நிரந்தரமாக்கிட முடியாது

  • 8

அந்தி மாலையில்
கடலோரம் அமர்ந்து
அழகிய ஒளிவண்ணம் தீட்டிய
வானத்தை பார்க்கிறேன்
அது எத்தனை அழகு!

இரவானால் அந்த அழகும்
இருண்டு விடும்
வரிசையாக வந்து
என் பாதம் நனைத்து செல்லும்
அலைகளிடம் என் உள்ளம்
பூரித்துப் போவதை
யார் அறிவர்
அவ் இன்பம்
சில கணங்கள் மட்டுமே!

பாதம் தொட்ட அலை
மறுகணம் தொலை தூரம்
நீண்டு சென்று விடும் போல்
வாழ்வில் எல்லாம் சில காலமே
இங்கு எதுவும் நிரந்தரமில்லை!
நிரந்தரமாக்கிடவும் முடியாது!

Noor Shahidha
SEUSL
Badulla

அந்தி மாலையில் கடலோரம் அமர்ந்து அழகிய ஒளிவண்ணம் தீட்டிய வானத்தை பார்க்கிறேன் அது எத்தனை அழகு! இரவானால் அந்த அழகும் இருண்டு விடும் வரிசையாக வந்து என் பாதம் நனைத்து செல்லும் அலைகளிடம் என்…

அந்தி மாலையில் கடலோரம் அமர்ந்து அழகிய ஒளிவண்ணம் தீட்டிய வானத்தை பார்க்கிறேன் அது எத்தனை அழகு! இரவானால் அந்த அழகும் இருண்டு விடும் வரிசையாக வந்து என் பாதம் நனைத்து செல்லும் அலைகளிடம் என்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *