அரசியல்வாதிகளின் இருப்புக்கான போராட்டம்

  • 15

அரசியல் அவதானிகளால் எதிர்வு கூறாத நிலையில் 25/10/2018ம் அன்று எதிர்பாரத விதமாக புதிய பிரதமாராக மஹிந்த ராஜபக்ஷா அவர்களை நியமித்துவிட்டு அன்றைய தினம் காலியில் மதத்தலங்களில் கட்டிட திறப்பு விழாவிற்கு சென்றிருந்த (முன்னால்) பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி நீக்கப்பட்டார். இது 2014ம் ஆண்டு ஆட்சியில் இருந்த அரசுக்கு எவ்வாறு துரோகம் செய்ததோ அதேமாரி ஒரு துரோகமகத்தான் பார்க்கப்படுகின்றது.

2014 இல் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன அவர்கள் பொது வேட்பாளராக களமிறங்கிய போது மஹிந்த ராஜபக்ஷா மீது முன்வைத்த அதே குற்றசாட்டுகளைதான் இம்முறை ரணில் விக்ரமசிங்க மீதும் வைத்தார். இவ்வாறு அவரின் தீடிர் மாற்றத்தில் உள்ள எதிர்கால அரசியல் போக்கு எவ்வாறு அமையலாம் என அலசுவதே இன்றைய பதிவாகும்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக களமிறங்கிய ஜனாதிபதி அன்று முன்வைத்த பல கருத்துக்களுக்கு முன்னுக்கு பின் முரணாக அறிக்கைகளை முன்வைத்த வண்ணமுள்ளார். அவ்வாறு முன்வைத்த கருதுக்களில் ஒன்றே, தான் ஒருமுறை மாத்திரம்தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிவது என்பதாகும். என்றாலும் இறுதியாக இடம்பெற்ற உள்ளுராட்சி மன்ற தேர்தலின் போது முன்வைத்த கருத்துக்களை அவதானிக்கையில் இரண்டாம் முறையும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான அறிகுறிகளை காணமுடிகின்றது. இந்நிலையில் உள்ளுராட்சி தேர்தல் முடிவுகளை அவதானித்தால் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பொது ஜன பெரமுனவிற்கு வெற்றி வாய்ப்பு உள்ளதோடு சுதந்திர கட்சிக்கு 3ம் இடம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

எனவே தொடந்தும் ஜனாதிபதி பதவியை தக்க வைப்பதாக இருந்தால் ஐக்கிய தேசிய கட்சி அல்லது பொது ஜன பெரமுனவுடன் ஒன்றிணைய வேண்டும். ஆனால் தேசிய அரசாங்கத்தில் ரணில் மைத்திரி அணிகளுக்கிடையில் உள்ள முரண்பாட்டை அவதானிக்கையில் ஜனாதிபதி அவர்களுக்கு தொடர்ந்தும் ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவு கிடைக்காது என்பது புலனாகின்றது. இந்நிலையில் மாற்றுத்தெரிவு பொது ஜன பெரமுனதான்.

ஜன பெரமுன மற்றும் முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷா ஆகியோர்களை மேடைகளில் தூற்றியது மட்டுமன்றி இறுதி யுத்தத்தை தான் முடித்தாக சர்வதேசத்தில் பெருமை பேசிய ஜனாதிபதியுடன் மஹிந்த ராஜபக்ஷா அவர்கள் ஏன் ஒன்றினைந்தார்கள் எனில், பொது ஜன பெறுமுன மற்றும் முன்னால் ஆட்சியாளர்களை பொறுத்தவரை அவர்களும் பல மோசடி வழக்குகளுக்காக நீதி மன்றங்களுக்கு சென்ற வண்ணமுள்ளனர். இந்த போக்கை மாற்றி தமக்கு சுதந்திரம் தேவையென்றால் தமக்கு சார்பான ஆட்சி அவசியமாகும். இதனை எதிர்பார்த்த நிலையில் இதற்கு ஐக்கிய தேசிய கட்சி – சுதந்திர கட்சி இடையிலான முரண்பாடான நிலை அவர்களுக்கு வசந்தமாக அமைந்துவிட்டது.

இந்த அரசியல் தளம்பல் நிலையில் ஜனாதிபதியால் இன்னொரு அறிவிப்பு விடப்பட்டுள்ளது அதுதான் மீண்டும் ரணில் விக்ரமசிங்க அவர்கள் பிரதமரானால் தான் ஜனாதிபதிப் பதவியை ராஜினாமா செய்வதாகும். இவ்வாறு ஏற்பட்டு மீண்டும் ஜனாதிபதி தேர்தல் வந்தால் “மஹிந்த ராஜபக்ஷாவிற்காக தான் ஜனாதிபதி பதவியை துறந்தேன்” எனக் கூறி பொது ஜன பெரமுனவின் அனுதாபத்தை பெற்று மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் மைத்திரி பால சிறிசேன அவர்கள் போட்டியிட முடியும். இதற்கான பதிலை காலம் சொல்லும்.

இறுதியாக இன்று நாட்டில் ஏற்பட்டுள்ளது ஜனநாயக புரட்சி அல்ல பல குற்றவாளிகளை மறைப்பதற்கான புரட்சி. மேலும் இங்கு பிரச்சினை உள்ளது மதங்களுக்கு இடையில் அல்ல கட்சிகளுக்கிடையில். இது பொது மக்களுக்கான வசந்தப் புரட்சி அல்ல. அரசியல் தலைவர்களின் இருப்புக்கான புரட்சி. எனவே பொது மக்களான நாம் இதனை இனக்கண்ணாலும் கட்சிக் கண்ணாலும் பார்த்து அயலில் உள்ளவர்களுடன் முரண்பட்டு பயனில்லை.

Ibnuasad

அரசியல் அவதானிகளால் எதிர்வு கூறாத நிலையில் 25/10/2018ம் அன்று எதிர்பாரத விதமாக புதிய பிரதமாராக மஹிந்த ராஜபக்ஷா அவர்களை நியமித்துவிட்டு அன்றைய தினம் காலியில் மதத்தலங்களில் கட்டிட திறப்பு விழாவிற்கு சென்றிருந்த (முன்னால்) பிரதமர்…

அரசியல் அவதானிகளால் எதிர்வு கூறாத நிலையில் 25/10/2018ம் அன்று எதிர்பாரத விதமாக புதிய பிரதமாராக மஹிந்த ராஜபக்ஷா அவர்களை நியமித்துவிட்டு அன்றைய தினம் காலியில் மதத்தலங்களில் கட்டிட திறப்பு விழாவிற்கு சென்றிருந்த (முன்னால்) பிரதமர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *