ரொம்ப நன்றி தம்பி நீங்க பண்ண்ன எல்லா உதவிக்கும் அதோட என் பொண்ணுக்கு தேடிக் கொடுத்த பேருக்கும்

  • 12

ஊமைக் காதல் நாடகம்
காட்சி 05

களம்:
நுவரெலியா எஸ்டேட், ராதனின் வீடு, ராஜனின் வீடு
கதாபாத்திரங்கள்:
இனியா (கதாநாயகி)
ராதன் (கதாநாயகன்)
பாரதி (இனியாவின் தந்தை)
மேனகா (இனியாவின் தாய்)
செல்லம்மா (ராதனின் தாய்)
சங்கர் (ராதனின் நண்பன்)
சங்கவி (ராதனின் சித்தி)
சுவர்னா (ராதனின் அத்தை)
ராஜன் (தோட்ட உரிமையாளரின் மகன்)
பாலு :- (ராஜனின் வீட்டு வேலைக்காரன்)

(சில வாரங்கள் கடந்திருந்த வேலைகளில் ராதன் வசிக்கும் பகுதி முழுவதும் இனியா, ராதன் இருவரையும் இணைத்து பலவாறாக கதைகள் பரப்பப்பட்ட விதமாக நிலமை மாறிப் போனது. பாரதி ராதனிற்கு எதிராக செயற்படுவதை பயன்படுத்தி கொண்டு ராஜன், துரையப்பா ஆகியோர் தமது காரியத்தை பாரதி மூலம் செய்ய முனைந்தனர். சுவர்னா, சங்கவி ஆகியோரும் ராதன் தம்மை அவமானப் படுத்தியமைக்கு தமக்கு சாதகமாக சந்தர்ப்பத்தை பயன்படுத்தவே ராதன், இனியா இருவருக்குமே சங்கடமான நிலை உருவானது. இனி கதையில் என்ன நடக்கிறது எனப் பார்ப்போம்.)

(காலை விழித்ததும் பாரதி தோட்டத்திற்கு செல்லாமல் விரைந்து ராதனின் வீட்டு பின் புறமாக செல்கிறான். ராதனைப் பார்க்க)

பாரதி:- வீட்டுல யாரு இருக்கீங்க? ராதன் தம்பி இருக்காறா?

செல்லம்மா:- உள்ள வாங்க. தம்பி பெக்டரி பக்கமாக போனாறு இப்ப வருவாரு ஒக்காருங்க.

பாரதி:- நேரம் ஆவுமா அம்மா? எனக்கும் கொஞ்சம் வேல இருக்கு.

செல்லம்மா:- இப்ப போயி கண நேரமாவது வந்துடுவான் கொஞ்சம் பொறுத்து கோங்க ஐய்யா.

ராதன்:- அம்மா! அம்மா! இத கொஞ்சம் புடிங்க. இதோ வீட்டு சாமான் எல்லாம் வாசல்ல வெச்சிருக்கேன்.

பாரதி:- ராதன் தம்பி கொஞ்சம் ஒங்க கூட பேசனும்.

ராதன்:- அடடா நானே ஒங்க கூட பேசனும்டு இருந்தேன் நீங்களே வந்துடிங்க.

பாரதி:- நான் சொல்ல வந்த விஷயம் கொஞ்சம் முக்கியமானது.

ராதன்:- நீங்க என்ன சொல்ல வாரிங்கன்னு என்னால புரிஞ்சிக்க முடியுது. ஆனா நீங்களே சொல்லுங்க.

பாரதி:- நீங்க இவ்வளவு நாட்களாக எங்கள எந்த கஷ்டமும் இல்லாம பாத்துகிட்டிங்க. அதுக்கு நாம ரொம்ப கடமபட்டிருக்கோம். நாம இந்த வீட்ட காலி பண்டி போயிடலாம்னு இருக்கோம்.

ராதன்:- எங்க துரையப்பா வீட்டுக்கா? ராஜன் எடம் பாக்குறன்னு சொன்னானா?

பாரதி:- நாங்க எங்க வேனும்னாலும் போயிக்கிறம். ஆனா இந்த வீட்ட விட்டு போவுற போது ஒங்க கிட்ட சொல்லனும்ல.

சுவர்னா:- அடடா வீட்டுக்குள்ள வரும் போதே ரொம்ப பெரிய விஷயம் போய் கிட்டிருக்கே. என்ன விஷயம் ராதா?

பாரதி:- நாம இந்த வீட்ட காலி பண்ணலாம்னு இருக்கோம்.

சுவர்னா:- ஆமா தம்பி அது ரொம்ப நல்லது தான். ரெண்டும் கெட்ட மாதிரியா ஊருக்குள்ள நம்ம ராதனையும், ஒங்க பொண்ணையும் வச்சி தப்புத் தப்பா பேசுறாங்க. அதனால நீங்க இங்கிருந்து போறது நல்லது தான்.

செல்லம்மா:- வீட்டு விட்டு போவுற அளவுக்கு ஊருக்குள்ள என்ன பேசிக்கிறாங்க? இனியாவும், ராதனும் பழகிக்கிறதா சொல்றாங்க அப்படியா?

சங்கவி:- அது தான் இப்ப ஊரு பூரா தெரியுமே? கோயில், கொளமெல்லாம் தனித்தனியா நண்டு பேசுறது ஊரு பூராகவும் தெரியும்.

ராதன்:- ஊரு ஆயிரம் கதய சொல்லும். ஆனா உண்மயிலுமே எனக்கும், அவளுக்கும் இடையில ஒரு ஒழுக்கமான அன்பு, காதல் தான் இருக்கு. இது விஷயமா ஒங்க கூட முன்னாடியே பேசலாம்னு நெனச்சேன்.

பாரதி:- என்ன பேச இருக்கு இந்த விஷயத்துல? ஊரு நாழு, அஞ்சா கதக்கிம் போது நாம தானே அதுல இருந்து விழகிக்கனும்.

சுவர்னா:- அது சரிதான். ராதனோட நெலமக்கி எவ்வளவு பெரிய எடத்துல நாம பொண்ணு எடுக்கனும்.

ராதன்:- எனக்கு சொத்து, செல்வம் எல்லாம் வேனாம். நான் என்ன பொறந்தத்துல இருந்து பணக்காரனா இல்லயே?

செல்லம்மா:- இங்க பாருங்க ஐய்யா ஒங்க பொண்ண எங்களுக்கு ரொம்ப புடிச்சிருக்கு. நீங்க விரும்பினா நாங்க வந்து பொண்ணு பாத்துடலாம்.

ராதன்:- இத தான் நான் அண்ணக்கே சொல்லனும்னு நெனச்சேன். பாரதி நீங்க விரும்பினா நா எங்க அம்மாவோட வந்து பார்க்கிறேன்.

மேனகா:- இருந்தாலும் ஒங்க தகுதி, பணம், அந்தஸ்த்து இதெல்லாம் பாக்குற நேரம். நாங்க எப்படி ஒங்க வீட்ல பொண்ணு கொடுக்குறது?

பாரதி:- நாம நம்ம தகுதிக்கு ஏத்த படியா பாத்துக்குறோம். என்னோட தகுதிய மாத்துனதே ஒங்க பையன் தான்.

ராதன்:- நம்மலுக்குள்ள இருக்குற பகய ஒங்க பொண்ணு வாழ்க்கைல காட்டாதிங்க பாரதி.

சுவர்னா:- ஒங்க ரெண்டு பேருக்குள்ளயே பக இருக்கும் போது பொண்ணு, கொடுத்து, மாப்புள எடுத்து எப்படி வாழ்றது?

சங்கவி:- இங்க யாரும் யாரோடயும் பொண்ண கேக்கவும் தேவயில்ல! கொடுக்கவும் தேவயில்ல! எல்லாத்துக்கும் இங்க ஆள் இருக்கு.

ராதன்:- எல்லாரும் பேசுறத நிறுத்துங்க இங்க நானும், அம்மாவும், பாரதியும் பேசிக்கிறம். மத்த எல்லாரும் ஒங்க வேலய பாருங்க.

செல்லம்மா:- தொறந்த வீட்டுக்குள்ள நாய் நொழஞ்ச மாறி எறிற நெருப்புல எண்ணய ஊத்திக்கிட்டு.

மேனகா:- எங்களால ஒங்க குடும்பத்துல பிரச்சின வேனாம். நாங்க இங்க இருந்து போயிட்றம்.

பாரதி:- அது தான் சரியான முடிவு. நாம இங்க இருந்து போயிட்றம். இனியாவோட மானமும் ரொம்ப முக்கியம்ல.

பாரதி:- நீங்க எங்கயும் போக வேண்டிய அவசியம் இல்ல! நீங்க மத்தவங்க பேச்ச கேக்காம இங்க இருங்க.

பாரதி:- எங்களுக்கு ராஜனும், துரையப்பாவும் வீடு பாத்து கொடுக்குறதா சொல்லிருக்காங்க. அவங்கட பெக்டரில நமக்கு வேலயும் போட்டு தாரதா சொல்லிருக்காங்க.

ராதன்:- எந்த பெக்டரில வேல போட்டு கொடுக்க போறாங்களாம்? அங்க எல்லா பெக்டரியும் என்னோட பெயருக்கு எழுதி வாங்கியாச்சு.

பாரதி:- (திக்குமுக்காடி நிற்கிறான் ராஜனை நம்பி ஏமாந்து விட்டோமோ என ஏங்கினான்.) பெக்டரி இல்லன்னா நா ஒரு கடைல சரி பொளச்சிக்குவேன் நீங்க கவலபடாதீங்க.

இனியா:- வாங்க அப்பா போகலாம். இனி இங்க நாங்க இருக்க வேண்டிய தேவ கெடயாது!

மேனகா:- இனியா நீ எதுக்குங்க வந்த நீ போ அந்த பக்கத்துக்கு நாங்க பாத்துக்குறோம்.

இனியா:- எங்களால யார் வீட்டுலயும் கொழப்பம் வேணாம். நாங்க போனா எல்லாம் சரியாகிடும் அப்பிடி தானே?

ராதன்:- ஐய்யோ பாரதி மிகப் பெரிய ஆபத்துல சிக்கிக்க போறிங்க. முதலைனு தெரியாம கால கொளத்துல போடுறிங்க.

பாரதி:- நானும் முதலைனு தெரியாம தான் என்னோட வீட்டுல சில பேற கவனிச்சன்.

இனியா:- அப்பா வாங்க போவலாம். நாங்க இருந்தோம்னு நம்மல தூக்கி வச்சி கவனிக்கவா போறாங்க. எல்லாரும் பேசுன வார்த்தயெல்லாம் கேட்டுட்டு தா இருந்தேன்.

செல்லம்மா:- அம்மா இனியா நா ஏதாச்சும் சொன்னேனா? ராதன் ஏதாச்சும் சொன்னானா? நீ எதுக்கும்மா இப்படி பேசுற?

ராதன்:- அம்மா விடுங்க நீங்க போகலாம் பாரதி தாராளமாக நீங்க போகலாம் போய் வேற எடத்துல இருங்க ஆபத்து வரும் போது என்னோட வார்த்தைய உணருவிங்க.

பாரதி:- ரொம்ப நன்றி ராதன் தம்பி நீங்க பண்ண்ன எல்லா உதவிக்கும் அதோட என் பொண்ணுக்கு தேடிக் கொடுத்த பேருக்கும்.

செல்லம்மா:- கடவுளே எதுக்காக நம்மள இப்படி சோதிக்கிற?

சுவர்னா:- ரொம்ப நல்லது எல்லாரும் சந்தோஷமா போய்டு வாங்க.

சங்கவி:- மொதல்ல கோயில் போயி நடந்த நல்ல காரியத்துக்கு கடவுளுக்கு நன்றி செலுத்தனும்.

(இனியா ராதனின் வீட்டை விட்டு ஏக்கத்துடன். ராதன் இனியா சொன்ன வார்த்தைகளால் மனம் உடைந்து செய்வதறியாது திகைத்து நிற்கிறான். இரவு நேரமும் வந்தது ராதன் அப்படியே அதே நினைவிலே இருக்கிறான்.)

செல்லம்மா:- ராதா நடந்ததயே நெனச்சிட்டு இருந்தா எப்டிப்பா? வந்து தண்ணுட்டு தூங்கு.

ராதன்:- நா நெனச்சதெல்லாம் அப்படி தவிடுபுடியா ஒடஞ்சி போச்சே. பாரதி பேசின வார்த்தைகள் இனியா போகலாம்னு சொன்னது. நம்ம அத்த, சித்தி எல்லாரும் என்ன காயப்படுத்திட்டாங்க.

சங்கர்:- ராதா எல்லாத்துக்கும் ஒரு வழி இருக்கும். இப்ப நீ திண்ணுட்டு நிம்மதியா தூங்கு. நடக்க வேண்டிய விஜயங்கள நா பாத்திக்கிறேன்.

ராதன்:- எப்படி நா நிம்மதியா இருக்குறது? இனியா மாறி மறுபக்கம் பேசிட்டாளே? அது ரொம்ப கவலயா இருக்கு. அந்த ராஜன் என்ன திட்டத்த தீட்டியிருக்கானோ? பாவம் இனியா.

செல்லம்மா:- கடவுள் கைல ஒப்படக்கலாம் அவள் பாத்துப்பான்.

(இதே வேளை ராதன் இங்கே தனியாக புளம்பிக் கொண்டிருக்கையில் ராஜன் குடிபோதையில் உளருகிறான்.)

பாலு:- அண்ணா எதுக்குன்னா இந்த பாரதிய இங்க இழுத்துகிட்டு வந்திங்க?

ராஜன்:- ஒரு குறியா தான் எடுத்துக்கிட்டு வந்திருக்கேன். பாரு போகப் போக என்ன எல்லாம் நடக்குதுன்னு!

பாலு:- என்ன அண்ணே ராதன பள்ளத்துல போட போறீங்களா?

ராஜன்:- பாரதிய வச்சு ராதன வீழ்த்திடலாம்னு இருக்கேன். பாரதி அந்தப் பக்கம் ராதன பாத்துக்கும் போது இனியாவ நான் இந்தப் பக்கமா பாத்துக்குவேன்!

பாலு:- என்னது என்ன பொண்ணு மேல கண்ணு போல! அண்ணே நீங்க கில்லாடிண்ணே.

ராஜன்:- ராஜனோட விளயாட்ட இதுக்கு அப்பறமா தான் நீ பாக்க போற! தோட்டத்துல கொழுந்து பறிக்கும் போது பக்கத்துல போனா, கைய புடிச்சா தட்டி விடுறா?

பாலு:- ஆஹாஹா இது எல்லாம் நடந்திருக்கா? அப்புறம்?

ராஜன்:- இத்தன வருஷமா எங்க கைல இருந்த பெக்டரிய அவன் பெயர்ல மாத்திக்கிட்டான். கடன் காரனோட மகனுக்கு எதுக்கு பெக்டரி? அவன ஒரு காரியம் பண்ணாம நான் விட மாட்டே. பெக்டரியும் அவனுக்கு நிலைக்கபோறதில்ல. இனியாவயும் அவனுக்கு கிடைக்க விடப் போறதில்ல.

பாலு:- அப்ப பாரதியையும், ராதனையும் கொழுவி விடப் போறிங்க இல்லண்ணே?

ராஜன்:- இனியா ஒன்ன ஒரு கை பாக்காம விட மாட்டேன்.

(இவன் இவ்வாறு உளறிக் கொண்டிருக்க இனியா இரவெல்லாம் உறங்காமல் யோசிக்கிறாள்.)

இனியா:- என்ன மன்னிச்சிகிங்க ராதா. ஒங்க மனச காயப்படுத்தனும்னு நா அப்படி பண்ணல. ஆனா நாங்க ரெண்டு பேரும் பேசுறது, பழகுறது எல்லாருக்கும் தெரிஞ்சதால அப்பா ரொம்ப கோவமா இருக்காரு. ஒங்களுக்கு நான் அங்க இருக்கறதால கெட்ட பேரு. இப்ப என்னமோ என் மனசு எது நடந்தாலும் ஒங்க கிட்டயே இருந்து இருக்கலாம்னு சொல்லுது. இனி மீசக்கார பையன் என்ன பார்க்கவும் மாட்டானே! ராதன் அடிக்கடி என்ன வந்து பாருங்க இல்லன்னா நா துன்பத்தோடயும், கண்ணீரோடயும் இருப்பேன்.

(என மனதில் நினைத்து வேதனை அடைகிறாள். கண்ணீர் சிந்துகிறாள். ராதன் இனியாவுக்கு கொடுத்த டீஷர்ட் இனை இறுக்கியனைத்த படி உறங்குகிறாள். இப்படியாக ராதனினதும், இனியாவினதும் இன்பகரமான வாழ்வின் ஆரம்பத்திலேயே துயரகரமான சம்பவம் இடம் பெற்றது. ராதன் இனியாவை குறை கூறும் நிலைமைக்கு தள்ளப்படுகிறான், இனியாவோ அவனை நினைத்து ஏங்குகிறாள்.

இதற்கிடையில் ராஜனின் ராதனை வீழ்த்தும் திட்டமும் இடம் பெறுகிறது. ராஜன் ராதனை வீழ்த்துவானா? இனியாவிற்கு ராஜனால் ஆபத்துக்கள் நேர்ந்திடுமா? இனியா, ராதன் இருவரும் மீண்டும் சிந்திப்பார்களா? விடைகளை அடுத்த காட்சியில் காணலாம். இத்துடன் இன்றைய காட்சியை முடித்துக் கொள்கிறேன். மீண்டும் சந்திப்போம் அடுத்த காட்சியில்.

ஊமைக் காதல் தொடரும்.
இனியா – ராதன்
Fathima Badhusha Hussain Deen
Faculty of Islamic Studies and Arabic Language
South Eastern University of Sri Lanka

ஊமைக் காதல் நாடகம் காட்சி 05 களம்: நுவரெலியா எஸ்டேட், ராதனின் வீடு, ராஜனின் வீடு கதாபாத்திரங்கள்: இனியா (கதாநாயகி) ராதன் (கதாநாயகன்) பாரதி (இனியாவின் தந்தை) மேனகா (இனியாவின் தாய்) செல்லம்மா (ராதனின்…

ஊமைக் காதல் நாடகம் காட்சி 05 களம்: நுவரெலியா எஸ்டேட், ராதனின் வீடு, ராஜனின் வீடு கதாபாத்திரங்கள்: இனியா (கதாநாயகி) ராதன் (கதாநாயகன்) பாரதி (இனியாவின் தந்தை) மேனகா (இனியாவின் தாய்) செல்லம்மா (ராதனின்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *