எது எங்களை இழிவுப்படுத்தும்

  • 8

மனிதனுக்கு அல்லாஹ்வினால் கொடுக்கப்பட்டுள்ள அருட்கொடைகளுள் மிகப்பெரிய அருள் ஒன்றுதான் இந்த நாவாகும்.

ஒரு மனிதனின் கற்பனை, சிந்தனை ஆகியவற்றை சமூகத்திற்கு முன்வைக்கின்ற ஒரு ஊடகமாகவே இந்த நாவு காணப்படுகின்றது.

இந்த நாவு ஒரு மனிதனை சுவனவாசியாக மாற்றும் அதேவேளை அதே மனிதனை நரக வாசியாகவும் மாற்றும் ஆற்றல் மிக்கதாய் காணப்படுகின்றது.

இந்த நாவினால் நன்மைகள் செய்யும் அதே சந்தர்ப்பத்தில் பல கோடிக்கணக்கான பாவங்களையும் மனிதன் செய்கின்றான்.

இந்த பாவங்களில் முக்கியமானதொன்றே புறம் பேசுவது ஆகும்.

அல்லாஹ் அல்குர்ஆனிலே புறம் என்றால் என்ன? அதற்கான தண்டனை என்ன? அதை விட்டும் அடியார்கள் எவ்வாறு தவிர்ந்து இருக்க வேண்டும்? என்றெல்லாம் கூறுகின்றான்.

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

“அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கின்றேன்.(துவங்குகிறேன்)

وَيْلٌ لِّـكُلِّ هُمَزَةٍ لُّمَزَةِ ۙ‏

“குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான்”. (அல்குர்ஆன் : 104:1)

اۨلَّذِىْ جَمَعَ مَالًا وَّعَدَّدَهٗ ۙ‏

(அத்தகையவன் செல்வமே சாசுவதமென எண்ணிப்) பொருளைச் சேகரித்து எண்ணிக் கொண்டே இருக்கின்றான்” (அல்குர்ஆன் : 104:2)

يَحْسَبُ اَنَّ مَالَهٗۤ اَخْلَدَهٗ‌ ‏

“நிச்சயமாகத், தன் பொருள் தன்னை (உலகில் நித்தியனாக) என்றும் நிலைத்திருக்கச் செய்யுமென்று அவன் எண்ணுகிறான்.” (அல்குர்ஆன் : 104:3)

كَلَّا‌ لَيُنْبَذَنَّ فِى الْحُطَمَةِ ‏

“அப்படியல்ல, நிச்சயமாக அவன் ஹுதமாவில் எறியப்படுவான்.” (அல்குர்ஆன் : 104:4)

 وَمَاۤ اَدْرٰٮكَ مَا الْحُطَمَةُ‏

“ஹுதமா என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது?” (அல்குர்ஆன் : 104:5)

نَارُ اللّٰهِ الْمُوْقَدَةُ ۙ‏

“அது எரிந்து கொண்டிருக்கும் அல்லாஹ்வின் நெருப்பாகும்” (அல்குர்ஆன் : 104:6)

الَّتِىْ تَطَّلِعُ عَلَى الْاَفْـــِٕدَةِ ‏

“அது (உடலில் பட்டதும்) இருதயங்களில் பாயும்” (அல்குர்ஆன் : 104:7)

اِنَّهَا عَلَيْهِمْ مُّؤْصَدَةٌ ۙ ‏

“நிச்சயமாக அது அவர்களைச் சூழ்ந்து மூட்டப்படும்”. (அல்குர்ஆன் : 104:8)

فِىْ عَمَدٍ مُّمَدَّدَةٍ‏

“நீண்ட கம்பங்களில் (அவர்கள் கட்டப்பட்டவர்களாக)”. (அல்குர்ஆன் : 104:9)

இம் முழு ஸூறாவின் மூலமாக புறத்தைப் பற்றி இறைவன் எங்களுக்கு மிக தெளிவாக கூறிவிட்டான். ஆனாலும் நாங்கள் அதை தவிர்ந்து வாழ்கின்றோமா? என ஒரு கணம் சிந்தனை செய்து பார்க்க வேண்டும்.

புறம் பேசுவது ஒரு பெரும்பாவமாக இஸ்லாம் எங்களுக்கு கூறியுள்ள அதே நேரத்தில் நாங்களோ அதன் பாரதூரத்தை விளங்காமல் விளையாட்டிக் கொண்டிருக்கின்றோம்.

அபூ ஹுரைரா (ரழியல்ஸாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஸஹாபாக்களிடத்தில் புறம் என்றால் என்னவென்பதாகக் கேட்டார்கள். அதற்கு, ஸஹாபாக்கள் கூறினார்கள். அல்லாஹ்வும் அவனது தூதரும் தான் அறிவார்கள் என்பதாக, அதற்கு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். உனது சகோதரன் வெறுப்பதை நீ கூறுவதுதான் புறம் என்றார்கள். அதற்கு ஸஹாபாக்கள் கேட்டார்கள். என்னுடைய சகோதரனிடம் இருந்தால் அதுவும் புறமா? ஆம்! அவ்வாறு இருந்தால் அது புறமாகும். இல்லாவிடின் அது அவதூறாகும் எனக் கூறினார்கள். (முஸ்லிம் 5048,புகாரி 5006)

எனவே நாவைக் கட்டுப்படுத்தி நரகத்தை தவிர்க்க வேண்டும். நமக்கு தெரியாத விடயங்களை பற்றி நாம் பேசக்கூடாது. ஒருபோதும் வதந்திகளைப் பரப்ப கூடாது. ஆதாரம் அற்ற எமக்கு ஆழ்ந்த அறிவில்லாத விடயங்களை பேசக் கூடாது.

நாம் பேசக் கூடிய அனைத்து விடயங்ஙளும் பதியப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

இவைகளை நன்றாக விளங்கி எமது நாவுகளின் நாசத்தை விட்டும் பாதுகாத்து சுவனத்தை அடையக் கூடிய நாவுகளாக மாற்றி அமைக்க நாம் முயற்சி செய்யவது நம் ஒவ்வொருவரினதும் பொறுப்பாகும்.

NAFEES NALEER (IRFANI)

மனிதனுக்கு அல்லாஹ்வினால் கொடுக்கப்பட்டுள்ள அருட்கொடைகளுள் மிகப்பெரிய அருள் ஒன்றுதான் இந்த நாவாகும். ஒரு மனிதனின் கற்பனை, சிந்தனை ஆகியவற்றை சமூகத்திற்கு முன்வைக்கின்ற ஒரு ஊடகமாகவே இந்த நாவு காணப்படுகின்றது. இந்த நாவு ஒரு மனிதனை…

மனிதனுக்கு அல்லாஹ்வினால் கொடுக்கப்பட்டுள்ள அருட்கொடைகளுள் மிகப்பெரிய அருள் ஒன்றுதான் இந்த நாவாகும். ஒரு மனிதனின் கற்பனை, சிந்தனை ஆகியவற்றை சமூகத்திற்கு முன்வைக்கின்ற ஒரு ஊடகமாகவே இந்த நாவு காணப்படுகின்றது. இந்த நாவு ஒரு மனிதனை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *