தேடுங்கள் காணவில்லை

  • 11

தேடுங்கள்!
தேடுங்கள் காணவில்லை
இங்குதான்!
இதோ! இந்த இடத்தில்தான்
எனக்கு நேரும்
என்தலைக்கு மேலுமாகத்தான் இருந்தது
தேடுங்கள் காணவில்லை
எங்கே அந்த சூரியன்?
தேடுங்கள் காணவில்லை

ஏதோ எரிகின்ற வாசனை வருகிறது
சூரியன்தான் எரிகிறது போல
எரிகின்ற சூரியனின் கரும்புகைதான்
இருளென்ற பெயர்சூடி பரவுகிறதோ?
எரிகையில் தெறிக்கின்ற தீப்பொறிகள்
வின்மீன்களென வானில்
ஒளிர்கிறதோ?
தேடுங்கள் காணவில்லை
எங்கே அந்த சூரியன்?
தேடுங்கள் காணவில்லை

தன்பணியை செய்வதற்கு
வெண்ணிலவை நிறுத்தி விட்டு
சுமையெல்லாம் இறக்கிவிட்டு
தொலைந்து போன அது எங்கே?
பகலெல்லாம் ஒளிர்வூட்டி
உலகத்தை அலங்கரித்த
படுபாவி சூரியனை
எங்கே ஓய் காணவில்லை?
தேடுங்கள் காணவில்லை

கருப்பு புகை உலகெங்கும்
முழுவதுமாய் பரவிவிட
பயந்துபோன சூரியனது
கண்களைஇருக்க மூடி
மேகமென்ற படியேறி
மேல்வானுக் கோடிவிட்டதோ?
நிலாப்போர்வை போர்த்திவிட்டதோ?
எங்கே அந்த சூரியன்?
தேடுங்கள் காணவில்லை

பகலெல்லாம் உழைத்துழைத்து
உடம்பெல்லாம் களைத்துப் போன
பேராசை மனிதர்கள்
நிம்மதியை தொலைத்து விட்டு
எங்கெங்கோ அலைகிறார்கள்
நித்திரையை தொலைத்து விட்டு
கண்விழித்து அழுகிறார்கள்

வறுமையில் வறியவர்கள்
துடிப்பதை கண்டு விட்டும்
சில்லறை காசையேனும்
சிந்தாமல் விடுகிறார்கள்
இவர்களின் நிம்மதியைதான்
தேடுகிறதோ சூரியன்

வந்து விடு!
சூரியனே வந்து விடு!
சுயநலற்காரர்கள் வாழும் பூமியிது
கொஞ்சம் உதவப்போனாய்
உன்னையும் ஏமாற்றி விடுவார்கள்

உன்னையும் பிடித்து
கயிறு போட்டு கட்டி
பகலெல்லாம் போதாதென்று
இரவெல்லாம் உனை ஒளிரவிட்டு
ஓடிஓடி உழைப்பார்கள்
குறையாத பணப் பெட்டி
இன்னுமின்னும் நிறைவதற்கு

எங்கே அந்த சூரியன்?
தேடுங்கள் காணவில்லை
எங்கே அந்த சூரியன்?

Rustha salam

தேடுங்கள்! தேடுங்கள் காணவில்லை இங்குதான்! இதோ! இந்த இடத்தில்தான் எனக்கு நேரும் என்தலைக்கு மேலுமாகத்தான் இருந்தது தேடுங்கள் காணவில்லை எங்கே அந்த சூரியன்? தேடுங்கள் காணவில்லை ஏதோ எரிகின்ற வாசனை வருகிறது சூரியன்தான் எரிகிறது…

தேடுங்கள்! தேடுங்கள் காணவில்லை இங்குதான்! இதோ! இந்த இடத்தில்தான் எனக்கு நேரும் என்தலைக்கு மேலுமாகத்தான் இருந்தது தேடுங்கள் காணவில்லை எங்கே அந்த சூரியன்? தேடுங்கள் காணவில்லை ஏதோ எரிகின்ற வாசனை வருகிறது சூரியன்தான் எரிகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *