அழியாது எம் ஆன்மா

  • 10

நீதியும் நியாயமும்
இங்கே நீர்மூலமாக

மனிதனும்
மனித நேயமும்
மாண்டுவிட்டன

சில சந்தர்ப்பவாதிகளின்
சொல்லும் செயலும்
மாறிவிட்டன

உணர்வுகளும்
உரிமைகளும்
ஊமையானது இங்கே

இனமும் மதமும்
இரத்த நாளங்களில்
ஊறிவிட்டன

அக்கிரமும் அநீதியும்
ஆழ்கின்றது

வெறுப்பும் சூழ்ச்சியும்
சுற்றி விடப்பட்டுள்ளது

தப்பு செய்தவர்கள்
தப்பிக்க
அப்பாவிகள்
அகப்பட்டுள்ளனர்

அன்பும்
அஹிம்சையும்
காணமல் போக
நியாயவாதிகள்
நிர்கதியாக

சோதனையா
வேதனையா
எம் நடத்தையிலே

உன்னிலும் என்னிலும்
வித்தியாசங்கள் பல
ஆனால்
இறப்பும் பிறப்பும்
இறை நியதி

சுட்டாலும் புதைத்தாலும்
அழியாது எம் ஆன்மா

நாம்
வாழ்ந்தாலும்
மாண்டாலும்
அழியாது எம்
கொள்கை

வேற்றுமையில்
ஒற்றுமையே
பல்வகைமையின்
சிறப்பு!

Rushdha Faris
South Eastern University of Sri Lanka.

நீதியும் நியாயமும் இங்கே நீர்மூலமாக மனிதனும் மனித நேயமும் மாண்டுவிட்டன சில சந்தர்ப்பவாதிகளின் சொல்லும் செயலும் மாறிவிட்டன உணர்வுகளும் உரிமைகளும் ஊமையானது இங்கே இனமும் மதமும் இரத்த நாளங்களில் ஊறிவிட்டன அக்கிரமும் அநீதியும் ஆழ்கின்றது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *