அரசியல்வாதிகளை மாற்றுவதற்கான களம்

  • 14

இலங்கையின் அரசியல் போக்கை பார்க்கையில் அழுவதா? சிரிப்பதா? என்று புரிவதில்லை. இலங்கை ஜனாதிபதி தனக்குள்ள நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி மக்கள் நிம்மதியாக வாழ்வதற்குரிய சூழலை உருவாக்க வேண்டிய தருணத்தில் தனது இருப்பை உறுதி செய்து கொள்ள நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி உள்ளார்.

கடந்த இரு வார அரசியலின் சுருக்கம் இதுதான் 62 இலட்சம் மக்களின் எதிர்ப்பை பெற்ற ஒருவரை 62 இலட்சம் மக்களின் ஆதரவை பெற்றவர் பிரதமாராக நியமித்தாகும். இதற்கு எதிராக பாதிக்கப்பட்ட பிரதமர் தனக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளதை நிரூபிக்க முற்பட்ட சந்தர்பத்தில், கருத்துக்கணிப்புகளின் அடிப்படையில் குறிப்பாக பாதிக்கப்பட்ட பிரதமருக்கு வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு உள்ளபோது ஜனாதிபதி 19ம் அரசியல் சட்ட திருத்தத்திற்கு முரணான முறையில் பாராளுமன்றத்தை கலைத்துவிட்டார்.

இந்நிலையில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் சுததிரகட்சி, பொதுஜன பெரமுன என்பன இணைத்து போட்டியிட உள்ளன இவர்களின் தெரிவு மஹிந்த ராஜபக்ஷாவாகும். ஐக்கிய தேசிய கட்சியை பொறுத்தவரை அடுத்த பிரதமாராக சஜித் பிரேமதாசா ஆட்சியில் அமர வேண்டும் என்று பொது மக்கள் விரும்பினாலும் தலைமை இதுபற்றிய உத்தியோகபூர்வ அறிக்கைகளை வெளியிடவில்லை.

கலைக்கப்பட்ட நல்லாட்சியை பொறுத்தவரை பொதுமக்களுக்கு அன்று வழங்கிய பல வாக்குறுதிகளை நிறைவேற்றாமலே கலைந்துவிட்டது. மேலும் இலங்கை பாராளுமன்றத்தை பொறுத்தவரை அன்றிலிருந்து இன்றுவரை சுதந்திர கட்சி, தேசிய கட்சி என்பன மாறி மாறி ஆளும்கட்சி எதிர்கட்சி ஆசனத்தில் அமர்ந்து தம்மை நிலைநிறுத்திக்கொள்ள இனக்கலவரங்களை திட்டமிட்ட முறையில் உருவாக்கி கொண்டு ஆட்சி செய்து வந்தனர். என்றாலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அதிரடி நடவடிக்கையால் பாராளுமன்றத்திற்கு 196  உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு தமக்கு இன்னொரு வாய்ப்புகிடைத்துள்ளது.

இலங்கையில் தேர்தல் வரலாற்றை அவதானிக்கையில் உள்ளுராட்சி மன்றத்தேர்தல் முதல் ஜனாதிபதி தேர்தல்வரை வாக்குறுதிகளை வழங்கி வாக்குகளை பெற்று வாக்குறுதிகளை நிறைவேற்றாமலே மீண்டும் வாக்குகளை பெற வருகின்ற நிலைதான் உள்ளது. இவ்வாறான போக்கில் நாம்தான் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

அதற்கான வாய்ப்புபொன்று தற்போது கிடைத்துள்ளது. அதனை நமக்கு இரண்டு விதங்களில் பயன்படுத்த முடியும். முதலாவது புதிதாக கட்சியொன்றை தெரிவு செய்ய வேண்டும் அல்லது இருக்கின்ற கட்சியில் புதிதாக உறுப்பினர்களை தெரிவு செய்ய வேண்டும்.

அதாவது நாம் இந்த தேர்தலில் அனைவரும் ஒன்றினைந்து புதிதாக ஓர் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் அல்லது நீங்கள் வாக்களிக்க தீர்மானித்துள்ள கட்சிகளில் உள்ள புதிதாக போட்டியிடுகின்ற நற்பண்புள்ள இதுவரை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படாத ஒருவருக்கு உங்களின் வாக்குகளை வழங்க வேண்டும்.

பழையவர்களை மீண்டும் பாராளுமன்றத்திற்கு அனுப்பி அவர்கள் விடும் தவறுகளை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி காலத்தை கடத்தாமல் புதியவர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்ப முயற்சிப்போம். சிந்திப்போம் மாற்றங்களை தம்மிலிருந்து ஆரம்பிக்க முயற்சிப்போம்.

Ibnuasad

இலங்கையின் அரசியல் போக்கை பார்க்கையில் அழுவதா? சிரிப்பதா? என்று புரிவதில்லை. இலங்கை ஜனாதிபதி தனக்குள்ள நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி மக்கள் நிம்மதியாக வாழ்வதற்குரிய சூழலை உருவாக்க வேண்டிய தருணத்தில் தனது இருப்பை உறுதி செய்து…

இலங்கையின் அரசியல் போக்கை பார்க்கையில் அழுவதா? சிரிப்பதா? என்று புரிவதில்லை. இலங்கை ஜனாதிபதி தனக்குள்ள நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி மக்கள் நிம்மதியாக வாழ்வதற்குரிய சூழலை உருவாக்க வேண்டிய தருணத்தில் தனது இருப்பை உறுதி செய்து…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *