பழகுவதற்கு எளிதானவர் பாக்கியசாலி

  • 37

முஹம்மத் பகீஹுத்தீன்

சில மனிதர்கள் பழகுவதற்கு எளிதானவர்களாகவும் நெகிழ்வானவர்களாகவும் இருப்பார்கள். அது அவர்களிடம் காணப்படும் நல்ல குணமாகவே இருக்கும். உண்மையில் அவர்கள் பாக்கியம் நிறைந்த மனிதர்கள். சொர்க்கத்திற்கு அருகதை உள்ளவர்கள்.

அத்தகைய மனிதர்களுடன் கலந்துரையாடல் செய்வது எளிதானது. அவர்களுடன் கருத்துப் பரிமாறுவதும் எளிதாகவே இருக்கும். அவர்களிடம் ஏதாவது தேவையைக் கேட்பது எளிது. அவர்களை சந்திப்பில் கஷ்டங்கள் இருக்காது. அவர்களை திருப்திபடுத்துவது எளிதானது. எதையும் இலகுவாக புரிந்து கொள்வார்கள். எளிதானவர்கள் மன்னிக்க தெரிந்த மனம் உள்ளவர்கள். மனிதர்களுள் அவர்கள் மாணிக்கங்கள்.

அவர்களுடைய அணுகுமுறைகள் மிகுந்த பண்பாடு கொண்டது. பழகுவதற்கு இனிமையானவர்கள். அவர்களுடன் பணி செய்யும் போதும் பழகும் போதும் சுதந்திரமாக இயங்கலாம். தேவையில்லாமல் தொன தொனவென்று குறுக்கீடு செய்யமாட்டார்கள்.

எளிதானவர்களுடன் தொடர்பு கொள்வது கதைப்பது குறை நிறைகளை சரி செய்வது எல்லாமே இலகுவாக இருக்கும். நெருங்கும் போதே உள்ளத்தை திறந்து தருவார்கள்.

கடினமாவர்கள் இதற்கு மறுபக்கமாகவே இருப்பார்கள்.

கடினமான நபர்கள் புரிந்துணர்வு அவர்களிடம் கடினமானது. சமாளிப்பதும் கடினம். இங்கிதமாக அணுகுவதும் கடினம். திருப்தி செய்வதும் கடினம். எது செய்தாலும் அதற்கு எதிர்வினையாகவே செயற்படுவார்கள். அவர்களின் கடின குணம் அவர்களுக்கும் கஷ்டமானது, சுற்றியுள்ளவர்களும் கஷ்டமானது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் கூறினார்: “பழகுவதற்கு எளிதானவர், நெகிழ்வானவர் இங்கிதமாக மக்களுடன் நெருங்கிப் பழக இலகுவானவர் ஒவ்வொருவரும் நரகம் நுழைவது ஹராமாக்கப்பட்டுள்ளது.”

(திர்மிதி, ஸில்ஸிலா ஷஹீஹா-அல்பானி 2/649)

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் இலகுவாகவும் எளிதாகவும் நடந்து கொள்ளும் மனுதனை, தன் மீதுள்ள கடனை நேர்மையோடும் நாணயத்தோடும் நிறைவேற்றுபவனை, தனது உரிமையை மிகுந்த பண்பாட்டுடன் கேட்கும் மனிதனைய அல்லாஹ் சுவனத்தில் நுழையச் செய்வான்.

(ஸஹீஹூத் தர்கீப் – அல்பானி :1744)

யாஅல்லாஹ் எங்கள் அனைவரையும் பிறரோடு நல்ல முறையில் பழகுபவர்களாக ஆக்குவாயாக!

முஹம்மத் பகீஹுத்தீன் சில மனிதர்கள் பழகுவதற்கு எளிதானவர்களாகவும் நெகிழ்வானவர்களாகவும் இருப்பார்கள். அது அவர்களிடம் காணப்படும் நல்ல குணமாகவே இருக்கும். உண்மையில் அவர்கள் பாக்கியம் நிறைந்த மனிதர்கள். சொர்க்கத்திற்கு அருகதை உள்ளவர்கள். அத்தகைய மனிதர்களுடன் கலந்துரையாடல்…

முஹம்மத் பகீஹுத்தீன் சில மனிதர்கள் பழகுவதற்கு எளிதானவர்களாகவும் நெகிழ்வானவர்களாகவும் இருப்பார்கள். அது அவர்களிடம் காணப்படும் நல்ல குணமாகவே இருக்கும். உண்மையில் அவர்கள் பாக்கியம் நிறைந்த மனிதர்கள். சொர்க்கத்திற்கு அருகதை உள்ளவர்கள். அத்தகைய மனிதர்களுடன் கலந்துரையாடல்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *