இறுதி வாகனம்

  • 11

சாய்ந்து கொள்ள
நாற்காலி
படுத்துறங்க பஞ்சு
மெத்தை
சுற்றி திரிய
சொகுசு வாகனம்

வேண்டும் போது
வேலையாட்கள்
எல்லாம்
சந்தூக்கு எனும்
இறுதி வாகனத்தில்
பயணிக்கும்
வரையில் தான்

சிரித்து பேசி
பார்த்து மகிழ்ந்து
பயணம் செல்கிறோம்
பாரினிலே

துடிப்பு நிற்க
நான்கு பேர் சுமக்க
உறவுகள் சூழ
பார்க்காமல் பேசாமல்
படுத்துச் செல்வோம்
சந்தூக்கு எனும்
இறுதி வாகனத்தில்

நல்ல ஆத்மாக்கள்
நறுமணம் கமல
நற்செய்தி உடன்
அதிலே
பயணிக்கும்
மகிழ்ச்சியாக

கெட்ட ஆத்மாக்கள்
அலறோடும்
அச்சத்தோடும்
அதிலே
பயணிக்கும்
சோகத்தோடுஉ

சதா காண்கிறோம்
சந்தூக்கு கொண்டு
செல்லும் சக
மனிதர்களை
நாளை பயணிப்பது
நாமாக கூட இருக்கலாம்

கனதியான நன்மையோடும்
வெண்மையான
கல்போடும்
சொர்க்க பாக்கியத்தோடும்
இருண்ட அறையை
ஒளியேற்றும்
நல்ல ஆத்மாவாக
பயணிக்க
இருகரம்
ஏந்துவோம் ஏகனிடம்!

Rushdha Faris
South Eastern University of Sri Lanka.

சாய்ந்து கொள்ள நாற்காலி படுத்துறங்க பஞ்சு மெத்தை சுற்றி திரிய சொகுசு வாகனம் வேண்டும் போது வேலையாட்கள் எல்லாம் சந்தூக்கு எனும் இறுதி வாகனத்தில் பயணிக்கும் வரையில் தான் சிரித்து பேசி பார்த்து மகிழ்ந்து…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *