போற்றும் மாற்றம்

மாற்றத்திற்கான மர்மம்
மறைந்தே இருக்கிறது
மாயமாய் இல்லை- என்றும்
மாற்றனும் என எண்ணம் கொண்ட மனிதருக்கெல்லாம்
அது மலிவாய் கிடைப்பதில்லை

காலத்தின் கடமை இதோ இல்லை
காயத்தின் கரையாய் வந்த ஆழம் அதோ
மாற்றம் ஒன்றே மாறாதது உண்மை

மறுமை எண்ணமும் மாநபி வண்ணமும்
மனதில் உறுதியும் ஒருநாள்
மல்லிகையாய் மாற்றம் மலரும்

காலம் நகரும் கவலையும்
கணப்பொழுதாகும் கடிகார முள் மாறும்
முடக்கும் அதிகாரமும்
மூடநம்பிக்கையும் முடியும்

அந்நாள் நீ விரும்பிய மனிதம்
கிடைக்கும் திருநாள்
உன்னை உலகம் போற்றும் அம் மாற்றம்

மாலையிட ஒரு மாலை
மனதில் இடம்பிடிக்கும் ஓர் காலை
மனிதம் மிதந்த மாதுவாய் மலரும் ஓர் சாலை

மங்கை என்ற பெயர் சொல்ல
போற்றும் அம் மாற்றம்
இறைவரம் இருக்க இதயம் துணைநிற்க

இனி எதற்கு இதயச் சுமை
இனியும் வேண்டாம் இந்த வெறுமை
கஷ்டம் கனக்கும் கவலை எல்லாம்
காற்றாய் பறக்கும் காலம் சிறக்கும்
மனிதனாய் நீ போற்றும் அம் மாற்றம்

Noor Shahidha
SEUSL

Leave a Reply

Your email address will not be published.