கடலே!

ஓ கடலே!
அடுக்கடுக்காய் வரும்
உன் அலைகளிடம் கேள்
ஏன் குழந்தை மனதை
அலைபாய செய்கிறாய் என்று?

அலையே
உன்னை அணைக்க
ஓடி வந்த பிஞ்சு
பாதங்களை கண்டதும்
ஏன் நீ கடலுக்குள்
ஒழிந்து கொள்கிறாய்?

உன்னுடன் கோபித்து
முகம் சுளிக்கையில்
மீண்டும் வந்து
பாதம் நனைக்கிறாய்

உள்ளம் குளிர்ந்து
உன்னை அள்ளி எடுத்து
முகம் நனைக்க
நினைக்கையிலே
சட்டென்று தூரம்
செல்கிறாய்

ஒரு வார்த்தையேனும்
சொல்லாமல்
ஏன் இந்த கண்ணாமூச்சி
ஆட்டம் உனக்கு?

கொஞ்சம் பாதம்
நனைத்து விட்டு
சென்றால் என்ன?
கடல்நீர் வற்றிவிடாது
கண்ணீர் தான் வற்றிவிடும்

Noor Shahidha
SEUSL
Badulla

3 Replies to “கடலே!”

Leave a Reply to Casino Leader Price Recrute Cancel reply

Your email address will not be published.