ஸூம் (Zoom) அவலங்கள்

  • 7

ஒரு வருட காலமாக அதிகமாக கேள்விப்பட்ட எரிச்சல் ஊட்டக் கூடிய ஒரு வார்த்தை என்றால் அது ஸூம் ஆக தான் இருக்கும். ஆரம்பத்தில் இந்த ஸூம் வகுப்புக்கள் சுமாராக இருந்தாலும், போகப் போக வேப்பங்காயாக கசத்து விட்டது எனலாம்.

ஸூம் வகுப்புக்கள் ஒவ்வொருவருக்கும் வித்தியாசமான பல அனுபவங்களை அள்ளிக் கொடுத்திருக்கும் என்பது மட்டும் உண்மை. ஸூம் வகுப்புக்களால் மாணவர்களாகிய நாம் பயன் அடைகின்றோமோ இல்லையோ, ஸூம் உரிமையாளர், செறிவட்டை (sim) நிறுவனங்கள் எம்மைக் கொண்டே பிழைப்பை ஓட்டுகின்றது என்பது நிதர்சனம்.

ஸூம் உரிமையாளர் அதனைக் கண்டு பிடிக்க முன்னர் சிறு தவறொன்றை விட்டுவிட்டார் போலும். ஸூமில் இணைந்துள்ள நிலையில் வேறு எந்த சமூகவலைத்தளங்களும் பயன்படுத்த முடியாது என்ற ஒரு தெரிவை (Option) கொண்டு வந்திருந்தால் கற்பிப்பதில் பாதியாவது விளங்கும் என்பது உண்மை. இந்த ஸூம் வகுப்புக்களில் தான் தூக்கமும் பசியும் அதிகமாக வருகின்றது. இயற்கையைக் கட்டுப்படுத்த யாரால் முடியும். அதற்கு அடி பணிவது தான் ஒரே வழி.

எமக்கு அதிகமாக பொறுமையைக் கையாளக் கற்றுக் கொடுத்ததும் இந்த ஸூம்தான். குறிப்பாக அதிலும் இலங்கையைப் பொறுத்த வரையில் டயலொங் (Dialog) நிறுவனத்திற்கு விருதே வழங்கி விடலாம். பொறுமையை கற்றுக் கொடுத்ததற்கும், பொதியென்ற (Package) பெயரில் தரவுகளை (Data) திருடுவதற்கும்.

வரவுக்காக (Attendence) வேண்டி வகுப்புக்களில் இணைந்து விட்டு பின்னர் வேறு வேலைகளில் இருக்கும் பட்சம் ஏதாவது கேள்விகள் கேட்பார்கள். அச் சந்தர்ப்பத்தில் எம்மைக் காப்பாற்ற ஆர்வ அறிவாளிகள் இருக்கும் வரை எமக்கு அச்சமில்லை.

செயற்பணிகள் (Assignment) தருகின்ற வேலைகளில் தான் துழாவுகை (Coverage) தன் கைவரிசையைக் காட்டும். அச் சந்தர்ப்பத்தில் தான் கொரோனா மீதுள்ள கொலைவெறி இன்னும் அதிகமாகும். காலையில் எழுந்ததும் சற்று தயக்கத்துடனே தொலைபேசியைப் பார்ப்போம், எந்த பாடத்தில் என்ன குண்டு வெடிக்கப் போகின்றது என்ற அச்சத்தில்.

இரவில் எவ்வளவு உறங்க முயற்சித்தாலும் எனக்கு உறக்கமே வருவதில்லை. ஸூம் வகுப்பின் அருமை அப்பொழுது தான் புலப்படும். அதில் ஏதாவது ஒரு பாடத்தை இரவில் நடாத்தினால் நன்றாக தூங்க முடியுமல்லவா? இதனால் தூக்கப் பிரச்சனையும் குறைந்து விடும்.

அத்தோடு இந்த ஸூம் Zoom class இல் எம்மைப் பெரிதும் பாதுகாப்பது ஒலி முடக்கு (Audio mute), காணொளி முடக்கு (video mute) தான். ஒரு வேளை இந்த   ஸூம் நிறுவன ஸ்தாபகர் எங்கயாவது வாங்கி கட்டியிருப்பார் போலும். அதனால் தான் தான் அனுபவித்த கஷ்டத்தை மற்றவர்களும் அனுபவிக்க கூடாது என்ற முடிவில் இந்த இரண்டு தெரிவையும் கொண்டு வந்திருப்பார் என்பது எனது ஊகம். இந்த இரண்டும் இல்லாவிட்டால் அப்படியே நம் மானமும் விமானம் ஏறியிருக்கும்.

ஒரு வேளை இந்த ஸூம் உரிமையாளர்தான் கொரோனாவை உருவாக்கி இருப்பானோ இதெல்லாம் வியாபர தந்திரமோ என்றெல்லாம் நான் அவ்வப்போது நினைத்துக் கொள்வேன்.

எல்லாவற்றையும் விட கொடுமையானது ஸூம் வகுப்பு நிறைவடைந்த பின் சந்தேகம் கேட்பதுதான். நமக்கு வாழ்க்கையே சந்தேகம் தான் இதில் பாடத்தில் மட்டும் விதி விலக்கல்லவே.

இவ்வாறு ஸூமில் கற்போர் அனைவரும் பல வகையில் அனுபவங்களைப் பெற்றிருப்பார்கள். சும்மா ஒரு மதிப்பீடு செய்தால் 100% ஸூம் வகுப்பில் 30% ஸூம், 40% வட்ஸ்அப், 30% ஏனைய சமூக வலைத்தலங்கள் என்றே கணக்கிடலாம். குறிப்பாக இதிலும் 100%உம் ஸூமில் இருப்பவர்களும் உள்ளனர். ஒரு வேளை அவர்கள் தான் வருங்கால ஐன்ஸ்டீன் களாய் மிளிரப் போகின்றார்களோ.

எவ்வாறு இருப்பினும் நம் நிலமை இவ்வாறு ஸூம் உடனே போனால் நான் பட்டதாரிப் பட்டத்தை (Digree) வாங்குகின்றோமோ இல்லையோ ஸூம் உரிமையாளர் அம்பானியாகி விடுவான் இது நிச்சயம்.

இவ்வாறு விதி வரைந்த கோட்டின் வழியே விடை தெரியாமல் பயணிக்கின்றது எம் பல்கலைக்கழக வாழ்க்கையும்.

Mishfa Sadhikeen
SEUSL

ஒரு வருட காலமாக அதிகமாக கேள்விப்பட்ட எரிச்சல் ஊட்டக் கூடிய ஒரு வார்த்தை என்றால் அது ஸூம் ஆக தான் இருக்கும். ஆரம்பத்தில் இந்த ஸூம் வகுப்புக்கள் சுமாராக இருந்தாலும், போகப் போக வேப்பங்காயாக…

ஒரு வருட காலமாக அதிகமாக கேள்விப்பட்ட எரிச்சல் ஊட்டக் கூடிய ஒரு வார்த்தை என்றால் அது ஸூம் ஆக தான் இருக்கும். ஆரம்பத்தில் இந்த ஸூம் வகுப்புக்கள் சுமாராக இருந்தாலும், போகப் போக வேப்பங்காயாக…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *