மழையின் காதல்

  • 9

கருமேகத்தில் காத்திருந்த பிறகு
பல எதிர்ப்பார்ப்புகளுடன்
பூமியை நனைக்க வந்தேன் மழையாக

இல்லை இல்லை
பூமியில் பவனி வரும்
என் குட்டி தேவதைக்கு
செல்ல முத்தம் கொடுக்க
ஆவலோடு வந்தேன்

ஆனால் என்னவானது
என் வருகையைக் கண்டவள்
உடனே குடையைப் பிடித்து விட்டாள்
என் முகம் காணாது

கவலையில் கலங்கிப் போனேன்
ஏமாற்றத்தால்
என்னை அவளுக்கு பிடிக்கவில்லை
என்றும் கூற முடியாது தான்

பிறகு எதற்காக என்
சாளரை மட்டும் ரசிக்கிறாள்
விடைபெறுவோம் என்று
நான் நினைக்கையிலே
அவள் குரல் என்னை
சிலிர்க்க வைத்தது

ஓ மழையே
சோ வென்ற அடைமழையாய்
நீ பொழிந்தாள்
நான் எப்படி நனைவது
நனைந்தால் எனக்கு
ஜுரம் அடிக்காதா

மெதுவாக சாளராய்
பொழிய மாட்டாயா
குடை பிடித்ததால் எனை
கோபித்து செல்கிறாயே

அதிகமாக அன்பு காட்டாதே
மூச்சு திணறி விடுவேன்
அளவாக காட்டு உணர்ந்து கொள்வேன்

Noor Shahidha
SEUSL
Badulla

கருமேகத்தில் காத்திருந்த பிறகு பல எதிர்ப்பார்ப்புகளுடன் பூமியை நனைக்க வந்தேன் மழையாக இல்லை இல்லை பூமியில் பவனி வரும் என் குட்டி தேவதைக்கு செல்ல முத்தம் கொடுக்க ஆவலோடு வந்தேன் ஆனால் என்னவானது என்…

கருமேகத்தில் காத்திருந்த பிறகு பல எதிர்ப்பார்ப்புகளுடன் பூமியை நனைக்க வந்தேன் மழையாக இல்லை இல்லை பூமியில் பவனி வரும் என் குட்டி தேவதைக்கு செல்ல முத்தம் கொடுக்க ஆவலோடு வந்தேன் ஆனால் என்னவானது என்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *