மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி?

  • 39

இன்று மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று நாம் அனைவரும் விரும்புகிறோம். மகிழ்ச்சி எங்கிருந்து, எப்படி வருகிறது. அனைவராலும் கேட்கப்படும் ஒரு கேள்வி. மகிழ்ச்சி என்பது மனம் சம்பந்தப்பட்டது. இன்று பலர் மகிழ்ச்சியாக இருப்பது போல் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் மகிழ்ச்சி அவர்களிடத்தில் இல்லை. மகிழ்ச்சிக்காக அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

சிலர் பணம் இருந்தால் மகிழ்ச்சி வரும் என்று நினைப்பார்கள், சிலர் உடைமைகள், வீடு மற்றும் வாகனம் போன்ற விடயங்கள் கிடைத்தால் மகிழ்ச்சி என்று நினைப்பர். ஆனால் அது உண்மை அன்று. மகிழ்ச்சி என்பது வேறு.

உளவியல் ஆய்வின் படி, ஒருவரின் மனதின் மகிழ்ச்சியை அவரை சுற்றியிருக்கும் விடயங்களே முடிவு செய்கின்றன.

எனவே, மிகவும் மகிழ்ச்சியான நண்பர்கள், உங்களுக்கு ஊக்கமளிக்கும் உறவுகளுடன் நேரத்தை செலவிடுங்கள், இயற்கையுடன் பிணைந்திருங்கள், இவ்வாறு ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட விருப்பங்கள், ஆசைகள் நிறைவேறும்போது அவை மகிழ்ச்சியைத் தரும். நமக்கு எது மகிழ்ச்சி கொடுக்கும் என்பது நமக்கு மட்டுமே தெரியும்.

ஆனால் மகிழ்ச்சி கொடுக்கும் எதையும் பணத்தால் வாங்க முடியாது. இதுவே உண்மை இன்றைய காலத்தில், நிறைய பணம் இருந்தால் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழலாம் எனப் பலரும் நினைக்கிறார்கள்.

இன்றைய வேகமான உலகில், உண்மையில் மகிழ்ச்சி கொடுப்பது எது என்று தெரியாமல் ஓடிக்கொண்டே இருக்கிறோம்.

ஒரு நல்ல நிலையான வேலையில் இருப்பது அவசியம்தான். வாழ்க்கையை வழிநடாத்த பணம் தேவைதான். இல்லை என நான் மறுக்கவில்லை.

அதே நேரத்தில் உங்களுக்கும் குடும்பத்திற்கும் நேரத்தை ஒதுக்க மறந்துவிடாதீர்கள்.

உங்களை சுற்றியிருக்கும் பெற்றோர்கள் மனைவி, நண்பர்கள், குழந்தைகள் என அனைவரையும் கொண்டாடுங்கள். மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது.

உங்களுக்கு விருப்பமான விடயங்களை செய்ய நேரத்தை ஒதுக்குங்கள். பெரிய தொழில்கள் செய்பவர்கள் கூட அவர்களுக்குப் பிடித்தவற்றைச் செய்யமுடியாமல் தவிக்கின்றனர். பணம் இருந்தும் எந்தப்பயனும் இல்லை.

உண்மையில் மன நிம்மதியோடு மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வது மிகவும் எளிது.

நேரத்தை ஒதுக்கி, பிடித்தவற்றைச் செய்ய முயற்சி செய்யுங்கள். கவலையின்றி சந்தோஷமாக வாழலாம். அதேபோல் வாழ்க்கையில் பிரச்சினைகளுக்கு முடிவில்லை. பிரச்சினைகள் வரும் பின்னர் தீர்வுகளும் பிறக்கும். அதனால் பிரச்சினைகளை நினைத்துச் சோர்ந்து போக வேண்டியதில்லை.

எப்போதும், எந்த இடத்திலும் பிரச்சினைகளே இருக்கக்கூடாது என நினைக்காதீர்கள். எந்த பிரச்சினை வந்தாலும், அதனை தாங்கும் வலிமை வளரவேண்டும் என நினையுங்கள். நீங்கள் பிரச்சினைகளை வெற்றிகரமாக எதிர்கொள்ள, எதிர்கொள்ள உங்கள் தன்னம்பிக்கை தானாக அதிகரிக்கும்.

சொகுசான வாழ்க்கையை எந்த வயதிலையும் வாழலாம்.ஆனால் ஆசைப்படும் வாழ்க்கையை அந்தந்த வயதில் தான் வாழ முடியும்.

வில்லியம் ஆஸியர் கூறினார்: ‘மகிழ்ச்சிக்கான முக்கிய காரணம் அன்றைய தினத்தை சிறப்பாக வாழ்தல்’ என்றார்.

வாழ்வது ஒரு தடவைதான் அதை மகிழ்ச்சியோடு வாழலாமே!

Faslan Hashim
Islahiyya Arabic College ®
South Eastern University Of Sri Lanka
BA ®️

இன்று மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று நாம் அனைவரும் விரும்புகிறோம். மகிழ்ச்சி எங்கிருந்து, எப்படி வருகிறது. அனைவராலும் கேட்கப்படும் ஒரு கேள்வி. மகிழ்ச்சி என்பது மனம் சம்பந்தப்பட்டது. இன்று பலர் மகிழ்ச்சியாக இருப்பது போல்…

இன்று மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று நாம் அனைவரும் விரும்புகிறோம். மகிழ்ச்சி எங்கிருந்து, எப்படி வருகிறது. அனைவராலும் கேட்கப்படும் ஒரு கேள்வி. மகிழ்ச்சி என்பது மனம் சம்பந்தப்பட்டது. இன்று பலர் மகிழ்ச்சியாக இருப்பது போல்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *