விடியல்

  • 13

சில பிரிவுகளின் தூரம்
நீண்டது வானத்தை போல
சில பேச்சுக்கள் மறைந்து
போனது கானலாக

அருகில் இருந்தாலும்
அருகாமையை தேடும் மனம்
தொலைவில் இருந்தும்
ஒரு போதும் நட்பை தேடவில்லை

புரிந்துணர்வுகள் தவறாக
புரியப்பட்டதால்
இருண்டது நட்பு வானம்

இருளை போக்க
ஒளி விளக்கு கிடைத்தாலும்
தீபம் ஏற்ற இயலவில்லை

ஏனெனில் காற்று வந்து
அணைத்திடும் என்பதால்
இருண்ட வானம் தான்
விடியலை தருகிறது

இங்கு தீபம் தேவையில்லை
விடிவு தான் தேவை
அது புரிதலில் மறைந்துள்ளது

Noor Shahidha
SEUSL
Badulla

சில பிரிவுகளின் தூரம் நீண்டது வானத்தை போல சில பேச்சுக்கள் மறைந்து போனது கானலாக அருகில் இருந்தாலும் அருகாமையை தேடும் மனம் தொலைவில் இருந்தும் ஒரு போதும் நட்பை தேடவில்லை புரிந்துணர்வுகள் தவறாக புரியப்பட்டதால்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *