இவனுக்கு ஏத்த தகுதி அந்த புள்ளைக்கு இல்லயாம்

  • 16

அவளோடு சில நொடிகள்
தொடர் :-07

“கியாஸ் இங்க வா வந்து இதெல்லாம் பாரு. நீ தான் ட்ரெஸ்ஸெல்லாம் எங்களயே செலக்ட் பன்ன சொல்லிட்டியெ உனக்கு பிடிச்சிருக்கோ தெரியா “

மண்டபத்தை குறுக்கறுத்துச் சென்றவனை தடுத்து நிப்பாட்டியது ஜெஸீறாவின் குரல்.

“ம்ம்ம்” தலையசைத்துக் கொண்டே தாயின் அருகில் வந்தமர்ந்தான் கியாஸ். செல்லமாய் மகன் தலையை தடாவிய படி

“உனக்கு புடிச்ச கலர்லதான் எல்லாம் எடுத்திருக்கம் ஒரு தடவ நீயும் பாத்து சொல்லிட்டியன்டா திருப்தியா இருக்கும். இல்லன்னா வேறது மாத்திக்கலாம். இதான் பசியாக்கு எடுத்தது நல்லாருக்க?” என்று கேட்டாள் தாய்

பரப்பிக் கிடந்த ஆடைகளை ஒரே பார்வையில் முழுங்கிக் கொண்டு,

“ம்ம் எல்லாம் நல்லாருக்கு இதையே எடுத்துக்குவம்.” என்று கூறியது தான் தாமதம் அவன் பாட்டிற்கு எழுந்த நகர ஆரம்பித்தான்.

“டேய் எங்கடா போறா ஒன்னோட நிறய பேசனும். கொஞ்சம் இங்க வந்து இரு.”

மீண்டும் அவனை தடுத்து நிறுத்தியது ஜெஸீறாவின் குரல். சாதுவாக அவளருகில் வந்து அமர்ந்து கொண்டான்

“சொல்லு என்ன பேசனும்?”

“ம்ம்ம். உனக்கு உண்மையாவே பசியாவ புடிச்சிருக்கா புடிக்கல்லயா? “

ஜெஸீறாவின் வார்த்தைகளைக் தனக்குள் உள்வாங்கிக் கொண்டு, தனது தாயின் முகத்தை நிமிர்ந்து பார்த்தவன் தன்னுடைய அத்தனை ஆதங்கங்களையும் அடக்கிக் கொண்டு

“ம்ம்ம் புடிச்சிருக்கு ஏன் திடிர்னு இப்புடி ஒரு கேள்வி.” ஜெஸீறாவைப் பார்த்தான்.

இப்போதெல்லாம் அவனுடைய புன்னகையில் பேச்சில் நடைமுறையில் எவ்வளவோ மாற்றங்கள் நிழலாடியது. முன்னரெல்லாம் அந்த வீட்டின் கலகலப்பு அவன் தான், அவனுடைய புன்னகை நிறைந்த முகம், அவன் ஓயாமல் கதையளர்ந்து கொண்டிருப்பவன் வார்த்தைகளுக்கு தாழ்ப்பாள் இட்டிருந்தான்.
அவனுடைய குறும்புத்தனங்களுக்கு எல்லாம் ஓய்வு கொடுத்திருந்தான்.

யாரும் இதை உணராது அவன் உள்ளத்தோடு போரிட்டுக் கொண்டிருந்தார்கள். அவனோ தன் வேலைப்பளுவில் பழியைப் போட்டு ஒரு புன்னகையில் யாவரையும் கடந்து கொண்டே இருந்தான்.

“அப்ப ஏன்டா ஒரு மாதியா திரியிரா வேலைல எதாவது பிரச்சினயா.”

“ச்சே அதெல்லாம் இல்ல ப்ரண்ட் ஒருத்தன் அவன்ட பிரச்சினய கொண்டு என்ட மைன்ட அப்செட்டாக்கிட்டான்”

“அப்புடி என்ன பிரச்சின மகன்.”

“அவனுக்கு அவன்ட பெமிலில யாரயோ கல்யாணம் பேசிருக்காங்கலாம். அவனுக்கு பொண்ண பிடிக்கலயாம்.

“ஏனாம்?”

“இவனுக்கு ஏத்த தகுதி அந்த புள்ளைக்கு இல்லயாம். அந்த புள்ள ஓஎல் வரதான் படிச்சிருக்காம். அழகும் இல்லயாம் அதால வாணாண்டு ஒத்த புடில நிக்கான்.”

“என்னடா இது பேரன்ஸ் தகுதி பாக்காம இருக்கக்கோல அவனுக்கு என்னடா தகுதிட கத. வாழ்றதுக்கு அழகும் படிப்பும் தானா தேவ நல்ல குணமும் ஒழுக்கமும் இருந்தாலே போதுமெ இப்புடியா பட்டவனுகளுக்குத்தான் கண்டமாதி திரியிறவளும் வந்து வாய்க்கிற.”

“எல்லாருக்கும் தகுதி பாக்காத பேரன்ஸ் கிடைக்க மாட்டாங்க கிடச்சாலும் அங்க புள்ளைகள் தகுதி பாக்க ஆரம்பிச்சிர்ராங்க. இதான் ராத்தா உலகம்.”

“ம்ம்ஹ்ஹ் என்னமோ நீ ஏன் அப்செட்டாவுறா.”

“எவளவு சொல்லியும் தகுதி தகுதின்டு அலைறவங்களுக்கு என்ன சொல்லி கேக்க போறாங்க.”

அவன் உண்மையை எதார்த்தமாக சொல்லியிருந்தாலும் மறைமுகமாய் அவர்களுடைய பேச்சு அவனுடைய தாய்க்கு குத்திக்காட்டுவது போல் இருந்தது.

“ஒவ்வொரு புள்ளயலும் ஒவ்வொரு மாதிதான்.” என்றாள் அவனுடைய தாய்.

“ம்ம்ஹ்ஹ் உங்கட புள்ளய போலயே எல்லாரும் இருப்பாங்களாம்மா?” கல்லங்கபடமில்லாத வார்த்தைளைக் கொண்டு சிரித்தாள் ஜெஸீறா.

கியாஸ் தன் தாய் தந்தையர் மீது சிறு பராயத்தில் இருந்து எல்லை போட முடியாத அளவு அன்பையும் மரியாதையையும் வைத்திருக்கின்றான். தன் தாய் தந்தையருடைய சந்தோஷத்திலே தான் நிம்மதியை காண்பதாய் உணர்ந்திருந்தான். அவர்களுடைய சந்தோஷத்துக்காக எது வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைப்பான். அந்த நினைப்பே இன்று அவனுடைய நிம்மதியை சிதைத்து விடும் ஆயுதமாக மாறி நின்றது.

அவன் எந்த பெற்றோருக்கும் கிடைக்காத அரும்பெரும் பொக்கிஷம் தான். அவனை தன் வாழ்க்கைத் துணையாய் பெற்றுக் கொள்ளப் போபவளும் கொடுத்து வைத்தவள் தான் என அந்த குடும்பத்தில் பலரும் பேசிக் கொள்வார்கள்.

“சரி எனக்கு வேல கிடக்கு வாரன்.” மறுபடியும் நகர ஆரம்பித்தான் கியாஸ்.

“எங்க போறா கியாஸ். மச்சான் காலைல இருந்து உன்ன கேட்டுகிட்டே இருந்தாரு”

” காலைல இருந்தா என்னயாம்?”

“தெரியா உனக்கிட்ட என்னமோ பேசனும்னு சொன்னாரு எதுக்கும் நீ அவர கொன்டக்ட் பன்னி பாரு”

“ஆ சரி” என்றவாறு செல்போனை இயக்கினான் அவனுக்கு பின் திசையிலிருந்து போன் சினுங்கியது. திரும்பிப் பார்த்தான் அவர்கள் மூவரின் பார்வையும் ஸிராஜின் பக்கம் திரும்பியது.

“இந்தா அவரே வந்துட்டாரு”

“என்ன எல்லாரும் என்ன பத்தியா பேசிட்டு இருந்திங்க”

ஸிராஜ் தன் வளமையான புன் முறுவலோடு அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தான்.

“ஓம் மச்சான் எனக்கிட்ட எதோ பேசனும்னு சொன்னிங்களாம் அத பத்தி தான் ஜெஸீறா சொல்லிகிட்டு இருந்தா”

“ஆஹ் அதா உன்ட கல்யாணத்த பத்திதான். வா சொல்றன்”

கியாஸினது தோள் மீது கையை போட்டு அவனை வேறு திசை நோக்கி நகர்த்தினான் ஸிராஜ்.

“கல்யாணத்த பத்தி அப்புடி என்ன பேச போறாரோ”

“சும்மா எதாவது விளாட்டுத்தனமா பேசிக்குவாங்க. வா நாம போய் கிடக்குற வேளயலாம் பாப்பம்”

என்று கூறிக் கொண்டே தன் வேளைகளின் பால் மீண்டாள் தாய்

“கியாஸ் நான் பசியாவ பத்தி நல்லா விசாரிச்சிட்டன். இதுவரைக்கும் அவள பத்தி ஒரு ரோங்கான தகவலும் கிடைக்கல்ல, எல்லாரும் நல்ல விதமாதான் சொல்றாங்க. ஐ திங் இவ உனக்கு பொருத்தமானவளா இருப்பாள்.”

என்று தான் சேகரித்த தகவலை கியாஸிடம் கொட்டித் தீர்த்தான் ஸிராஜ்.

“மச்சான். உம்மா வாப்பாட முடிவுல அவ தான் அவங்களுக்கு மருமகள்ன்டதுக்கு பிறகு எதுக்கு உங்கட டைம்ம வேஸ்ட் பன்றிங்க? விடுங்க மச்சான் அவ பொருத்தமானவளா இருந்தாலும் இல்லாட்டிலும் அவ எங்க உம்மாக்கும் வாப்பாக்கும் நல்ல மருமகளா இருப்பா அவ்ளவுதான்”

சிரித்துக் கொண்டே வெளியாக்கிய அவன் வார்த்தையின் ஆழம் அறியாதவனாய் ஸிராஜும் அவனை சீன்டிக் கொண்டே கதையளர்ந்தான்.


மறுமுனையில்,

“நம்ம பெமிலில ஒருத்தரையும் மிஸ் பன்னாம எல்லாரையும் நேர்ல போய் கல்யாணத்துக்கு சொல்லிட்டிங்கானம்மா?”

“ஓ மகன் மாமியாக்கல தவிர எல்லாரையும் சொல்லிட்டம்”

“ஏம்மா மாமியாக்கல மட்டும் மிச்சம் வெச்சிங்க அங்கயும் போய் சொல்லிருக்கலாமம்மா.”

“என்ன முனிர் இப்புடி கேக்கா. நாங்க அங்க போக மாமி முகத்துல எதாவது பேசி வெச்சிட்டாங்கண்டா உங்க வாப்பா தாங்கிக்க மாட்டாரு”

“இல்லம்மா சொல்ல வேண்டியது நம்மட கடம சொல்லித்தாம்மா ஆகனும் இல்லன்னா நாளைக்கு அவங்கள கழிச்சுட்டுடம்னு இதே ஒரு பெரிய குறையா வந்து நிக்கும். நாளைக்கே வாப்பாவ கூட்டிட்டு போய் மாமிட்ட சொல்லிட்டு வாங்கம்மா “

“அதுவும் சரி தான். வாப்பா வந்தவொன நான் பேசி கூட்டிட்டு போறன் மகன் “

“ம்ம்ம்.. சரிம்மா, பசியாவ எங்க காணல்ல?”

“அவ மபாஸாவோட சனாட்ட போயிருக்கா அவங்க உம்மாக்கு வருத்தம் உரமா இருக்காம்.”

“தனியயா போயிருக்காங்க?”

“அவங்க எப்பயாவது தனிய போயிக்காங்களா. மபாஸாட உம்மாவ கூட்டிகிட்டு போயிருக்காங்க.”

“ஆஹ் நீங்களும் இங்க இருக்கிங்க தனிய பெய்தாங்களோன்டு நினச்சிட்டன்.”

“ஆ சொல்ல மறந்துட்டன் மகன். வாப்பா சொன்ன அந்த கோக்கிய பாத்து அட்வான்ஸ் காஸ குடுத்துட்டு வரயாம்னு”

“ம்ம் சரிம்மா. இப்பயே பொய்ட்டு வாரன்”

“ஆஹ்.” அவ்விடத்தில் இருந்து தனது தாய் நினைவு படுத்திய வேலைக்காக எழுந்து நகர்ந்தான்.

தொடரும்
ஏரூர் நிலாத்தோழி

அவளோடு சில நொடிகள் தொடர் :-07 “கியாஸ் இங்க வா வந்து இதெல்லாம் பாரு. நீ தான் ட்ரெஸ்ஸெல்லாம் எங்களயே செலக்ட் பன்ன சொல்லிட்டியெ உனக்கு பிடிச்சிருக்கோ தெரியா “ மண்டபத்தை குறுக்கறுத்துச் சென்றவனை…

அவளோடு சில நொடிகள் தொடர் :-07 “கியாஸ் இங்க வா வந்து இதெல்லாம் பாரு. நீ தான் ட்ரெஸ்ஸெல்லாம் எங்களயே செலக்ட் பன்ன சொல்லிட்டியெ உனக்கு பிடிச்சிருக்கோ தெரியா “ மண்டபத்தை குறுக்கறுத்துச் சென்றவனை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *