சினிமாவில் சீரழியும் சமூகம்

  • 28

சின்னத்திரை தான் ஆனாலும்
மனிதனை சிந்திக்கவிடாத
சினிமாத் திரை

அன்று வீடுகள் மனங்கமழும்
குர்ஆனிய ஓதல்கள் ஒலித்ததே
இன்றோ நாள் முழுதும்
திரைக்காட்சி ஒலிக்கின்றது.

முற்பகல் சமையலும்
மாலைத்தேனீரும்
திரையோடு சுருங்கிவிட்டதே இன்று

விளம்பர இடைவேளையது
மஃரிப் தொழுகைக்கு
மனமின்றிச் சென்று வந்தே
நடுநிசி கடந்ததும்
நாளை திரையில் ஏது நடக்கும்
எதிர்பார்ப்புடன் நீழ்கின்றதே இன்றைய வாழ்வு

பெண்ணை தலைவியாக்கி
அவள் துணையை
கைப்பொம்மையாக்கி
வன்மங்களை காட்சிப்படுத்தி
விவாகரத்துக்கு வழி
வகுக்குதே சினிமாத்திரை

கலாசாரத்தை நாகரிகத்தை
பண்பாட்டை உடைத்தெறிந்து
நவஜாஹிலிய்யத்தை
தோற்றுவிக்குதே சினிமாத்திரை

ஆபாசத்தை அழகாக்கி
நேரத்தை வீணடித்து
சஞ்சலங்களை ஏற்படுத்தி
செலவினை அதிகரித்து
நிம்மதியை போக்கும்
சினிமாவில் சிக்கி
சீரழியத்தான் வேண்டுமா?
சிந்தியுங்கள் சொந்தங்களே!

Faslul Farisa Asadh
Second Year
FIA faculty
SEUSL

சின்னத்திரை தான் ஆனாலும்மனிதனை சிந்திக்கவிடாதசினிமாத் திரை அன்று வீடுகள் மனங்கமழும்குர்ஆனிய ஓதல்கள் ஒலித்ததேஇன்றோ நாள் முழுதும்திரைக்காட்சி ஒலிக்கின்றது. முற்பகல் சமையலும்மாலைத்தேனீரும்திரையோடு சுருங்கிவிட்டதே இன்று விளம்பர இடைவேளையதுமஃரிப் தொழுகைக்குமனமின்றிச் சென்று வந்தேநடுநிசி கடந்ததும்நாளை திரையில் ஏது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *