துன்பமா??? துயரமா????

  • 24

ஆம்

மீண்டும் ஒரு ஆக்கத்தில் உங்களை சந்திப்பதை இட்டு மகிழ்ச்சி அடைகிறேன்.

ஆய்வுகள் கூறும் போது எட்டு மணிநேரம் தூங்க வேண்டுமாம். நிச்சயமாக நாம் தூங்கத்தான் வேண்டும். ஆனால் மனதில் பாரத்துடன் அல்ல. மனநிம்மதி உடன் தூங்க வேண்டும்.

தூக்கத்தை தொலைத்து துக்கத்துடன் வாழுபவர் பலர். தூக்கமின்றி தவிப்பவர் பலர். கும்பகர்ணன் போன்று தூங்குபவர் பலர். தூக்கமும் ஓர் வரம் தான்.

ஓர் மனிதனால் தூங்காமல் இருக்க முடியுமா? என ஆய்வு நடாத்தாப்பட்டது. பல நாள் தொடர்ந்த இவ்வாய்வில் வந்த முடிவு தான் மனிதனுக்கு தூங்காமல் இருக்க முடியவில்லை என்பதாகும்.

தூக்கமின்மையால் மனநோய்கள் கூட எம்மை தாக்குகின்றன. தூக்கம் ஓர் மறதி தான். அனைத்து பிரச்சினைகளையும், துன்பங்களையும் விட்டு எம்மை மறக்கடிக்கச் செய்வதாக தூக்கம் காணப்படுகிறது.

அது என்ன துக்கம்? தூக்கம்? ஆம் வேறுபாடு உள்ளது. மனதில் பிரச்சினையா? அது துக்கம்.
மன நிறைவா? அது தூக்கம்.

வீட்டுக்கு வீடு வாசல் படி போல தான் எம் பிரச்சினைகளும். யாருக்குத் தான் பிரச்சினை இல்லை. பிரச்சினை இல்லா வாழ்வேயில்லை. துன்பம் ஒன்றும் மனிதனுக்கு புதிதில்லை.

அழுகையோடு பிறந்தவன் தான் மனிதன். அழ வேண்டும் என தோன்றினால் அழுது விட வேண்டும். அது ஆனந்தக் கண்ணீராய் இருந்தால் என்ன? சோகக் கண்ணீராய் இருந்தால் என்ன?

பிரச்சினைகள் எம்மை தாக்கும் போது அதை எதிர்த்து போராட வேண்டும். சவால்களை முறியடிக்க வேண்டும். வெற்றிவாகை சூட வேண்டும்.

மன பாரங்களை குறைக்க இறை தியானங்களில் ஈடுபட வேண்டும். எம்மை படைத்தவன் எமக்கு உதவி புரியாமலா இருப்பான்? நிச்சயம் அவன் உதவுவான்.

வீட்டில் பிரச்சினை, நட்பில் பிரச்சினை, தொழிலில் பிரச்சினை, ஏகப்பட்ட பிரச்சினைகளுடனே மனித வாழ்வு கடக்கிறது. முற்கள் நிறைந்த பாதை தான் எம் வாழ்வு.

மனதுக்குள்ளே துன்பங்களை பூட்டி வைக்காமல் எம் உண்மையான உறவுகளிடம் எம் இன்பதுன்பங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும். மனது விட்டு கதைக்க வேண்டும். மனதுக்குள்ளே பூட்டி வைத்தால் மனச்சுமை தான் கூடும்.

தப்பு செய்யாத மனிதன் இல்லை. நாம் எம் தப்பை உணர்ந்து மன்னிப்பு கேட்க வேண்டும். ஓர் மன்னிப்பால் அறுந்த போன உறவுகள் எல்லாம் ஒன்றாய் சேரும். மன்னிப்பை விட ஏதும் பெரிய தண்டனை இல்லை.

காய்ச்சலும் தலையிடியும் தனக்கு வந்தால் தான் அதன் வேதனை தெரியும் என்பார்கள். பிரச்சினைகள் ஏற்படும் போது தான் அதன் வலி புரிகிறது. எம் வலியை நாம் அனுபவிக்க வேண்டும். நாமே தான் அதற்கு மருந்தும் கட்ட வேண்டும்.

எம்மை விட பெரும் துன்பங்களுடன் உள்ளவர்களுடன், எம்மை ஒப்பிட்டால் எம் பிரச்சினை சிறிதாக தோன்றும். நாம் எம்மை பலப்படுத்தி பிறருக்கு ஆறுதலாய் இருக்க வேண்டும். பிறருக்கு உதவும் போது கிடைக்கும் திருப்தி ஆத்மதிருப்தி ஆகும்.

மனதை அழுத்தும் துன்பங்கள் வரும் போது உடைந்து போக வேண்டாம். அதை எல்லாம் கடந்து விட்டு போய்க்கொண்டே இருக்க வேண்டும். எவரஸ்ட் மலைக்கே எல்லை இருக்கும் போது எம் பிரச்சினைகளுக்கும் எல்லை இருக்காமலா போகும்? ஆம் உச்சியை தொடுவோம். வாழ்வில் வெற்றிக்கொடி நட்டுவோம்.

மீண்டும் கூறுகிறேன். பிரச்சினை துரத்துகிறதா? அதை விட வேகமாய் நாம் ஓடுவோம். பிரச்சினைகளை மனதில் வைத்து துக்கப்படாமல், சிறிது நேரம் தூங்கி எழுவோம். பிரச்சினைகளை சிறிது நேரமேனும் மறப்போம். நிம்மதியாய் தூங்கி எழும்பி, பிரச்சினைகளை வென்றிடுவோம்.

M.H.F Atheeba
SEUSL,
NISD
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்
Rambuk ela , kandy

ஆம் மீண்டும் ஒரு ஆக்கத்தில் உங்களை சந்திப்பதை இட்டு மகிழ்ச்சி அடைகிறேன். ஆய்வுகள் கூறும் போது எட்டு மணிநேரம் தூங்க வேண்டுமாம். நிச்சயமாக நாம் தூங்கத்தான் வேண்டும். ஆனால் மனதில் பாரத்துடன் அல்ல. மனநிம்மதி…

ஆம் மீண்டும் ஒரு ஆக்கத்தில் உங்களை சந்திப்பதை இட்டு மகிழ்ச்சி அடைகிறேன். ஆய்வுகள் கூறும் போது எட்டு மணிநேரம் தூங்க வேண்டுமாம். நிச்சயமாக நாம் தூங்கத்தான் வேண்டும். ஆனால் மனதில் பாரத்துடன் அல்ல. மனநிம்மதி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *