முஸ்லிம் அரசியலில் இருந்து சமாதி கட்டப்படவேண்டிய அந்த ஆறு பேர்

  • 15

முஸ்லிம் சமூகத்திற்காக குரல் கொடுப்போம் என்று கூறி, வாக்குறுதிகளை அள்ளி வீசி, முஸ்லிம் கட்சிகளில் போட்டியிட்டும், ஏனைய கட்சியிலும் போட்டியிட்டு, தனி முஸ்லிம் வாக்குகளால் பாரளுமன்றம் சென்று, முழு முஸ்லிம் சமூகத்திற்கும் துரோகம் செய்த துரோகிகளே இவர்கள்.

முஸ்லிம் சமூகம் இவர்கள் யார் என்பதையும், யாரின் ஏஜென்டுகள் என்பதையும் தெளிவாக அடையளம் காண வேண்டும். தெட்டத் தெளிவாக ஜனாஸாக்ளை எரிக்கும் நிலையில், முஸ்லிம் தனிச் சட்டங்களை திருத்துவோம் என்ற நிலையில், கண்ணெதிரே இனவாத அரசாங்கம் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதத்தை கட்டவிழ்த்துவிட்ட நிலையில் பணத்திற்காக முஸ்லிம்களின் உரிமைகளையும், இறுதி அடிப்படை மத உரிமைகளையும் சிறு தொகை பணத்திற்காக விற்ற ஈவிரக்க மற்ற சமூக துரோகிகள் இவர்கள்.

முஸ்லிம் உறவுகளை உள்ளம் துடிக்க எரிக்கும் நிலையில், அடுத்து வரும் அமைச்சுப்பதவியை எதிர்பார்த்து திருத்தச்சட்ட மூலத்திற்கு ஆதரவளித்த அறுவருகத்தக்க கேவலம் கெட்ட ஈனர்கள் என்பதை, ஜனாஸா எரிப்புக்கு நடக்கும் எந்த ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ளாத இவர்களை முஸ்லிம் சமுகம் நினைவில் வைத்திருக்க வேண்டும்.

இதை விட ஒரு சுவாரஸ்யம். தாம் தலைவரின் ஆசீர்வாதத்துடனே ஆதரவளித்தோம் என்ற நிலையில், இதுசம்பந்தமாக தலைமை இவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. விசாரனைக்காக கிழக்கு மாகாணம் விரைந்த தலைவர் கொரோனா காரணமாக கூட்டம் கூட முடியவில்லை என காரியத்தை முடித்தார். இதுவும் வழமையான ஒரு கண்துடைப்பா? கட்சியின் உயர்பீடம் கூட நூறுபேர் தேவையா? அவ்வாறயின ஆசீர்வாதத்துடன் வாக்களித்தோம் என்ற வாசகத்தின் உள்ளடங்கும் ஆயிரம் அரத்தங்களை சமூகம் சிந்திக்க வேண்டும்.

இவ்வாறு சமூகம் ஏமாற்றப்படுமானால் ஆறு பேர்கள் மட்டுமல்ல இவர்களின் மொத்த அரசியலுக்கே முஸ்லிம் சமூகம்  சமாதி கட்ட வேண்டும்.

முஸ்லிம் மக்கள் பெரும்பான்மை கட்சிகளுக்கு வாக்களிக்த் தெரியாதவர்கள் அல்ல. மாறி மாறி வரும் பெரும்பான்மை கட்சிகள் காலத்திற்கு காலம் பதவிக்காக இனவாதத்தை கையில் எடுக்கும் நிலையிலையே முஸ்லிம்களின் தனி உரிமை பதுகாப்பட வேண்டும் என்ற ரீதியில் முஸ்லிம் கட்சிகளுக்கு வாக்களிக்கின்றனர். இந்நிலையில் தமது சிறிய வரப்பிரசாதங்களுக்காக முழு சமூகத்தினதும் உரிமை இவர்களால் விலை போனது தற்சமயம் நடக்கும் அநியாயத்துடன் ஒப்பிடும் போது நூறு வருடம் சென்றாலும் மன்னிக்க முடியாத குற்றமாகும்.

நடப்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

பேருவளை ஹில்மி

முஸ்லிம் சமூகத்திற்காக குரல் கொடுப்போம் என்று கூறி, வாக்குறுதிகளை அள்ளி வீசி, முஸ்லிம் கட்சிகளில் போட்டியிட்டும், ஏனைய கட்சியிலும் போட்டியிட்டு, தனி முஸ்லிம் வாக்குகளால் பாரளுமன்றம் சென்று, முழு முஸ்லிம் சமூகத்திற்கும் துரோகம் செய்த…

முஸ்லிம் சமூகத்திற்காக குரல் கொடுப்போம் என்று கூறி, வாக்குறுதிகளை அள்ளி வீசி, முஸ்லிம் கட்சிகளில் போட்டியிட்டும், ஏனைய கட்சியிலும் போட்டியிட்டு, தனி முஸ்லிம் வாக்குகளால் பாரளுமன்றம் சென்று, முழு முஸ்லிம் சமூகத்திற்கும் துரோகம் செய்த…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *