சருகான சட்டங்கள்

  • 11

பிணந்திண்ணிக் கழுகுகளின்
கைகளிலே அகப்பட்ட
சோசலிச சட்டங்கள்
சாய் மரமாய் இன்று
சரிந்தது சருகுகளாய்

சட்டம் தான் சரிந்ததென்று
சிந்திய கண்ணீர் இன்று
பிஞ்சவன் கருகியது கண்டு
இரத்தமாய் மாறியது

சீரழிந்த சட்டங்கள்
சீர்தூக்க யாருமில்லை
முடங்கிப் போன மூடர் மனதை
முறியடிக்க ஆளுமில்லை

ஜனநாயக பெயரை வைத்து
நடக்குதிங்கே நாட்டியங்கள்
சட்டங்கள் சாவடித்து
சரசமாய் புரியுதிங்கே

மனித குரல் உயரும் முன்னே
மக்களாட்சி வீழ்ந்ததின்றே
மனித நேயம் துளிர்க்கு முன்னே
மனித குணம் மறித்தின்றே

நீளுமா இக் காலம் – இல்லை
நிலைக்கும் ஓர் நியாயம்?
ஜனநாயகம் எனும் நாடகத்தில்
சிறைக் கைதிகளாய் நாம் இன்று

Shima Harees
Puttalam Karambe

பிணந்திண்ணிக் கழுகுகளின் கைகளிலே அகப்பட்ட சோசலிச சட்டங்கள் சாய் மரமாய் இன்று சரிந்தது சருகுகளாய் சட்டம் தான் சரிந்ததென்று சிந்திய கண்ணீர் இன்று பிஞ்சவன் கருகியது கண்டு இரத்தமாய் மாறியது சீரழிந்த சட்டங்கள் சீர்தூக்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *