நாங்கள் அனைவரும் எமது தேசத்தை நேசிப்பவர்கள்

  • 26

இலங்கை ஒரு அழகான நாடு. இலங்கை மக்கள் அன்பான மக்கள். சகல இனங்களும் ஒற்றுமையாக வாழும் நாடு இலங்கை நாடு. ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு புரிந்துணர்வுடன் செயல்படும் மக்களைக் கொண்ட நாடு எம் நாடு. இதுதான் நமது நாட்டு மக்களின் இயல்பு. அதுதான் உண்மையும் கூட. ஆனால் இன்று நான் உங்களோடு கலந்துரையாடவுள்ள விடயமானது நீங்கள் அனைவரும் மிக அறிந்த விடயமே.

கொரோனா தொற்று ஏற்பட்டு இறக்கப்படும் புல்லாகி உடல்களை தகனம் செய்ய வேண்டும் என முடிவெடுக்கப்பட்டு உள்ள எங்கள் நாட்டின் தேசிய சட்டத்தைப் பற்றிய நான் இன்று உங்களோடு கலந்துரையாட உள்ளேன்.

உண்மையிலேயே என் அன்பிற்குரிய சகோதர உறவுகளே! பேசுபொருளாக கொண்டுள்ள ஒரு விடயம் என கூறலாம். அன்பிற்குரிய சகோதரர்களே! கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு பிறகும் அவர்களது உடல்களை அடக்கம் செய்யாது தகனம் செய்ய வேண்டும் என இலங்கை நாட்டின் சுகாதார அமைச்சு காட்டியுள்ளது.

ஆனால் எமது நாட்டின் சிங்கள, முஸ்லிம், தமிழ் மற்றும் கிறிஸ்தவ மதத்தவர்களுக்கு கூட கொரோனா தொற்றால் உயிரிழக்கும் உடல்களது இறுதிக்கிரியைகளை தத்தமது மத அனுஷ்டானங்களின் படி நிறைவேற்ற வாய்ப்பு கிடைப்பதில்லை. ஆனால் இன்று சமூக ஊடகங்கள் ஊடாகவும், பிரபல ஊடகங்கள் ஊடாகவும் முஸ்லிம் சமூகம் மாத்திரமே இந்த தகனம் செய்யும் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக காண்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் நான் அறிந்த வகையில் சிங்கள மக்களும் தமிழ் மக்களும் அதேபோல கிறிஸ்தவ மக்களாயினும் சரி பெரும்பாலானவர்கள் இதனை ஒரு மனிதரது உடலை அடக்கம் தான் செய்வார்கள். ஆனால் இன்று கொரோனா சூழ்நிலை காரணமாக சிங்கள மக்கள் தகனம் செய்வதற்கு உடன்பட்டாலும் தங்களுடைய உறவினர்கள் அது இறுதிக் கிரியைகளை தமது விருப்பப்படி நிறைவேற்ற முடியவில்லையே என கவலைப்படுபவர்கள் இருப்பார்கள் என நான் நம்புகிறேன்.

எனவே அன்பின் இலங்கை வாழ் மக்களே. நிச்சயமா இது முஸ்லிம் மக்களது மாத்திரம் பிரச்சினை அல்ல. இந்நாட்டில் பிறந்த ஒவ்வொரு தனிமனிதனும் உரிமை. முஸ்லிம் மக்கள் இந்நாட்டை நேசிப்பது இல்லை எனவும் சட்டத்தை மதிப்பதில்லை எனவும் சிலர் தெரிவிக்கின்றனர். அவர்களுக்கு நான் கூறும் விடயம் என்னவென்றால் நீங்கள் இலங்கையின் கடந்த கால வரலாற்றை புரட்டிப் பாருங்கள். நாட்டிற்காக நாட்டின் பாதுகாப்பிற்காக அக்கால ஆட்சியாளர்களுக்கு எந்த ஒரு நிபந்தனையும் இன்றி ஒத்துழைப்பு வழங்கிய ஒரு சமூகத்தையே நீங்கள் இன்று அவ்வாறு விமர்சிக்கிறீர்கள். பள்ளியில் மக்களை குண்டு வைத்து எரித்தல் சரி. இறந்த உடலை எரிப்பதா தவறு? என சமூக மட்டத்தில் பேசப்படுகின்றது.

சகோதரர்களே! இஸ்லாம் மார்க்கம் ஒரு போதும் அந்த செயற்பாட்டை அனுமதிப்பதில்லை. முஸ்லிம் சமூகம் அனுமதிப்பதுமில்லை. நாம் அன்பும் அந்த செயற்பாட்டுக்கு எதிராகவே பேசினோம்.

இன்றும் எதிராகவே பேசுகிறோம். நிச்சயமாக நாளையும் எதிராகவே பேசுவோம். அதேபோன்று சஹ்ரான் என்ற இஸ்லாம் பற்றிய அறிவில்லாத ஒருவரால் செய்யப்பட்ட விடயத்திற்காக இன்று முழு முஸ்லிம் சமூகமுமே நட்ட ஈடு செலுத்திக் கொண்டிருக்கின்றது. நீங்கள் அப்படியான ஒரு பாதத்தை முன் வைப்பீர்களானால் பள்ளியில் நடந்த சம்பவத்திற்கு பழிவாங்குவதற்காகவா? முஸ்லிம் தன் ஆட்களிடம் செய்கிறீர்கள் என்ற வாதத்தை முன்வைக்க முடியும் என்றாலும் எங்கள் சமூகத்தில் ஒரு தனி மனிதன் செய்த ஒரு தவறுக்காக முழு சமூகமும் தவறை ஏற்றுக் கொள்ள வேண்டுமா? அது நியாயமா? நபர் செய்த கீழ்தரமான செயற்பாடு அந்த குடும்பம் மன்னிப்பு வேண்டி அந்த செயற்பட்டால் அதிர்ச்சியில் இருக்கின்ற அந்தக் குடும்பத்தில் குறித்த நபரது செயற்பாட்டை முன்வைத்து முழுக் குடும்பத்தையும் தண்டிப்பது விமர்சிப்பது சாதாரணமான ஒரு விடயமா? என ஒரு நிமிடம் சிந்தியுங்கள். முஸ்லிம் சமூகமே அந்த செயற்பாட்டிற்கு சம்பந்தப்பட்ட சகலரும் சட்டத்தின் முன் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்ற நிலைப்பாட்டிலேயே இருக்கிறார்கள்.

அதே போன்று இன்னும் சில சகோதரர்கள் ஏன் உங்களுக்கு நாட்டு சட்டத்திற்கு கட்டுப்பட முடியாது என கேட்கின்றனர்.

அன்புக்குரிய சகோதரர்களே! இலங்கை வரலாற்றில் முஸ்லிம் சமூகம் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் இந்த நாட்டை காட்டிக் கொடுத்தது இல்லை. நாட்டு சட்டத்தை மதிக்கின்ற சமூகம்தான் முஸ்லிம் சமூகம். ஆனால் அனைவர்களையும் போல்முஸ்லிம் சமூகத்தில் இருப்பவர்களும் மனிதர்கள். அவர்களால் விடப்படுகின்ற ஒரு சிறிய தவறை இன்றைய ஊடகங்கள் முழு சமூகத்தின் தவறாக காண்பிப்பது ஏன்? எந்த காரணத்திற்காத என என்னால் இதுவரை ஊகிக்க முடியவில்லை.

முஸ்லிம் சமூகம் ஏன் அடக்கம் செய்வதற்கு அனுமதி கேட்கிறது என நீங்கள் ஒரு நிமிடம் சிந்தித்தீர்களா? இஸ்லாம் மார்க்கம் ஒரு உயிரை எரிப்பதற்கான அதிகாரம் ஏக வல்லோன் அல்லாஹ்வுக்கு மாத்திரமே உள்ளது என வழிகாட்டுகிறது. அவனால் படைக்கப்பட்ட மனிதரை எரிக்கக் கூடிய அதிகாரம் அவனைத் தவிர வேறு யாருக்கும் கிடையாது எனவே இஸ்லாம் மார்க்கம் தெளிவுபடுத்துகிறது. அதேபோன்றுதான் மரணித்த ஒரு மனிதனுக்குக் கூட தண்டனை வழங்கவும் அவர் பற்றி தீர்ப்பு வழங்கவும் மனிதர்கள் எவருக்கும் உரிமை கிடையாது. இஸ்லாம் மார்க்கம் சமூகத்தில் மனிதனுக்கு ஒரு கௌரவத்தை வழங்கியுள்ளது.

எனவே ஒரு மனிதன் மரணித்ததன் பின்னர் அவரை கௌரவமான முறையில் அடக்கம் செய்தது முஸ்லிம் சமூகத்தின் கடமை. அவரை முறையாக சுத்தம் செய்து வெள்ளை துணியால் மூடி கபன் செய்து அவருக்காக ஜனாஸா தொழுகை முறையாக அடக்கம் செய்வது சமூகத்தின் கடமை என இஸ்லாம் கூறுகிறது.

ஆனால் உலக சுகாதார ஸ்தாபனம் கொரோனா தொட்டால் மரணித்த உடல்களை அடக்கம் செய்ய முடியும் எனவே குறிப்பிட்டுள்ளது. அதேபோன்று இந்தியா, தாய்லாந்து, இத்தாலி மறுக்கப்பட்டது என்பது பெரும் கேள்விக்குறியாக உள்ளது. பாதிப்பையும் ஏற்படுத்தாது என தெரிவித்துள்ளனர். செய்வதற்கு முடியும் என தெரிவித்துள்ளனர்.

எந்த ஒரு விஞ்ஞான ரீதியான அடிப்படையும் இன்றி இந்த தகனம் செய்யும் செயற்பாடு நடைபெறுவதனாலயே முஸ்லீம் சமூகம் அதனை மறுக்கிறது. விஞ்ஞான ரீதியாக இலங்கையில் அடக்கம் செய்வது அதாவது கொரோனா தொற்றால் சுரக்கும் உடல்களை அடக்கம் செய்தது இலங்கை நாட்டுக்கு தீங்கானது என உறுதிப்படுத்தப்படும்வரை முஸ்லிம் சமூகம் ஒரு போதும் அனுமதிக்காது.

எனவே அன்பின் சகோதரர்களே! இது எமது தேசம். எங்கள் அனைவரதும் தேசம். நாங்கள் அனைவரும் எமது தேசத்தை நேசிப்பவர்கள். அரசியல் ரீதியான அடிமைத்தனத்தை தவிர்த்து இனவாத சிந்தனையில் இருந்து விலகி மனிதாபிமான அடிப்படையில் சிந்திக்கும் அனைவரும் எமது வேண்டுகோள் சரியானது எனவே முடிவுக்கு வருவர்.

பசீம் இப்னு ரசூல்

இலங்கை ஒரு அழகான நாடு. இலங்கை மக்கள் அன்பான மக்கள். சகல இனங்களும் ஒற்றுமையாக வாழும் நாடு இலங்கை நாடு. ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு புரிந்துணர்வுடன் செயல்படும் மக்களைக் கொண்ட நாடு எம் நாடு.…

இலங்கை ஒரு அழகான நாடு. இலங்கை மக்கள் அன்பான மக்கள். சகல இனங்களும் ஒற்றுமையாக வாழும் நாடு இலங்கை நாடு. ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு புரிந்துணர்வுடன் செயல்படும் மக்களைக் கொண்ட நாடு எம் நாடு.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *