ஏக்கம்

நான் புன்னகைத்தேன்
உன் முகத்தில்
இருள் சூழ்ந்து கொண்டதால்
உன் அழு குரலை
கேட்க ஆவலுடன்
காத்திருந்தேன்

நீ இதழ் பிதுங்கி
அழுவாய் என
நினைத்தால்
இதழ் விரித்து
சிரித்துக்
கொண்டிருக்கிறாய்
ஏளனமாக

இப்போது
நான் அழுகிறேன்
ஏமாற்றத்தால்
என் கண்ணீரை
கண்டாவது
நீ அழ மாட்டாயா?

நீ அழுதால்
என் கண்ணீரும்
கானலாகும் என்பதை
நீ அறிவாயா?

ஓ மழையே!
உன் கண்ணீரால்
என்னை நனைத்து
முத்தமிட வருவாயா?
உன்னில் நனைந்து
உள்ளம் தொலைக்க
ஏங்கும் மழைக்குருவி நான்!

Noor Shahidha
SEUSL
Badulla

Leave a Reply

Your email address will not be published.