சினிமாவும் சமூகமும்

  • 8

இன்று குழந்தை முதல் கிழவர் வரை குட்டி முதல் கிழவி வரை அடிமைப்பட்டு கிடக்கும் ஒரு விடயம் சினிமா. சினிமா எனும் மாயையில் மூழ்கிக் கிடக்கிறது முஸ்லிம் சமூகம். அன்று தாயின் மடியில் பள்ளிக் கூடம் என்பர். ஆனால் இன்று தெரியவில்லை. அன்று மார்க்கத்தைப் பற்றி பேசும் பள்ளிக் கூடங்கள். ஆனால் இன்று புரியவில்லை.

இன்றைய இளம் தலைமுறையினர் சினிமா, பாட்டு, கூத்து, நாடகம் இதை தவிர ஒன்றும் அவர்களின் வாழ்க்கையில் இல்லை. சினிமா மோகத்தில் அவர்கள் போல் நடை, உடை, பாவனை என காலத்தை கழிக்கும் அவல நிலை. மார்க்கத்தைப் படிக்க துளி கூட ஆசை இல்லை. சொல்லிக் கொடுத்தாலும் அலட்சியப் போக்கு!

இவர்கள் எங்கே செல்கிறார்கள்? இறைப் பாதையை நோக்கியா? இறைவனின் திருப்தியை நோக்கியா? நபியின் ஸுன்னாவை நோக்கியா? சுவனத்தை நோக்கியா? இல்லவே இல்லை! இனியும் தாமதிக்க வேண்டாம். சினிமா பைத்தியங்களாக இருக்கும் நீங்கள் இறைவனினதும் தூதரினதும் சொற்படி வாழுங்கள்.

அற்பமான இந்த உலக மாயையில் சிக்கிக் கொள்ளாதீர்கள் மறுமையில் வெற்றி அடைய போராடுவோம். இவ்வுலக வாழ்க்கை நிரந்தரம் இல்லை!

Nushra Aadham
Akurana
South eastern university of Sri Lanka

இன்று குழந்தை முதல் கிழவர் வரை குட்டி முதல் கிழவி வரை அடிமைப்பட்டு கிடக்கும் ஒரு விடயம் சினிமா. சினிமா எனும் மாயையில் மூழ்கிக் கிடக்கிறது முஸ்லிம் சமூகம். அன்று தாயின் மடியில் பள்ளிக்…

இன்று குழந்தை முதல் கிழவர் வரை குட்டி முதல் கிழவி வரை அடிமைப்பட்டு கிடக்கும் ஒரு விடயம் சினிமா. சினிமா எனும் மாயையில் மூழ்கிக் கிடக்கிறது முஸ்லிம் சமூகம். அன்று தாயின் மடியில் பள்ளிக்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *