கென்ஸர் – Cancer

  • 26

கவிதை சொல்லித்தான் – உன்
கொடூரம் சொல்ல
வேண்டுமென்பதில்லை
உன் பெயர் கேட்டதுமே
பதபதைத்து நிற்கும் – உள்ளங்கள்
இல்லாமலுமில்லை

பெரியவர்களை மட்டுமன்றி
சின்னஞ்சிறு
குழந்தைகளையும் கூட – நீ
உன் பிடியிலிருந்து
விட்டு வைக்கத்தவறவில்லை

புத்தகம் ஏந்த வேண்டிய கையில்
பல ரிபோட்களுடன்
வைத்தியசாலை வழியே
அலைந்து, சோர்ந்து
மருந்து அதனை
குடிக்கவும் முடியாமல்
கொப்பளிக்கவும் முடியாமல்

நோயாளி என்ற பட்டத்தை
அச்சிறு மனதில் புதைத்து
கனவுகள் யாவும் கலைத்து
வலிகள் பல கொடுத்து
உயிருடன் பிணமாக்கியவன் – நீயே

வாழ வேண்டிய வயதினிலே
வாலிபம் அதனைத்
தாண்டையிலே
உனக்கு இரையாகி
உருவம் குலைந்து
மாத்திரைகள் பல
உணவாகி
கண் முன் இருக்கும்
மரணத்தை – வெல்ல
நம்பிக்கை எனும்
கயிற்றில் தொங்கிக்
கொண்டிருப்போர் – பலர்
எல்லாம் இவை
எல்லாம் – உன்னால்

பேரக்குழந்தைகளை
கொஞ்சி விளையாட
வேண்டிய வயதில்
வைத்தியர் – அவர்
வரும் போதெல்லாம்
சிறு குழந்தை போல்
வீடு செல்ல
அனுமதி கேட்டு
நிற்கும் பெரியோரும்
இல்லாமலில்லை

உனக்கு மருந்தில்லை
என்றொரு காலம் போய்
தவணை முறையில் – பலருக்கு
வாழ்க்கைப் பிச்சை
போட்டுக் கொண்டிருக்கிறது
இன்றைய விஞ்ஞான
உலகின் – வைத்தியம்

இத்தனையும் பேசுமிவள்
உன்னால் ஒரு அழகிய உறவை
இழந்து நிற்குமொருத்தி…

சதீகா சம்சுதீன்
தொழிநுட்ப பீடம்
கொழும்பு பல்கலைக்கழகம்

கவிதை சொல்லித்தான் – உன் கொடூரம் சொல்ல வேண்டுமென்பதில்லை உன் பெயர் கேட்டதுமே பதபதைத்து நிற்கும் – உள்ளங்கள் இல்லாமலுமில்லை பெரியவர்களை மட்டுமன்றி சின்னஞ்சிறு குழந்தைகளையும் கூட – நீ உன் பிடியிலிருந்து விட்டு…

கவிதை சொல்லித்தான் – உன் கொடூரம் சொல்ல வேண்டுமென்பதில்லை உன் பெயர் கேட்டதுமே பதபதைத்து நிற்கும் – உள்ளங்கள் இல்லாமலுமில்லை பெரியவர்களை மட்டுமன்றி சின்னஞ்சிறு குழந்தைகளையும் கூட – நீ உன் பிடியிலிருந்து விட்டு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *