இந்த ஓவியமெல்லாம் காதலத்தான பேசுது

அவளோடு சில நொடிகள்
தொடர் – 09

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஓட்டமாவடியில் உள்ள அந்த பெரிய வீட்டு முற்றத்தில் இளைப்பாறியது கியாசின் கார்.

புதுப் பெண் மாப்பிள்ளையை வரவேற்பதற்காக காத்திருந்த அவனுடைய சொந்த பந்தங்களுக்கு அவர்களின் வருகை பேரானந்தத்தையும் பெரும் மகிழ்ச்சியையும்
கொடுத்தது.

கியாசின் சகோதரர்கள் இருவரும் பசியாவைக் கைப்பற்றாக உள்ளே அழைத்து வந்தார்கள். துணை யாரும் அற்றவன் பேல் அப்பாவியாக உள்நுழைந்தான் கியாஸ். வாழ்க்கையினுடைய சாலைகள் விரிந்து கொடுக்கிறது வடுக்கள் ஆராமலே அப்படித்தான் இருந்தது அவனுக்கும். அவனுடைய நிலையில் அவன் வெறுமையை உணர்ந்தான். அதனால் அவனுடைய வாழ்க்கையை ரசிக்க முடியாத நிலைக்கும் தள்ளப்பட்டான்.

இனியென்ன திருமண வீட்டில் வழமை போல் பெண் மாப்பிள்ளையை சீண்டி விளையாடுவதுதான் பசியாவின் வீட்டில் அதற்கான வாய்ப்பு கிடைக்கவே இல்லை. கியாஸ் ஏற்காவிட்டாலும், வந்த மருமகளுக்காக அவளை ஒரு தோழி போல் சீண்டிக் கலாய்க்கத் தொடங்கினார்கள் வீட்டின் மூத்தவள் ஜெஸீறாவும் இளையவள் நஸீஹாவும்.

அவர்கள் இருவரும் மூத்த சகோதரனை விட கியாஸின் மீதே அளப்பெரிய அன்பு வைத்திருந்தார்கள் அதே அன்பினை குறைவின்றி பசியாவிலும் கொண்டாடித் தீர்க்க காத்திருந்தவர்களுக்கு தகுதியாகத்தான் பசியாவும் வந்து வாய்த்தாள்.

பசியா இயல்பிலேயே குறும்புத் தனங்கள் நிறைந்தவள். ஒரு விளையாட்டுப் பிள்ளை போல் தான் அவள் என்று கூட சொல்லலாம். அந்த விளையாட்டுப் பிள்ளையின் வாழ்க்கையில் விதி ஆடப்போகும் விளையாட்டு தான் கொஞ்சமா.

ஏ”விளையாடினது போதும் நம்ம வீட்டுக்கு வந்திருக்கா கூட்டிக்கிட்டு போய் வீட்ட சுத்திக் காட்டுங்க. மறுவா அவ ட்ரெஸ் சேன்ச் பண்ணிக்கிட்டு ரெஸ்ட் எடுக்கட்டும் கியாஸ் ரூமையும் காட்டுங்க பாவம் காலை இருந்து ரெஸ்டே இல்லாம இருந்திருப்பா.” என்றார் ஜெஸீறாவின் தாயார்.

“ஆ ஆ ஆ சரிம்மா. மைனி இப்போதாவது சோபாக்கு ரெஸ்ட் குடுங்க” என்று சொல்லிச் சிரித்தாள் நஸீஹா.

பழக்கப்படாத வீடு புதுப் புது முகங்கள் இது அவளுக்கு புது அனுபவம். புதுமையான உணர்வு. வீடு முழுக்க பசியாவை சுற்றி காட்டி விட்டு கடைசியாக மாடியில் உள்ள ஒரு அறையின் கதவைத் திறந்தாள் ஜெஸீறா.

“இதான் மைனி நானாட ரூம். சோரி சோரி உங்கட ரூம்.” என்று நகைத்தாள் நஸீஹா.

கியாஸின் அறைக்குள் நுழைந்தாள் பசியா. சுற்றும் முற்றும் சுவர்களையே பார்த்தவளாக மெய் மறந்து போனாள் பசியா. சாதாரணமான ஒருவனின் அறையல்ல அது ஆண்டாண்டு காலமாய் காத்திருந்த காதலொன்று உறங்கிக் கிடந்தது. அந்த அழைக்கும் கியாஸுக்கும் எந்த சம்மந்தமும் இல்லாதது போல் இருந்தது பசியாவுக்கு.

ஆம் அது ஒரு காதல் வரப்பட்ட ஓவியனின் அதைதான். அந்த அறை முழுவதும் பறைசாற்றின சொல்லப்படாத அவன் காதலை. மறக்கடிக்கப்பட்ட அவனது உணர்வுகளை ஏக்கத்தை எதிர்பார்ப்பை என எத்தனையோ அந்த ஒரு அறைக்குள் அடங்கிக் கிடந்தது.

“என்ன பசியா வெச்ச கண் வாங்காம சுவரையே பாத்துகிட்டு இருக்கிங்க. இதெல்லாம் கியாஸ் பண்ணி ஆர்ட் தான். சேர் வேற லெவல். சின்ன வயசுல இருந்தே அவனுக்கு ஆர்ட் பண்றதுல அவளது ஒரு இன்ரெஸ்ட். இங்க பாருங்க இந்த கபோட்ல இருக்கும் கப், அவார்ட் எல்லாம் அவனுக்கு கிடச்சது தான்.”

என்று அடுக்கடுக்காக தம்பி புராணம் பாடினாள் ஜெஸீறா. அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்கு போல இருந்தது பசியாவுக்கு. அவள்தான் வர்ண ஓவியத்திற்கு வசியப்பட்டு நின்றாளே.

அவளுக்கு இது போல் கைத் திறமையெல்லாம் இல்லை ஆனால் மிகையான ரசனை இருந்தது. அதிலும் மௌனமான கதைகளைத் தாங்கி நிற்கும் ஓவியங்கள் எழுத்துக்கள் மீது அவளுக்கு தீராக் காதல் என்றே சொல்லலாம்.

தோற்புயத்தை பிடித்து ஜெஸீறா உசுப்பியதும் சுய நினைவிற்குள் மீண்டாள் பசியா.

“இதல்லாம் யார் ஆர்ட் பண்ணது திரும்பத் திரும்ப பாக்கனும் போல ரசனை ஈர்க்குற மாதி பண்ணிருக்காங்க.” என்றாள் பசியா.

“அது சரி இவளவு நேரமா இதப் பத்தி நான் சொன்ன ஒன்டும் உங்கட காது விழல்ல என்ன ஓகே.” என்று நம்பி புராணத்தை மறுபடியும் பசியாவினிடத்தில் பாடித் தீர்த்தாள்.

“பசியா உம்மா கூப்புர்றாங்க நான் போறன். நஷீமா நீ நின்று வா.” கூறிவிட்டு நகர்ந்தாள் ஜெஸீறா.

“நஸீஹா ஒன்று கேக்கட்டுமா?”

“ஆ கேளுங்க.”

“உங்க நானாகண்டுள்ள இவளவு ரசனை இருக்கா. பாத்தா அப்புடி விளங்குதே இல்ல ஒரு ரசனையே இல்லாத ஆள் பாதி தானெ விளங்குறாரு.”

“அவன் ரசனை இருக்கே அது ஒரு விதமான அழகு. எல்லாத்தையும் எல்லாராலயும் ரசிக்க முடியாது. அவன் ரசிப்பான். அவன்ட உள்ளத்துல தோனுற எண்ணத்த ஓவியமா வரஞ்சிடுவான். அவன்ட ஓவியத்துக்குள்ளயெல்லாம் எப்புயுமே ஏதோ ஒரு இத படுத்தி கிடக்கும். அத ரசிக்கிறவங்களால தான் உணர முடியும்.”

“அப்புடிண்டா இந்த ஓவியமெல்லாம் காதலத்தான பேசுது? அத என்னால உணர முடியுது. உங்க நானா இதல்லாம் அவருக்காகவே ஆர்ட் பண்ணினாறா இல்ல.”

என பசியா குறும்புத்தனமாக இழுத்ததில் அவள் கேட்க வந்த விடயத்தை புரிந்து கொண்டாள் நஸீஹா. அவளுக்கு பசியாவின் வெளிப்படையான பேச்சு பிடித்திருந்தது. நஸீஹாவிடம் பசியா இவளவு நெருக்கமாக பேசக் காரணம். பசியாவை பெண் பார்த்து விட்டு வந்ததில் இருந்து நஸீஹா பசியாவோடு தொலை பேசி மூலமாக நெருக்கமானாள். அவர்கள் இருவருக்கும் சம வயதாகவே இருந்தது. பேச ஆரம்பித்த சில நாட்களிலேயே நல்ல நட்பும் மலர்ந்தது அவர்களுக்குள்.

“கரக்டா புடிச்சிகிட்டிங்க. இது அவன் அவனுக்காக பண்ணி ஆர்ட் இல்ல. இது எல்லாமே அவன்ட உள்ளத்துல மறஞ்சி கிடந்த காதல் வெளிப்பாடு. அதுசரி கியாஸ் உங்களுகிட்ட இதலாம் பத்தி ஒன்டும் சொல்லலயா.” இடைலயே நிறுத்திக் கொண்டாள் நஸீஹா.

“இல்ல ஒன்டும் சொல்லலியே.”

பசியாவின் பதிலில் ஒரு வித பயம் மிளிர்ந்தது. அவள் போல் எதுவும் இருந்து விடக் கூடாது என அவளுடைய உள்ளம் அடித்துக் கொண்டது.

“சொல்லாம விடமாட்டான்னுதான நான் நினச்ச. எப்புடி உங்களுகிட்ட சொல்லாம விட்டான். ரெண்டு பேரும் பேசிக்குறதுக்கும் நிறைய டைம் கிடச்சிருக்குமே. உங்க ரெண்டு பேர படத்தின் விசயங்கள் எப்புடியும் செயார் பண்ணிதானெ இருப்பிங்க.”

அடுக்கடுக்காக கேள்விகளைத் தொடர்ந்தாள். நஸீஹா பசியாவுக்கு இன்னும் பயம் அதிகமானது. கடந்த இரண்டு நாட்களும் அவள் அவதானித்த கியாசின் நடத்தையில் அவளுக்குள் பல கேள்விகள் அந்த சொற்ப நிமிடத்திற்குள் தோன்றின.

“நீங்க சொல்ல வாரதே விளங்குதில்ல தெளிவா சொல்லுங்க.”

“தெளிவா சொல்றன்டா  கியாஸ் லைப்லயும் ஒரு லவ் ஸ்டோரி இருந்திச்சி.”

தொடரும்
ஏரூர் நிலாத்தோழி

Comments are closed.