வெற்றுக் காணிகளை பயன்படுத்துதல்

  • 11

இலங்கையின் காணி உறுதிகள் விடயத்தில் முஸ்லிம்கள் கவனம் செலுத்த வேண்டும். அவ்வாறே வெற்றுக் காணிகளை பயன்படுத்தவும், பாதுகாக்கவும் முஸ்லிம்கள் முன்வர வேண்டும்.

இலங்கைச் சட்டப்படி ஒரு வெற்றுக் காணியில் தொடர்ச்சியாக காணி உரிமையாளர் அல்லாத ஒருவர் தொடர்ச்சியாக 20 ஆண்டுகள் வாழ்ந்து அதற்கான உறுதியை (மின்சாரக் கட்டண அறிக்கை பெயர் போன்ற ஆவணம்) முன்வைத்தால் குறித்த காணியை உரிமைப்படுத்தலாம்.

அவ்வாறே உரிமையாளர்கள் பயன்படுத்தாத வெற்றுக் காணிகளை உரிமையாளரின் அனுமதியின்றி விவசாயி ஒருவருக்கும் விவசாய நடவடிக்கைக்கு பயன்படுத்தலாம் அல்லது அரச கையகப்படுத்தலாம். அவ்வாறே அரசுக்கு சொந்தமான தரிசு நிலங்களையும் எமக்கு எடுத்து பயன்படுத்தலாம்.

இன்று இலங்கையில் நாடாளாவிய ரீதியில் பல முஸ்லிம்களின் காணிகள் இவ்வாறு பயன்படுத்தப்படாது உள்ளது. அவற்றை சில இடங்களில் இலங்கையில் உள்ள சட்டத்தின் ஓட்டைகளைக் பயன்படுத்தி  கையகப்படுத்த முயற்சிகள் இடம்பெறுகின்றது.

எனவே முஸ்லிம் காணி உரிமையாளர்களிடம் பணிவான வேண்டுகோள் உங்கள் காணிகளை வெற்றுக் காணிகளாக மேலும் விட்டுவிடாமல் குறைந்த பட்சம் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள குறித்த வெற்றுக் காணிகளை பயன்படுத்தவும்.

அவ்வாறே அரசின் வசமுள்ள தரிசு நிலங்களையும் பெற்று பயன்படுத்த முன்வரவும்.

இஸ்லாத்தில் இமாரத் என்பது பூமியை வளப்படுத்தல் ஆகும். எனவே முஸ்லிம்களாகிய நாம் பூமியை வளப்படுத்த வெற்றுக் காணிகளையும், தரிசு நிலங்களையும் பயன்படுத்துவதில் கரிசணை காட்ட வேண்டும். மேலும் சதித்திட்டங்கள் மூலம் காணிகள் இழந்ததன் பின்னர் அவை பற்றி கலந்துரையாடியும் பயனில்லை. எனவே பிரச்சினைகள் வர முன் முன்கூட்டியே செயய்படுவோம்.

Ibnuasad

இலங்கையின் காணி உறுதிகள் விடயத்தில் முஸ்லிம்கள் கவனம் செலுத்த வேண்டும். அவ்வாறே வெற்றுக் காணிகளை பயன்படுத்தவும், பாதுகாக்கவும் முஸ்லிம்கள் முன்வர வேண்டும். இலங்கைச் சட்டப்படி ஒரு வெற்றுக் காணியில் தொடர்ச்சியாக காணி உரிமையாளர் அல்லாத…

இலங்கையின் காணி உறுதிகள் விடயத்தில் முஸ்லிம்கள் கவனம் செலுத்த வேண்டும். அவ்வாறே வெற்றுக் காணிகளை பயன்படுத்தவும், பாதுகாக்கவும் முஸ்லிம்கள் முன்வர வேண்டும். இலங்கைச் சட்டப்படி ஒரு வெற்றுக் காணியில் தொடர்ச்சியாக காணி உரிமையாளர் அல்லாத…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *