உயிர்களை காக்க ஒடிக் கொண்டிருக்கும் இலங்கையின் ஹூஸைன் போல்ட்

  • 10

இலங்கை நாட்டு மக்களின் உயிரைப் பாதுகாக்க ஓடிக்கொண்டிருக்கும் கொழும்பு பிரதேசத்தில் ஹுஸைன் போல்ட் உடனான நேர்காணல். Chala Ruu TV என்ற YouTube சேவைக்கு வழங்கிய சிங்கள நேர்காணலின் தமிழ் மொழிபெயர்பாகும்.

உங்கள் முழுப் பெயர் என்ன:

எனது பெயர் முஹம்மது ஹுஸைன் முஹம்மது ரிஷாத். எனக்கு ஹுஸைன் போல்ட் என்று இட்டது பொலிஸ் அதிகாரிகள்.

ஹூஸைன் போல்ட் ஜெமிக்காவில் நாட்டுக்காக ஒலிம்பிக்கில் ஓடினார். நான் இங்கு நாட்டு மக்களின் உயிரை பாதுகாக்க ஓடிக்கொண்டிருக்கிறேன். எனது சிறு முயற்சி என்றாலும் அனைத்தும் இறைவன் நாட்டப்படியே இடம்பெறுகின்றது.

பொணுவாக, “ஹுஸைன் போல்ட், இவ்விடத்திற்கு வரவும் ஒருவர் மோசமான நிலையில் உள்ளார்” என்ற பொலிஸாரினால் அறிவிப்பார்கள். நான் உடனே அவ்விடத்திற்கு செல்வேன். என்னிடம் அவசர சேவை வேன் ஒன்றுள்ளது, அது நான் ஜப்பானில் 8 ஆண்டுகள் இருந்தேன். அக்காலப் பகுதியில் அங்கு 5 ஆண்டுகள் பாவித்த வேன் ஒன்றை இலங்கைக்கு அனுப்பினேன். இலங்கையில் எனது இச்சேவையை 1974 இல் இருந்து ஆரம்பித்து இன்று வரை தொடர்ந்து செயற்படுத்துகிறேன்.

துப்பதாகே ஹிதவதா என்று உங்களுக்கா சொல்கிறார்கள்?

ஆமாம், மக்கள் தான் எனக்கு “ஏழைகளின் சகோதரன்” என்று பெயரிட்டனர். அது நான் இட்ட பெயர் அல்ல.

என்னிடம் சேவை பெற்றுள்ள சிங்கள பெண்கள் அழுதழுது நன்றி தெரிவிப்பார்கள், முஸ்லிமாக இருந்து கொண்டு இவ்வாறு செய்கிறீர் என்று. ஏனெனில் எங்களிடம் ஜாதி, மத பேதமில்லை.

முஹம்மது நபி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள், கஷ்டத்தில் உள்ளோர்க்கு உதவுமாறு, புத்த பெருமானும் கூறியுள்ளார்கள் உயிர் வாழ்வதாக இருந்தால் பிறருக்கு பயன் பெற வாழுமாறு கூறியுள்ளார்.

ஏழைகளின் சகோதரனான உங்களது சேவைகள் என்ன?

கைவிடப்பட்ட, உரிமை கூறப்படாத சடலங்களை நல்லடக்கம் செய்தல், கஷ்டத்தில் உள்ள நோயாளிகளை உரிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுதல், மனநோயாளிகளை, மனநோயாளி வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்லுதல், அம்யுலன்ஸ்களில் சடலங்களை கொண்டு செல்லமாட்டார்கள், அவற்றை நாம் கொண்டு பொலிஸாரின் அறிவுறுத்தலுக்கமைய கொண்டு செல்வோம்.

மக்கள் ஏன் உங்களுக்கு பைத்தியம் என்கிறார்கள்?

அப்படி அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏனெனில் நான் இப் பொதுச் சேவைக்கென பல கோடிப் பணத்தை செலவளிப்பதனாலே இவ்வாறு கூறுகிறார்கள்.

நான் ஜப்பானில் 8 ஆண்டுகள் சம்பாதித்த பணத்தை இப்போது இங்கு செலவு செய்கிறேன். ஏனெனில் எனக்கு பிள்ளைகள் இல்லை, திருமணம் முடித்து 35 ஆண்டுகள் கடந்து விட்டன. பிள்ளைகள் இல்லை என்பதால் அப் பணத்தை இதற்காக செலவுசெய்கிறேன்.

நீங்கள் முஸ்லிம்களுக்கு மாத்திரமா சேவை செய்கிறீர்கள்?

இல்லை, நான் அனைத்து இனத்தவர்களுக்கும் சேவையாற்றுகின்றேன். எனது அம்யுலன்ஸ் சேவையில் சேவை பெற்றவர்களில் 80% சிங்களவர்களாகும்

நீங்கள் ஒருவரை கொண்டு செல்ல எவ்வளவு பணம் அறவிடுகிறீர்கள்?

நான் முழுமையாக 100% இலவசமாகவே செய்கிறேன். நான் இவ்வாறு பெற்றோல் செலவளித்து இலவசமாக கொண்டு செல்கிறேன். அதனால் தான் என்னை “ஏழைகளின் சகோதரன்” என சிலர் கூறுகிறார்கள். நான் யாரிடமும் பணம் கேட்பதில்லை. என்றாலும் சில பணக்காரர்கள் பணம் தந்தால் எடுப்பேன். சில வேளை 100 ரூபா தந்தாலும் எடுத்துக் கொள்வேன். அவ்வாறு எடுக்காவிட்டால் அவர்களின் மனம் நோகும் அல்லவா? எமது மார்க்கத்திலும் சந்தோசமாக ஏதும் தந்தால் எடுக்குமாறு உள்ளது.

அங்கொடைக்கு நோயாளிகளை எடுத்துச் செல்வதாக இருந்தால் 9,500வரை பணம் அறவிடுவார்கள். ஆனால் நான் யாரிடம் பணம் அறவிடுவதில்லை. மேலும் அவர்களின் கைச்செலவுக்கு 500.00 பணம் கொடுப்பேன். இதை பெருமைக்காக கூறவில்லை.

நீங்கள் மனிதரா தெய்வமா? (இஸ்லாமிய மத நம்பிக்கைக்கு குறித்த கேள்வி பொருத்தமட்டது, என்றாலும் சிங்களத்தில் கேட்கப்பட்ட கேள்வி என்பதால் அதனையும் குறிப்பிட்டேன்.)

நான் மனிதன் தான் ஆனால் சிங்கள மக்கள் மக்கள் பிரார்த்திக்கும்போது மறுபிறவியில் புத்தனாக மாற வேண்டும் என்று பிரார்திக்கின்றனர். ஆனால் இஸ்லாத்தில் அவ்வாறான நம்பிக்கை இல்லை.

நான் மறுமைநாளில் எனக்கு நன்மையாக அமையாக வேண்டும் என தூய எண்ணத்துடன் சேவை செய்கிறேன்.

சில பெண்கள் கூறுவார்கள் நான் பல மணித்தியாலங்கள் இங்கே இருந்தும் யாரும் வந்து காப்பாற்றவில்லை நீங்கள்தான் தெய்வமாக வந்து காப்பாற்றீனீர்கள் என்று.

உங்களிடம் அம்புலன்ஸ்கான விசேட அனுமதிப்பத்திரம் உள்ளதா?

ஆம் அது என்னிடம் உள்ளது. அதாவது இது அம்யுலன்ஸ் என்றாலும் அவசரமான சந்தர்ப்பங்களில் மாத்திரமே அம்யுலன்ஸ் ஆக பயன்படுத்துகிறேன். எனக்கு சிலர் அம்யுலன்ஸ் வண்டி தர முன்வந்தார்கள், ஆனால் நான் பெறவில்லை, ஏனெனில் எனது உயிர் உள்ள வரை எனது சொந்த செலவில் இச் சேவையை செய்ய விரும்புகிறேன்.

நான் ஜப்பானில் கன்ஸா டீட்டா இனடர் நெஷ்னல் ட்ரேனிங் கம்பனியை நடாத்திச் சென்றேன். அதிலிருந்து கிடைத்த பணத்தைக் கொண்டே இச் சேவையை நடாத்திச் செல்கிறேன்.

ஜப்பானில் நான் வாகான விற்பனையில் ஈடுபட்டேன் அதிகமாக நைஜீரியாவுக்கு ஜப்பானில் இருந்து ஏற்றுமதி செய்வோம். அங்கு 25 ஆண்டுகள் பழமையான வாகானமாக இருந்தாலும் ஏற்றுமதி செய்யலாம். ஆனால் இலங்கைக்கு முடியாது இலங்கைக்கு ஏற்றுமதி செய்வதாக இருந்தால் கார் 3 ஆண்டுகள், வான் 5ஆண்டுகள், பஸ் 10 ஆண்டுகளுக்குள் இறக்குமதி செய்ய வேண்டும்.

அவ்வாறு சேகரிக்கப்பட்ட பணத்தையே இச்சேவைக்கு ஈடுபடுத்துகிறேன்.

சட்டத்தால் பிரச்சினைகள் வந்ததுண்டா?

அப்படி நடந்ததில்லை, என்றாலும் நான் தேவையற்ற விடயங்களில் தலையிட்டு சிக்கிக் கொள்வதில்லை. டாக்டர்மார் சிலவேளைகளில் இவ்வாறு கூறியுள்ளார்கள், “நீங்கள் சற்று தாமதித்திருந்தால் இந்நபரைக் காப்பாற்ற முடியாமல் போகும்”

அதிகமான நோயாளர்களை பஸ் நிலையங்களில் இருந்தே அழைத்துச் சென்றுள்ளேன்.

அண்மையில் ஓர் மூதாட்டியை பஸ் நிலையத்தில் விட்டுச் சென்றிருந்தனர்.

அத்தாய்கு உதவ நான் அவ்விடத்திற்கு சென்றேன். அத்தாய் என்னிடம் “என் மகன் எங்கே? என் மகன் எங்கே?” என என்னிடம் கேட்டார். பின்னர் அத் தாய் என்னிடம், “பாருங்கள் மகன், எனது மகன் என்னை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதாக கூறி பஸ்ஸில் விட்டுச்சென்றான், பஸ் நடத்துனர் வழியில் இறக்கி விட்டு சென்றான்.”

இன்னும் சிலர் பஸ்ஸினுள்ளே மரணித்து, பின்னர் உடலை எடுத்துள்ளேன். அதற்கான சான்றுகளும் என்னிடம் உள்ளன்.

பஸ்ஸில் மரணித்தோர், கடலில் மரணித்தோர், ஆற்றில் மரணித்தோர் என பலரின் இறுதிச் சடங்கில் உதவி செய்துள்ளேன்.

என்றாலும் ஒருமுறை வீதியில் மரணித்த ஒருவரை கொண்டு போனதால் வழக்கொன்றிக்கு முகங்கொடுக்க நேரிட்டது. அப்போது என்னிடம் ஏன் கொண்டு சென்றீர்கள்? எவ்வாறு மரணித்தார்? என பல கேள்விகளைக் கேட்டனர், அது அவர்களின் கடமையுமாகும். எனவே நான் பொலிஸாரின் அனுமதியுடனே சடங்களை இப்போது கொண்டு செல்கிறேன்.

சமூக சேவைகள் செய்யும் போது பல முறை ஏச்சுப்பட்டுள்ளேன். ஏனெனில் நல்ல மாம்பழங்கள் உள்ள மரத்திற்குத் தான் கல்லடிகளும், பொல்லடிகளும் உள்ளது. அவ்வாறே அதற்குத் தான் சந்தை வாய்ப்பும் அதிகமாக உள்ளது.

இது வரை எத்தனை உயிர்களைக் காப்பாற்றியுள்ளீர்கள்?

46 வருட சேவையில் சுமார் 10 000 உயிர்களைக் காப்பாற்ற உதவியுள்ளேன். வாழ்க்கையில் கஷ்டப்படுகின்ற சில விநாடிகள் பிந்தினாலும் உயிர் பிரிந்திருக்கும் என வைத்தியர்கள் கூறும் பல உயிர்களுக்கு என்னால் முடியுமான உதவிகளைச் செய்துள்ளேன். இவ்வாறான அவசரமான சந்தரப்பங்களிலே எனது வாகத்தை அம்யுலன்ஸ் வண்டியாக பயன்படுத்துகிறேன். அதற்காகத் தான் வீதியில் அவசர அபாய (silent) ஒலியெழுப்பியவாரு செல்கிறேன். சிலர் இது பற்றி என்னிடம் கேட்டால், எனது பதிவுப் புத்தகங்களைக் காட்டுவேன்.

தற்போது நாம் தமிழ், முஸ்லிம், சிங்களம் எனப் பிரிந்திருப்பது சரிதானா?

இல்லை, இல்லை நாம் அன்று ஒற்றுமையாகத் தான் வாழ்ந்தோம். நான் வரகாபொலயில் ஆனந்த ஹெட்டியாராய்சி என்பவரின் வீட்டில் தங்கினேன், அப்போது அவர்கள் என்னை “கொழம்பு மாமே” என விளித்து தமது மகனைப் போல் உபசரித்தனர்.

இவ்வாறு நாம் ஒற்றுமையாக வாழ்ந்தோம். ஆனால் இன்று அரசியல்வாதிகள் அவர்களின் நலனுக்காக பொதுமக்களை இன மதம் எனப் பிரித்துள்ளனர். ஆனால் கொழும்பில் சிங்கள- முஸ்லிம்கள் ஒற்றுமையாக வாழ்கின்றனர்.

எதிர்கால திட்டங்கள் எவ்வாறுள்ளது?

ஆரம்பத்தில் நான் மாத்திரமே தனியாக சேவை செய்தேன், அப்போது சில நோயாளிகளை கொண்டு செல்லும் போது மலசலம் கழித்தாலும் தனியாக இருந்து சுத்தம் செய்து வைத்தியசாலையில் அனுமதித்துள்ளேன்.

நான் மரணித்த பின்னும் எனது இச்சேவை தொடர வேண்டும் என்ற நோக்கத்தில் R.H ஜனாஸா சேவை என்ற பெயரில் ஓர் அமைப்பை உருவாக்கி அதற்கான தனியார் அலுவலகம் ஒன்றை அமைத்து நிர்வாகக் கட்டமைப்பொன்றை அமைத்துள்ளேன். அதன் தலைவராக நானும் உப தலைவராக மொஹமட் நஜாவும் உள்ளார்.

நான் இச்சேவையை கொழும்பு மாவட்டம் முழுவதிலும் செய்கிறேன்.

Ibnuasad

மூலம்

இலங்கை நாட்டு மக்களின் உயிரைப் பாதுகாக்க ஓடிக்கொண்டிருக்கும் கொழும்பு பிரதேசத்தில் ஹுஸைன் போல்ட் உடனான நேர்காணல். Chala Ruu TV என்ற YouTube சேவைக்கு வழங்கிய சிங்கள நேர்காணலின் தமிழ் மொழிபெயர்பாகும். உங்கள் முழுப்…

இலங்கை நாட்டு மக்களின் உயிரைப் பாதுகாக்க ஓடிக்கொண்டிருக்கும் கொழும்பு பிரதேசத்தில் ஹுஸைன் போல்ட் உடனான நேர்காணல். Chala Ruu TV என்ற YouTube சேவைக்கு வழங்கிய சிங்கள நேர்காணலின் தமிழ் மொழிபெயர்பாகும். உங்கள் முழுப்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *