ஊடகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமா ACJU

  • 63

ACJU வின் தலைவவர் ஜனாதிபதி ஆனைக்குழுவிற்கு வட்டிலாப்பம் கொண்டு சென்றமை சம்பந்தமாக இனவாத மீடியாக்கள் பரப்பான செய்திகளை வெளியிட்டது.

இது தொடர்பாக நாம் ஆராயும் போது அதாவது ஒரு சாதாரண பொலிஸ் அதிகாரியை மேற்கோல் காட்டியே இந்த செய்தியை மீடியாக்கள் வெளியிட்டது.

உண்மையில் அவ்வாறான ஒரு சம்பவம் நடந்து அது ஆணைக்குழு உறுப்பினர்களால் திருப்பி அனுப்பப்பட்டிருந்தால், அந்த விடயத்தில் ஆணைக்குழுவின் அறிக்கைப்படியே செய்தி வெளியிடப்பட்டிருக்க வேண்டும்.

அதுவும் இன்றி, இவ்விடயம் அங்குள்ள பாதுகாப்பு அதிகாரிகளினால் கண்டுபிடிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டிருந்தால் அதற்கு பொறுப்பான உயர் பாதுகாப்பு உதிகாரியின் அறிக்கைப்படியான செய்தியை தலைமை பாதுகாப்பு அதிகாரியே பொறுப்படன் வெளியிட வைண்டும்.

இவை அத்தனை நெறிமுறைகளும் பின் பற்றப்படாமல் சாதாரன பொலிஸ் அதிகாரியை மேற்கோள் காட்டி வெளியிட்ட செய்தி சம்பந்தமாக அந்த பொலிஸ் அதிகாரிக்கு எதிராக முறைப்பாடு செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒரு பொறுப்பான ஒரு சமூகத்தின் தலைமைத்துவ நிறுவனம் ஒன்றை சேறு பூசும் வகையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை தொடர்ந்தும் அனுமதிப்பதா?

இவ்வாறு மௌனம் காப்பதின் அர்த்தம் என்ன.

வட்டிலாப்பம் கொண்டு சென்றது உண்மையா? அவ்வாறாயின் வழமை போன்று மக்கள் மறக்கும் வரை பேசாமல் இருப்பதா?

அவ்வாறாயின் வட்டிலாப்பம் கொண்டு சென்றது உண்மை என்பதை ஏற்றுக் வாய்மூடி இருப்பதா? இப்படி வாய்மூடி இருந்தால் அடுத்துவரும் நாட்களில் ஞான ஸாரவின் அட்காசத்தையும், முஸ்லிம் சமூகத்தின் மீது எரியப்படும் சொல் அம்புகளையும் எதிர் பாருங்கள்.

கடந்த வெள்ளிக்கிழமை ACJU வில் நடந்த கூட்டத்தில் இதை விசாரிக்க குழு நியமிக்கப்பட்டது.

முடிவு வெளிவருமா? இல்லையேல் விசாரனைக் குழுவிற்கு தொலைபேசி எடுதுச் சென்ற விடயம் போல் மறக்கடிக்கப்படுமா?

தொடர்ந்தும் முஸ்லிம் சமூகத்திற்கு இவர்களால் அவமானமா ?

மகள் பாத்திமா திருடினாலும் கையை வெட்டுவேன் என்ற ஹதீஸ் ஒரு சாராருக்கு மட்டும் செல்லப்பட்டதா?

பொருத்திருந்து பார்போம்.

பேருவளை ஹில்மி

ACJU வின் தலைவவர் ஜனாதிபதி ஆனைக்குழுவிற்கு வட்டிலாப்பம் கொண்டு சென்றமை சம்பந்தமாக இனவாத மீடியாக்கள் பரப்பான செய்திகளை வெளியிட்டது. இது தொடர்பாக நாம் ஆராயும் போது அதாவது ஒரு சாதாரண பொலிஸ் அதிகாரியை மேற்கோல்…

ACJU வின் தலைவவர் ஜனாதிபதி ஆனைக்குழுவிற்கு வட்டிலாப்பம் கொண்டு சென்றமை சம்பந்தமாக இனவாத மீடியாக்கள் பரப்பான செய்திகளை வெளியிட்டது. இது தொடர்பாக நாம் ஆராயும் போது அதாவது ஒரு சாதாரண பொலிஸ் அதிகாரியை மேற்கோல்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *