கடன்காரனோட பையன நான் சும்மா விடப்போறதில்ல!

  • 16

ஊமைக் காதல் நாடகம்
காட்சி :06

களம்: நுவரெலியா தம்ரோ தோட்டம், தேயிலை உற்பத்தி நிலையம் மற்றும் ராஜனின் வீடு

கதாபாத்திரங்கள்:
இனியா (கதாநாயகி)
ராதன் (கதாநாயகன்)
அபி (இனியாவின் தங்கை)
மேனகா (இனியாவின் தாய்)
பாரதி (இனியாவின் தந்தை)
துரையப்பா (தேயிலை பெக்டரியின் முன்னாள் உரிமையாளர்)
ராஜன் (துரையப்பாவின் மகன்)
சங்கர்(ராதனின் நண்பன்)
சோமு (பெக்டரியின் காவலாளன்)
பாலு (ராஜனின் வீட்டு வேலைக்காரன்)

(இனியா, ராதன் இருவரினதும் புனிதமான காதலில் கலங்கத்தை ஏற்படுத்திய ராஜன் பாரதியை ராதனை கொண்று விடுமாறு மனதில் நஞ்சை விதைத்து விடுகிறான். ராதன் பெக்டரியில் தனியாக இருக்கும் செய்தியை கூறி துரையப்பாவுடன் பாரதியை அங்கே செல்லுமாறு கூறிவிடுகிறான். பாரதியும், துரையப்பாவுடன் அங்கே விரைந்து செல்ல ராஜன் இடத்திற்கு வருகிறான்.)

ராஜன்:- ஆஹா வணக்கம் பொண்ணே! என்ன பண்ணுறீங்க? வந்து இப்ப ஒரு வாரம் ஆவுது ஆனா என்ன? ஏது? எப்படி இருக்கீங்கன்னு தெரிஞ்சிக்கவே முடியல!

அபி:- இப்ப என்ன சொல்ல வாரீங்க இத்தன கேள்விய ஒரே தடவயா கேட்டா நான் எதுக்கு பதில் சொல்றது?

ராஜன்:- அடடா நீ புத்திசாலிப் பொண்ணு தான் ரொம்ப தெளிவாகத் தான் இருக்க! சரி ஒன்னோட அக்கா எங்கம்மா இருக்காங்க சமச்சிகிட்டு இருக்காளா?

அபி:- ஆமா அக்காவ எதுக்கு கேக்குறிங்க? அக்கா சமச்சிகிட்டு தான் இருக்காங்க.

ராஜன்:- அக்காவ சும்மா பாத்து நாழு வார்த்த பேசலாம்னு வந்தேன். நீ போய் முன்னாடி வெளயாடிக்கிட்டு இரு நா அக்காவோட பேசிட்டு வந்துடுறேன்.

அபி:- நா திடீருன்னு வந்துடுவேன் சரியா?

ராஜன்:- (அடடா இனியா இன்னிக்கி இவள பண்ணுற வேலையப் பாரு) (மனதால் நினைத்துக் கொண்டு) இனியா என்ன பண்ணுற?

இனியா:- பாத்தா தெரியல எறச்சி வெட்டிவிட்டு இருக்கேன்! என்ன இப்போ?

ராஜன்:- அடடா எறச்சியா என்ன எறச்சி பொண்ணே சிக்கினா? மட்டானா? அதாவது கோழியா? ஆடா? கோழியாக இருந்தா ருசியா இருக்கும். ருசி பாக்காலாம்ல.

இனியா:- கோழி எறச்சி தான் வெட்டிவிட்டு இருக்கேன். ஒங்களுக்கு எறச்சி வேனுமா? இல்ல கத்தி வேனுமா?

ராஜன்:- நான் எறச்சிய கேக்கும் இல்ல! கத்திய கேக்கும் இல்ல!! நான் கேக்க வந்ததும், பாக்க வந்ததும் ஒன்ன தான்.

இனியா:- என்னாயா? எதுக்கு இப்ப என்ன பாக்கணும் ஏதாச்சும் யாராச்சும் பத்தி சொல்லனுமா?

ராஜன்:- (மெதுவாக இனியாவின் அருகே வந்து அவளது கைகளை இருக்கப் பிடித்தவாரே.) என்னத்த சொல்ல பொண்ணே ஒன்னோட அழக அத அனுபவிக்காலாம்னு வந்தேன்.

இனியா:- பின்னாடி போடா பொம்பள பொறுக்கியே நான் நெனச்சேன் இதுக்கு தான் நீ வந்திருப்பண்ணு! கொத்திருவேன் கைய!

ராஜன்:- அடடா பொண்ணே இப்ப நீ கோபப் பட்டுன்னு விட்டுறவா போறேன்? இல்லயே இன்னொரு தடவ முயற்சி பண்ணதான் போறேன்.

இனியா:- விட்றா டேய் என்னோட கைய! நா மத்த பொண்ணுங்கள மாதிரி கெடயாது! கட்டயால போட்டு மண்டய பொழந்துடுவேன்!

அபி:- என்னக்கா என்னாச்சு இவன் ஒன்ன என்ன சரி பண்ணிட்டானா?

இனியா:- போடா வெளில! மறுபடியும் ஒன்ன இந்த பக்கம் பாத்தேன் கொண்ணுறுவேன்!

ராஜன்:- கத்தாதே என்னோட வெள்ளப் பொண்ணே ஒன்னோட அப்பாவ வச்சு ராதனயும், ஒன்ன வச்சே ஒன்னயும் முடிக்கிறேன் பாரு! (ராஜன் வெளியேறி சென்றவுடன் இனியாவின் தாய் வீட்டுக்குள்ளே வருகிறாள்.)

மேனகா:- அடடா சமச்சி வெச்சிட்டியா? கடக்கி போய்டு வர்ர வழில ராஜன பாத்தேன். நல்லா பேசிட்டு போனாறு!

அபி:- அந்த மாமா ரொம்ப மோசமானவரு அவரு அக்காவ கைய புடிச்சி என்னமோ பண்ணிட்டாரு! அக்கா பேசியே அனுப்பிட்டா இப்ப அழுதுகிட்டே இருக்கா.

மேனகா:- அடியே என்னடி சொல்ற இனியா அழுகற ய நிறுத்திட்டு நடந்தத சொல்லுடி?

இனியா:- இதனால தான் அன்னிக்கே சொன்னேன் அங்கயே இருக்கலாம்னு. கிட்ட கிட்ட வந்து நிக்கிறான். கைய புடிக்கிறான். மேலுல ஒரசுறான்! கெட்ட கெட்ட வார்த்தயெல்லாம் பேசுறான் பயமா இருக்குமா!

மேனகா:- கடவுளே அவன் இவ்வளவு மோசமானவனா? ஒன்னோட அப்பா எப்படி என்னோட பேச்சைக் கேட்டாரு? பாரு இப்ப என்ன நடந்திச்சின்னு?

இனியா:- அப்பாவ வச்சு ராதனையும், என்ன வச்சே என்னையும் முடிக்க போறதா சொல்லி மெறட்டிட்டு போறான் மா. நம்ம அப்பாவும் அவன் கூட சேந்துகிட்டு இருக்காறே?

மேனகா:- இல்லடி இன்னிக்கி அப்பா வந்ததும் நடந்தத சொல்லிறலாம்.

இனியா:- அப்பாவுக்கு அதெல்லாம் காதுல கூட கேக்காது!! தெனமும் குடிச்சிட்டு வந்து சாவடிக்கிறாரு!

அபி:- அம்மா இல்லாதப்போ அக்காவ ஏதாச்சும் பண்ணுனா நான் என்ன பண்ணுறது பயமா இருக்கும்மா! (மூவரும் கதறி அழுகின்றனர்.)

மேனகா:- அடியே அப்படி சொல்லாதடி நா என்னோட உசுர கொடுத்து சரி இவள காப்பாத்த மாட்டேனா? கடவுளே இது என்ன புது சோதன? ஒதவி செஞ்சவன உள்ள விட்டா அவன் குடிய கெடுக்குறானே!

இனியா:- இது ஒன்னும் புதுசில்லம்மா இங்க வந்த நாளே வச்சு இப்படித்தான் இருக்கு!

மேனகா:- கடவுளே என்னோட புள்ளங்க ரெண்டையும் காப்பாத்து. (அழுது கொண்டிருந்த இனியவை அனைத்தபடி அவளும் அழுகிறாள்.)

******************************

(இதே வேளை துரையப்பா, பாரதி இருவரும் ராதன் பெக்டரியில் தனியாக இருப்பதை அறிந்து ராதனை தீர்த்து கட்ட வேண்டும் எனும் முயற்சியில் பெக்டரி பக்கமாக செல்கின்றனர்.)

பாரதி:- துரையப்பா எனக்கு என்னமோ நாம பண்ண போற காரியம் சரியா படல.

துரையப்பா:- என்ன பாரதி இப்படி சொல்றிங்க? ஒங்களோட பணக்கார வாழ்க்கைய இப்படி இந்த கோளத்துக்கு மாத்துனவன சும்மாவா விடப் போறீங்க?

பாரதி:- அந்தக் கவல எனக்கும் நெறயவே இருக்கு ஆனா ஒரு உயிர கொள்ளலாமா?

துரையப்பா:- வாழத் தகுதியே இல்லாத உயிர் இருக்கனும்னு அவசியம் கெடயாது. கடன்காரனோட பையன் நாயே என்னோட பெக்டரிய வாங்கி அவன் பேர்ல எழுதிக்கிட்டான். அவன நான் சும்மா விடப்போறதில்ல!

பாரதி:- ஆமா துரையப்பா நீங்க சொல்றதும் சரி தான். அவன் ஒரு பெட்டிக் கட போடவே தகுதியில்லாதவன். அவனெல்லாம் ஒரு பெக்டரிய நடத்தலாமா? அவன கொண்ணே போட்றனும்!

துரையப்பா:- சரியா சொன்னடா நண்பா. இந்தா இந்த சாராயத்த நல்லா ஊத்திக்க அப்பதான் ஒடம்பு தெம்பா இருக்கும்! கொஞ்சம் தைரியமாகவும் இருக்கும்!

பாரதி:- சரி நண்பா நான் அப்படியே செய்றேன். நான் ஒங்களுக்காக இந்த வேளய பண்ணுறேன். என்ன கை விட்டு மாட்டீங்களே?

துரையப்பா:- நீ என்னோட நண்பன் மட்டும் இல்லடா நீ என்னோட பிறவி மாதிரி. ஒன்ன நான் கை விட்டுறுவனா? வா உள்ள போகலாம். (நீ காரியத்த முடி ஒன்னயே கைதியாக புடிச்சி கொடுக்குறேன் என மனதால் நினைக்கிறான்.)

சோமு :- என்ன எங்க போறீங்க ரெண்டு பேரும்??

துரையப்பா :- இல்லப்பா சோமு ராதா தொர தான் என்னமோ வேள இருக்குதா வர சொல்லி சொல்லி விட்டிருந்தாரு.

சோமு:- என்ன தண்ணி போட்டிருக்கீங்க போல?

பாரதி:- தெரியாதா இனி கொஞ்சம் ஏத்திக்கிறது.

சோமு:- ஹா ஹா போங்க போங்க ஐய்யா மூனாவது மாடில தான் இருக்காரு.

(மூன்றாவது மாடிக்கு சென்ற இருவரும் ராதனின் அறையை நோக்கி சென்றனர்.)

துரையப்பா :- உள்ள கொஞ்ச வரலாமா?

ராதன்:- யாரு யாரு இந்த நேரத்துல?

பாரதி:- நானும், துரையப்பாவுடன் தான் ஒங்ககிட்ட கொஞ்சம் பேசனும் கதவ திறங்க.

ராதன்:- என்ன இப்படி சாராய வாசன வீசுது? என்னா உள்ள வாங்க.

பாரதி:- மன்னிச்சிகிங்க மொதலாளி கொஞ்ச தான் போட்டேன்.

ராதன்:- ஆமா துரையப்பா என்ன விஷயம் சொல்லுங்க? எதாச்சும் அவசரமா? பணம் தேவையா? இல்லன்னா என்ன சரி ஒதவி வேனுமா?

துரையப்பா:- நீ எனக்குப் பணம் தரப் போறியா? நான் சேத்து வச்ச பணமே என்னோட ஏழு தலமொறக்கி போதுமுடா!

பாரதி:- கடன் காரன் மவனே கைகொடுக்க போறானாம் பாருங்களேன்?

ராதன்:- என்னங்கடா ரெண்டு பேருமா என்ன திட்டத்தோட வந்திருக்கீங்க?? போங்கடா வெளிய!

பாரதி:- என்ன திட்டமா அது ஒன்னுமில்ல ஒன்ன தீர்த்துகட்டனும் அது தான். திட்டம் அனுமதி தருவியா?

துரையப்பா:- அடெய் கடன்காரன் மவனே இன்னக்கி நீ எங்கயும் தப்பிச்சு போக முடியாது. யாரும் இல்லாம தனியா வேற இருக்க.

ராதன்:- கொஞ்சமாச்சும் திருந்துவிங்கன்னு நெனச்சேன் ஆனா. எதுக்குடா என்ன தொல்லை பண்ணுறிங்க?

பாரதி:- எவ்வளவு பெரிய பணக்காரனா வாழ்ந்துட்டு இருந்தேன். நா கொஞ்சம் வசதி கொரஞ்சத தெரிஞ்சிக்கிட்டு என்னோட பங்காளிங்கள எல்லாரயும் ஒன்னோட பக்கத்துக்கு மாத்தி என்னோட பெக்டரிய ஒன்னோட பேருக்கு மாத்திக்கிட்ட! அது மட்டுமா என்னோட ஆசப்பொண்ணு இனியா அவளோட பெயர கலங்கமாக்கிவிட்டுட்ட ஒன்ன சும்மா விடுவனா?

ராதன்:- ஒனக்கு வசதி பத்தல! எனக்கு வசதி இருக்குது பெக்டரி வாங்கிட்டேன். ஒன்னோட பொண்ணோட மானத்த, பேரையும் கலங்கிப் படுத்தினது நானில்ல! இதோ இருக்கானே இவனும், இவனோட பையனும் தான்.

பாரதி:- இதுக்கு மேலயும் என்னால பொறுக்க முடியாது! (என்று கூறியவாறே விஷம் தீட்டப்பட்ட கத்தியை எடுத்து ராதனின் குத்த முனையும் பொழுது ஒரு துப்பாக்கிச் சூட்டு சத்தம்! பாரதி துடிதுடித்து கீழே விழுந்தான்.)

பாலு:- ஐய்யா இந்தாங்க துப்பாக்கி. இப்ப என்ன விட்டுறுங்க. ஐய்யா நான் கண் காணாத எடத்துக்கு போயிட்றேன்.

(பாலுவின் கைகளில் சுடப்பட்ட துப்பாக்கியின் தோட்டா பாரதியின் தலையினை துளைத்து பாரதி ஸ்தளத்திலேயே உயிரிழந்தான். துரையப்பா அதிர்ச்சியில் மூழ்கிப் போனான். கூட இருந்த பாலுவா இது என்று வியந்து போனான்.)

துரையப்பா:- அடேய் துரோகி அநியாயமா என்னோட நண்பன கொண்ணுட்டியேடா?

சங்கர்:- அப்பா, பையன் எல்லாருமா சேந்து பாரதிய வச்சி ஒன்னயும், ராஜன வச்சு இனியாவயும் முடிக்கிறதா திட்டம் தீட்டி இருக்கானுங்க! இல்ல பாலு?

பாலு:- ஆமாங்க ஐய்யா அப்படித்தான் அன்னிக்கி ராஜா தம்பி என்கிட்ட சொன்னாரு!

ராதன்:- ஆஹா இப்படி வேற திட்டம் இருந்ததா? என்ன துரையப்பா இன்னம் கட்சி மாறாம இருக்க?

சங்கர்:- பொறுப்பா கொஞ்சம் யோசிச்சுகிட்டு இருக்காருல்ல.

துரையப்பா:- ராதா இங்க பாரு நாங்க ரெண்டு பேரும் ஒரு கூட்டா சேந்த்க்கலாம். பாலு தான் பாரதிய பழைய பகைக்காக கொண்ணுடான்னு செய்திய பரப்பிடலாம்.

சங்கர்:- நரிப்புத்திய காட்டாதடா. செய்தி பரப்புரது தான் சேர்கு ரொம்ப கை வந்த கலயாச்சே! பாலு தான் பாரதிய கொல பண்ணுனான் ஆனா பண்ண சொன்னது நீ, சும்மா இல்ல ராதனயும் சேத்து! இது தான் செய்தி.

பாலு:- ஐய்யா எனக்கு பத்தாயிரம் பணம் தர்ரதா சொன்னிங்க அத கொடுத்திங்கன்னா நான் இந்த ஊர விட்டே தப்பிச்சு போயிட்வேன்.

சங்கர்:- கூட இருந்தவனுக்கே, ஒனக்கு சோறு போட்டவனுக்கே துரோகம் பண்ணுவன் நீ ஒனக்கு போலீஸ் ல பத்தாயிரம் தருவாங்க வாங்கிகிட்டு தப்பிச்சிக்க. நான் சொல்லி கொடுத்த படியே சொல்லும் ஒகே?

ராதன்:- ஹெலோ போலீஸ் ஸ்டேஸன் இங்க மூனு பேருக்க இடையில நடந்த தகராறுல ஒருத்தர் மற்றவர துப்பாக்கியால சுட்டு உயிர் போன மாறி இருக்கு கொஞ்சம் சீக்கிரமா வாங்க! சங்கர் ஊர்ல எல்லாரும் துரையப்பா தான் பாரதிய கொல பண்ண பாலு கிட்ட சொன்னான்னு தெரிய படுத்தனும், அவனோட சேத்து என்னையும் தான்.

(இப்படியாக சம்பவ இடத்திற்கு போலீஸார் விரைந்து சென்றனர். பாலுவும், துரையப்பாவும் கைது செய்யப்பட்டனர். தனது பகையை தீர்த்து ராதனை பிணமாக்க வேண்டும் என நினைத்த பாரதியோ பிரேத பரிசோதனைக்கு பிணமாக எடுத்து செல்லப் படுகிறான். நாம் யாருக்கு எந்த விடயத்தில் தீங்கு செய்ய நினைக்கின்றோமோ அது இறுதியில் நமக்கே தான் வந்து சேரும். ராதன் உயிரோடு தான் இருக்கிறான். பாரதி இல்லாமல் இனியாவின் எப்படி வாழப் போகிறது? ராதன் இனியவை பார்க்க செல்வானா? ராஜன் இன்னும் ராதனை பழிவாங்க துடிப்பானா? விடைகளை அடுத்த காட்சியில் பார்க்கலாம். இன்றைய காட்சி இன்றுடன் முடிவடைகிறது. மீண்டும் அடுத்த காட்சியில் சந்திப்போம்.)

ஊமைக் காதல் தொடரும்.
இனியா ராதன்
FATHIMA BADHUSHA HUSSAIN DEEN
FACULTY OF ISLAMIC STUDIES AND ARABIC LANGUAGE
SOUTH EASTERN UNIVERSITY OF SRI LANKA

ஊமைக் காதல் நாடகம் காட்சி :06 களம்: நுவரெலியா தம்ரோ தோட்டம், தேயிலை உற்பத்தி நிலையம் மற்றும் ராஜனின் வீடு கதாபாத்திரங்கள்: இனியா (கதாநாயகி) ராதன் (கதாநாயகன்) அபி (இனியாவின் தங்கை) மேனகா (இனியாவின்…

ஊமைக் காதல் நாடகம் காட்சி :06 களம்: நுவரெலியா தம்ரோ தோட்டம், தேயிலை உற்பத்தி நிலையம் மற்றும் ராஜனின் வீடு கதாபாத்திரங்கள்: இனியா (கதாநாயகி) ராதன் (கதாநாயகன்) அபி (இனியாவின் தங்கை) மேனகா (இனியாவின்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *