மாற்றம் தந்த காலம்

  • 34

“நானும் எத்துன தடவை தான் கேக்குறது வொன்ட் கொபி ” எனும் தன் மகளது அலறல் சப்தத்திற்கு ஏற்ப பம்பரமாய் சுழன்று கொண்டிருந்தாள் தாய் அஸ்மா.

“இந்தாங்க மகள் கோப்பி” எனும் தன் தாயின் கருணையை பொருட்படுத்தாமல்,

“வர வர சொல்றது ஒன்னுமே வெளங்கமாடிக்கி. என்னட தலையெழுத்து இந்த வீட்டுல நம்ம பிறக்கனும்டு எழுதியிருக்கு சே.”

எனும் தனது நிலையை கடிந்து கொள்ளும் தன் இளவரசியின் வார்த்தைகளால் சுக்கு நூறாகிப் போனது அன்னை அஸ்மாவின் மனது.

“ஏன் மகள் இப்புடி எல்லாம் ஏசுறிங்க! காலைல கொஞ்சம் தலவருத்தம் அதான் வேலைமுடிய கொஞ்சம் லெட் ஆகிட்டு. அதுக்கு இப்பிடியா கோவப்படுறது” எனும் தன் தாயின் வார்த்தைகளை பொருட்படுத்தாமல்,

“சரி சரி. எல்லாத்துக்கும் ஏதாவது ஒரு காரணம் சொல்லி சாமாளிக்கிறதே ஒங்க வேலையா பெய்ட்டு. இப்ப ஒங்க கூட நின்டு கொஞ்ச எனக்கு டைம் இல்ல எனக்கு வகுப்பு இருக்கு இவினிங் தான் வருவன். நா பெய்ட்டு வாரன்.” என சொல்லியும் சொல்லாமலும் சென்று கொண்டிருந்தாள் அஸ்மாவின் மகள் ஆயிஷா!

தன் மகள் போன பாதையை வெறித்த வண்ணம் தான் பட்ட துயரங்களை எண்ணி கண் கலங்கியது அத் தாய் மனது. சிறு வயதிலே கணவனை இழந்து ஒரு குழந்தையின் தாயாகி அக் குழந்தைக்காகவே வாழும் தியாகி அஸ்மா. கணவனை இழந்த பிறகு தன் மகளின் நல் வாழ்விற்காய் கூலி வேலைகளை செய்து இன்று மகள் உயர் தரத்தில் கற்கும் அளவுக்கு மகளுக்காய் தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவள் அவள்.

அதனால் தான் தன் மகள் தன்னை நோகடித்தது அத்தாயின் மனதை மிகவும் ரணமாக்கியது. அனைத்தும் சரி ஆகிவிடும் எனும் நம்பிக்கையில் தன் மகளுக்காய் சமைத்து விட்டு வீட்டு வேலைக்கு தயாராகி சென்றாள் அன்னை அஸ்மா.

வகுப்பு முடிந்த பின்னர் தன் வீட்டில் தன் தாயுடன் ஏற்பட்ட முரண்பாட்டை தன் தோழி ஹனாவிற்கு விளக்கினாள் ஆயிஷா.

“ஒங்க வீட்டுல ஒரே சண்டையா தான் இருக்கு போல. ஆயிஷா! நமக்கு வேற இக்ஸாம் நெருங்கிட்டு. இந்த நேரத்துல நம்ம நல்லா படிக்கனும்! நா ஒன்னு சொல்லவா? நீயும் என்ன போல ஹொஸ்டல தங்கி படிக்கலாமே அங்க எந்த பிரச்சினையும் இருக்காது எனும் தன் தோழியின் கூற்றுக்கு இல்லடி உம்மா தனிச்சிருவாங்க என்னால ஹொஸ்டல் வர முடியாது” என தன் ஏழ்மையை மறைத்து பொய் சொன்னாள் ஆயிஷா. இருப்பினும் அவளுக்கு அவ் எண்ணம் சிறந்ததாகவே தோன்றியது.

வீடு வந்து சேர்ந்தவள் தன் தாய் சமைத்து வைத்த உணவை பார்த்து முகம் சுளித்தே போனாள்.

“என்னம்மா இது! நா என்ன மாடா? ஒரு கிழமையா கீரை தான் சாப்பாடு வேற ஒன்னும் கிடைக்கலயா ஒங்களுக்கு.” என தொடங்கவும்,

“இல்லமா கையில சல்லி இல்ல நாளைக்கு சம்பள நாள் நல்ல கறி வாங்குவோம்.” என தன் மகளை சமாதானம் செய்த தாயை பொருட்படுத்தாமல் அப்ப நா நாளைக்கே சாப்பிட்டுக்குறன் என தன் அறையை நோக்கி நடந்தாள் ஆயிஷா!

தன் மகளின் கோவத்திற்கு காரணம் புரியாது சமாதானம் செய்ய முனைகையில் அது மீண்டும் ஒரு சண்டையாகவே உருவெடுத்தது. இவ்வாறே காலங்கள் உருண்டோடின எனினும் ஆயிஷாவின் நடத்தைகள் தாய் அஸ்மாவின் மனதை ரணமாக்கிய வண்ணமே இருந்தது. இதன் இறுதி விளைவு ஆயிஷா விடுதியில் தங்கத் தயாரானாள். தன் தாய் எவ்வளவு கூறியும் கேட்காது சண்டையிட்டு தன் தோழி ஹனாவுடன் சென்று விடுதியில் தங்கினாள். அஸ்மாவின் வாழ்வு தன் மகளை நினைத்து கண்ணீரிலே கரைந்து கொண்டிருந்தது.

இச்சூழ்நிலையிலே நாட்டில் ஏற்பட்ட அசாதாரன சூழ்நிலையால் விடுதியில் தங்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டாள் ஆயிஷா! மீண்டும் தன் இல்லத்திற்கு செல்வதை வெறுத்தவளாய் தன் இருப்பிடத்தை அடைந்தாள் அவள். தன் அன்பு மகளுக்காய் காத்திருந்த தாய்கோ ஏமாற்றம் காரணம் அவளது சில முக சுழிப்புக்கள். மகள் வீட்டிற்கு வருவதை விரும்பவில்லை என அறிந்த அவள் தாய் மனம் ஏனோ விம்மியது.

நாட்கள் உருண்டோடின வீட்டிலே இருக்காது பம்பரமாய் சுற்றும் அவளை கொரோனாவின் ஊரடங்கு வீட்டிலே முடங்கச் செய்தது.

எவ்வாறு தான் நாட்களை நகர்த்தப் போகிறேனோ எனும் கேள்வியிலே வீடு வந்து சேர்ந்தவளுக்கு தன் தாயின் சில நடவடிக்கைகள் அதிர்ச்சி அடையச் செய்தன. காரணம் இதுவரை காலமும் தன்னை மாத்திரமே எண்ணி வாழ்ந்தவளுக்கு அன்று தான் அவள் தாயின் செயல்கள் ஒவ்வொன்றையும் கூர்ந்து கவனிக்க நேரம் கிடைத்தது. கொரோனா நோயே அச்சந்தர்ப்பத்தையும் அளித்தது.

அஸ்மா காலை எழுந்து மகளுக்காய் சமைத்து, மகளின் ஆடைகளை அலசி, வீடு பெருக்கி, பின்னர் ஊரடங்கு சட்டத்தையும் மீறி வீட்டு வேலைக்கு சென்று, வேலை முடித்து வீடு சேர்ந்ததும் இரவு உணவை தயாரித்து மகளுக்காய் தன்னை முழுவதும் அர்ப்பணிக்கும் ஓர் வேலைக்காரியாய் மாறி இருந்தாள்.

தாயின் இச் செயல்கள் ஆயிஷாவின் உள்ளத்தில் மாற்றத்திற்கான விதைகளை தூவின. தனக்காய் தன் தாய் படும் கஷ்டங்களை எண்ணி கலக்கமடைந்த ஆயிஷா,

‘என்ன உம்மா இப்பிடி மாடா உழைக்கிறாங்க
நா இது பத்தி யோசிச்சதே இல்லையே. உம்மாக்கு ஒரு தடவ கூட உதவி செஞ்சதுமில்லை. உம்மா இப்பிடி வேலை செய்றத என்னட சொன்னதும் இல்லை. இவ்வளவு எனக்காக கஷ்டப்படுரவங்கள விட்டா நா விடுதில தங்கினன். அவங்க மனச காயப்படுத்தினேன்.’ என தன்னையே நொந்து கொண்டாள் ஆயிஷா.

சரி இவ்வளவு நாள் தான் நா உம்மாவ மதிக்காம நடந்துட்டன் இனிமேலும் உம்மாவ கஞ்டப்படுத்தக் கூடாது உம்மா வேலை விட்டு வந்ததும் நா செஞ்ச தப்புகளுக்கு முதல்ல மன்னிப்பு கேக்கணும் அவங்களுக்கு நானும் கொஞ்சம் உதவி செய்யனும் அவங்களுக்காக நல்லா படிக்கனும். என முடிவு செய்தாள் ஆயிஷா!

இத் தருணத்தில் தான் தோழி ஹனாவின் அழைப்பு ஒலித்தது.

“சொல்லுங்க ஹனா! என்ன இந்த நேரத்துல கோல் பண்ணி இருக்கிங்க” எனும் பதிலுக்கு

“ஆயி ஆயிஷா உங்க உம்மா வேலை செஞ்சிட்டு இருக்கும் போது மயங்கி விழுந்துட்டாங்களாம் இப்ப ஆஸ்பத்திரில சேத்திருக்காம் நீங்க போய் பாருங்க” என கூறி முடியும் முன்னரே “உம்மா” என அலறிய வண்ணம் வைத்தியசாலையை அடைந்தாள் ஆயிஷா.

வைத்தியசாலையை அடைந்த அவளுக்கு கண்கள் குளமாகியது.

“டொக்டர் உம்மாக்கு இப்ப எப்படி இருக்கு ஏதும் பிரச்சினையா?” என கண்ணீருடன் வினவ ஒங்க உம்மாட உடம்புல போஷாக்கு இல்லமா அதான் மயக்கம் வந்திருக்கு நல்ல ஓய்வு வேணும் கொஞ்சம் கவனமா பாத்து கொள்ளுங்க. வேற ஒன்னும் இல்லை. என புன்னகைத்தவாரு விடை பெற்றார் வைத்தியர்.

சிறிய கலக்கத்துடன் தன் தாயை பார்க்க சென்றவள் தாயின் கோலம் கண்டு உறைந்து போனாள். அவள் தாய் கட்டிலுடன் ஒட்டிய நிலையில் உறங்கிக் கொண்டிருந்தாள். தன் தாயின் நிலைக்கு தானே காரணம் என கண் கலங்கிய போது மகளின் அழுகை சப்தம் கேட்டு விழித்தாள் அஸ்மா.

விழித்த தாயை கண்டதும் ஓடிச் சென்று,

“உம்மா என்ன மன்னிசிருங்கமா.”

என ஓலமிட்டாள் ஆயிஷா! அஸ்மாவின் கைகள் மகளை ஆறுதல் படுத்த கண்களோ ஆனந்தத்தில் கண்ணீரை சொறிந்தன. கொரோனாவின் ஊரடங்கு ஆயிஷாவின் மனதை முற்றிலும் முடக்கியது. தனது நல்ல செயல்களால் தாயை காக்கும் இரும்புத் திரையாய் மாறினாள் ஆயிஷா

Shima Harees
Puttalam karambe

“நானும் எத்துன தடவை தான் கேக்குறது வொன்ட் கொபி ” எனும் தன் மகளது அலறல் சப்தத்திற்கு ஏற்ப பம்பரமாய் சுழன்று கொண்டிருந்தாள் தாய் அஸ்மா. “இந்தாங்க மகள் கோப்பி” எனும் தன் தாயின்…

“நானும் எத்துன தடவை தான் கேக்குறது வொன்ட் கொபி ” எனும் தன் மகளது அலறல் சப்தத்திற்கு ஏற்ப பம்பரமாய் சுழன்று கொண்டிருந்தாள் தாய் அஸ்மா. “இந்தாங்க மகள் கோப்பி” எனும் தன் தாயின்…

2 thoughts on “மாற்றம் தந்த காலம்

  1. Those are yours alright! . We at least need to get these people stealing images to start blogging! They probably just did a image search and grabbed them. They look good though!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *