வாழ்க்கைப் பாடம்

  • 14

கண்ணீரில் ஆராதனை தினம்.
கவலைகளால் ஏங்குதோ மனம்.
நிமிர்ந்திடுவாயே இக்கணம்.
நீங்கிடுமே இந்தப் பொல்லாத தருணம்.

துன்பங்கள் தொடர்கையில்
துவண்டு போதல் முறையல்ல.
எதிர் நீச்சல் நீ போட்டால்
எதிர்காலம் புதிர் அல்ல.

இனித்தால் வாழ்வதும்
வெறுத்தால் சாவதுமா?
வாழ்க்கை – இல்லை,
வாழ்க்கை உனது உரிமை
வசந்தமாக்குவது உனது கடமை.

இறந்தகாலம் பாடம் புகட்ட வேண்டும்.
இருக்கும் நாளின் மேன்மை உணர வேண்டும்.
இனியும் வீணாய் அழுதல் முடிய வேண்டும்.
இதய தேசம் அழகாய் விடிய வேண்டும்.

தலை கவிழ்ந்தால் அதுவே விஷமாகும்.
தலை நிமிர்ந்தால் வாழ்க்கை வசமாகும்.
நிலை உணர்ந்தால் செழுமை உருவாகும்.
பிழை உணர்ந்தால் இளமை நலமாகும்.

Farhana Abdullah.
Maggona.
மக்கொனையூராள்

கண்ணீரில் ஆராதனை தினம். கவலைகளால் ஏங்குதோ மனம். நிமிர்ந்திடுவாயே இக்கணம். நீங்கிடுமே இந்தப் பொல்லாத தருணம். துன்பங்கள் தொடர்கையில் துவண்டு போதல் முறையல்ல. எதிர் நீச்சல் நீ போட்டால் எதிர்காலம் புதிர் அல்ல. இனித்தால்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *