்தமிட்டாள்.

“ம்ம்ம். அல்ஹம்துலில்லாஹ். சோரி பசியா நீ வரமாட்டன்னு பிடிவாதம் பிடிக்கயும் முதல்ல உன்ல கோபம்தான் வந்திச்சு. இப்ப சந்தோசமா இருக்கு உண்மைலயே கியாஸ் கொடுத்து வெச்சவன் தான்.” என்றாள் சுலைஹா.

“அது செரி அது யாரு புதுசா கியாஸ்?”

“அடிப்பாவி. இவளவு நாளா மாப்புளட பேரு கூட உண்ட மனசுல பதியல்லயா. இப்ப எல்லாம் சக்சஸ் தான இனி பதிய வெச்சிக்க”

“பதிச்சிட்டா போச்சி.” சிரித்துக் கொண்டே ஹஸீனா எதிர் பார்த்த பசியாவாக மீண்டாள்.

பெருமூச்சொன்றை இழுத்து விட்டவளாக பசியாவை அழைத்துக் கொண்டு பெண்கள் வீற்றிருந்த மண்டபம் நோக்கி நகர்ந்தாள் ஹஸீனா. அத்தனைக்கும் இடையில் அவள் உள்ளத்துக்குள் பெரும் பனிப்போர் ஒன்று நிகழ்ந்து கொண்டே இருந்தது. கதவு திரைச்சீலையைத் தாண்ட மணப்பெணுக்கே உரிய நாணம் பசியாவின் முகத்திரையில் தானாய் வந்து ஒட்டிக் கொண்டது.

அவர்களை எதிர்பார்த்திருந்த அந்த பரந்த பெண்கள் தொகையினரின் முன்னிலையில்
சம்பிரதாய புன்முறுவலோடு சலாம் கூறிக் கொண்டே மூவரும் அமர்ந்தார்கள்.

பசியா இன்று வித்தியாசமான அழகில் இருந்திருந்தாலும் அவளுடைய அழகிற்கு எந்த விதத்திலும் ஹஸீனாவும் குறைந்திருக்க வில்லை. வந்திருந்தவர்கள் பசியாவையும் ஹஸீனாவையும் மாறி மாறிப் பார்த்து விட்டு,

“ம்ஹ்ஹ். இதுல எது பசியா? ரெண்டு புள்ளயலும் ஒரே மாதி தானெ இருக்குதுகள்” வந்தவர்களில் இருந்து ஓர் குரல் எழும்பியது.

“இந்தா ப்ளூ கலர் சல்வார் போட்டிருக்குற இதான் உங்கட பசியா”

மாப்பிள்ளை வீட்டாருக்கு யாரு பசியா என கண்டு பிடிக்க நஸீம் வீட்டாரின் அடையாளம் காட்டலே தேவைப்பட்டது. பத்து நிமிட தாமதத்தில் பிறந்த இருவரும் முகப்பாவனையிலும் ஒரே விதமான சாயலைக் கொண்டிருந்தார்கள்.

எல்லோருக்கும் பசியாவைப் பிடித்து விட்டது. முன்னரே புகைப்படம் பார்த்து அறிந்தவள்தான் என்றாலும் நேரில் பார்த்து பேசுவது சம்பிரதாய வழக்கமாக இருந்ததால் இந்த பெண்பார்க்கும் படலமும் நடந்தேறியது. பல வகையான இனிப்பு பண்டங்களும் குளிர் பாணமும் பரிமாறப்பட்டது.

“மனசு குளிர்ர அளவுக்கு எல்லாரும் நல்லா ஆதரிச்சிங்க மச்சான் அல்ஹம்துலில்லாஹ். மறுவா, கல்யாண வேலயெலாம் இப்பத்துல இருந்தே ஆரம்பிச்சாத்தான் சரியா வந்து சேரும்.”

“ஓம் இல்லன்னா எல்லாத்தையும் கடைசி நேத்தைல வெச்சிக்கிட்டு அவதிப்படனும்.”

“ஆ ஆ பேச வேண்டிய மத்த விஷயத்தலாம் பேசி முடிச்சிருங்க.” மாப்பிள்ளை வீட்டு சார்பாக ஓர் முதிர்ந்த குரல் குறுக்கிட்டது.

“ஓம் மச்சான் பேச வேண்டியதெலாம் இப்பயே பேசி முடிப்பம். எனக்குட்ட இருக்குற எல்லாத்தையுமே மூனு பிள்ளைகளுக்குமே சரி சமமா பிரிச்சிட்டன். அதுல ஒரு பங்க என்ட பசியாக்கும் தந்துற்றன்.”

“என்ன மச்சான் கதக்கிங்க. எவளவு வருசமா நாம பழவிகிட்டு இருக்கம். ஒருத்தருக்கு ஒருத்தர் தொழில்ல உதவியா இருந்துக்கிட்டு வாறம். நமக்குல எதுக்கு இப்புடி மார்க்கத்த மதிக்காத ஒரு கேவலமான வேல. சீதனம்ங்குற பேர்ல எங்களுக்கு ஒன்னும் வாணாது. உங்கட புள்ளய நல்ல குணத்தோட வளர்த்திருக்கிங்க இத விட வேர என்ன வேணும். எங்கட மருமகள எங்கட மகளாவே நாங்க கூட்டி போறம் அது போதும்.”

என்று மாப்பிள்ளையின் தந்தை கூறியதைக் கேட்ட நஸீம் தன் மகளை மகளாகவே ஏற்றுக் கொள்ளும் ஓர் குடும்பம் அவளுக்கு கிடைக்கப் போவதை எண்ணி பெரும் மகிழ்ச்சி அடைந்தார்.

என்றாலும் தன் சந்தோஷத்திற்காக தன் பிள்ளைக்கு கொடுக்க எண்ணியதை கொடுக்காமல் இருக்கவும் அவர் மனம் விடவில்லை.

“நீங்க சொல்றத கேக்க சந்தோஷமா இருக்கு மச்சான். ஆனா எங்கட மகளுக்குண்டு நாங்க சந்தோஷமா செய்றத நீங்க ஏத்துக்கனும்.”

“அல்லாஹ்வுக்காக நாங்க சீதனம்டு எதையும் வாங்க விரும்பல்ல மத்தப்படி உங்கட சந்தோசத்துக்கு நாங்க தட போட மாட்டம். உங்கட மகள் விரும்பினா மட்டும் உங்கட சந்தோஷத்த நீங்க செய்ங்க.” என்றார் கியாஸின் தந்தை.

அவர் ஹஸீனாவைப் பற்றி அறிந்திருந்ததால் அவள் தன் தந்தையிடம் இருந்து எதையும் பெற்றுக் கொள்ள விரும்பமாட்டாள் என நம்பினார். அவருடைய நம்பிக்கையும் வீன் போகாது.

“சரி மச்சான் என்ட புள்ள எப்பயும் நல்லா இருந்து வாழனும் மச்சான். எந்த குறையும் இருக்கக் கூடாது”

“ம்ஹ்ஹ். நீங்க அதப்பத்தியெல்லாம் கவலப்பட வானா. இன்ஷா அல்லாஹ் எங்கட வீட்ட யாருக்கும் எந்த குறையும் வராது.”

“ம்ம்ம். அல்ஹம்துலில்லாஹ்.”

ஹஸீனா திருமணத்திற்கு சம்மதித்த விடயத்தை எப்படியோ சுலைஹா வீட்டார் அனைவரின் செவிகளுக்குள்ளும் எத்தி வைத்து விட்டாள். அது வரை கனத்திருந்த இதயங்கள் சந்தோஷக் கடலில் மூழ்க ஆரம்பித்தது. மனதை இருக்கிப் பிடித்திருந்த பாரம் நீங்கி நிம்மதி பெருமூச்சொன்றை இழுத்து விட்டார் நஸீம்.தாய் தந்தையரின் மன இருள் அகன்று அங்கே நிம்மதி குடி கொண்டிருந்ததை உணர்ந்து கொண்டாள் ஹஸீனா .

எல்லோரோடும் சகஜமாக அவள் சிரித்துப் பேசினாலும் அவளுடைய மனதுக்குள் பெரும் போராட்டம் ஒன்றே நிகழ்ந்து கொண்டிருந்தது.

மூட்டை கட்டி வைத்திருந்த கனவுகள் அறுந்து போன ஓர் நாள். தாய் தந்தையரின் எதிர்பார்ப்புக்கள், மாமி தன் மீது சாட்டிய பழி, பசியாவிற்கு கொடுத்த வாக்கு இவற்றையெல்லாம் நினைத்து ஆழ்ந்த சிந்தனைக்குள் அகப்பட்டிருந்த ஹஸீனாவைக் குறுக்கிட்டது அந்த தொலைபேசி அழைப்பு.

பசியாவின் மூத்த மைனி ஜெஸீறா இரண்டு நிமிடங்கள் பேசி விட்டு தகவலை சொன்னாள்.

“உம்மா மாமி மாமா எல்லாம் வந்திருக்காங்களாம்”

இதைக் கேட்டதும் தான் ஜெஸீறாவின் தாயாருக்கு கல்யாண வேலைகள் சில நினைவுக்கு வந்தன. அனைத்தைதும் மறந்து தன்னை சுற்றி இருந்த வருங்கால உறவுகளின் அன்பை சுவைத்துக் கொண்டிருந்த பசியாவை பிரிய மனமில்லாது விடை பெற்று செல்ல தயாரானார்கள். தனது மாமியார் மற்றும் மைனிமார்களுடைய அன்பைப் ரசித்து தன் கற்பனை தேசத்தின் கதவுகளைத் தட்டிக் கொண்டிருந்தாள் பசியா.

தொடரும்
ஏரூர் நிலாத்தோழி

அவளோடு சில நொடிகள் தொடர்:-06 பசியாவின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் ஹஸீனாவின் சிந்தனையை ஆட்டிப் படைக்க ஆரம்பித்தது பல நிமிங்டகள் யோசித்தாள். பசியாவை சமாதானப்படுத்த முடியாது என உணர்ந்து கொண்டு இறுதியாக தீர்மானத்துக்கு வந்தாள். “ம்ம்ம்.…

அவளோடு சில நொடிகள் தொடர்:-06 பசியாவின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் ஹஸீனாவின் சிந்தனையை ஆட்டிப் படைக்க ஆரம்பித்தது பல நிமிங்டகள் யோசித்தாள். பசியாவை சமாதானப்படுத்த முடியாது என உணர்ந்து கொண்டு இறுதியாக தீர்மானத்துக்கு வந்தாள். “ம்ம்ம்.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *