ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மாளிகாவத்தை, போதிராஜராம விகாராதிபதி ஊவதென்னே தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு

Sunday, January 3,
ஆயுதங்களை வைத்திருந்த குற்றச்சாட்டு நிரூபணமானதைத் தொடர்ந்து ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட, மாளிகாவத்தை, போதிராஜராம விகாராதிபதி ஊவதென்னே தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார்.

T56 துப்பாக்கிகள் இரண்டு, 50 கைக்குண்டுகள், 210 துப்பாக்கி ரவைகள் உள்ளிட்ட ஆயுதங்களை விகாரைக்குள் மறைத்து வைத்திருந்த குற்றம் நிரூபணமானதை அடுத்து, கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் கடந்த வருடம் ஜூன் 01ஆம் திகதி ஊவ தென்னே சுமண தேரருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

கடந்த 2010 ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில், ஜனவரி 02ஆம் திகதி, பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றிற்கு அமைய, குறித்த விகாரையை சுற்றி வளைத்த பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர், அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை கைப்பற்றியிருந்தனர்.

இவ்வழக்கில், ஊவ தென்னே தேரருடன், குற்றம்சாட்டப்பட்ட, அவ்விகாரையைச் சேர்ந்த மாவெல சுபோத தேரர், முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் என தெரிவிக்கப்படும் பீ. ராஜபாலன், கே. தமிழ்செல்வம், சந்தானம் சுப்ரமணியம் ஆகியோர், வழக்கு விசாரணைகளின் இடையில் குற்றச்சாட்டுகளிலிருந்து நிரபராதிகள் என நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3 Replies to “ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மாளிகாவத்தை, போதிராஜராம விகாராதிபதி ஊவதென்னே தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு”

  1. You could definitely see your expertise within the work you write.

    The world hopes for even more passionate writers such as you who are not afraid to say how they believe.

    At all times go after your heart.

Leave a Reply

Your email address will not be published.