எதற்காக என்னை விட்டு பிரிந்தாய்
ஏன் என்னை ஏற்க மறுக்கிறாய்
உன்னை சுமை என நினைத்த
கணங்களை பொய்ப்பித்து விட்டாய்
நீ கசக்கிறாய் என்று எண்ணி
முகம் சுளிக்கையில் இனிக்கிறாய்
நீ சுமையானவன் தான்
நீ கசப்பவன் தான்
உனது அருமை தெரியாத வரை
உன்னை புரிந்து கொண்டு
வரும்போது ஏன் தள்ளி போகிறாய்
ஆனாலும் நீ தொலைந்து போகவில்லை
தொலைவில் நின்று என்னை
ஏங்க வைக்கிறாய் உனக்காக
உன்னை தேடி வர வேண்டும்
என்பதற்காக தூரம் செல்கிறாய்
உனக்கான எனது தேடல்
இன்னும் எத்தனை காலம் நீளுமோ
என் தேடலுக்கு நீ பதிலளிக்க மாட்டாயா
வெறுமையாகிப் போன
என் வாழ்வின் அர்த்தங்கள்
உன்னால் தான் கலைகட்டியது
உன்னுடன் நான் கலந்தால்தான்
என் வாழ்வும் வசந்தமாகும்
ஏனென்றால் நீ தான்
நான் நேசித்த செல்வம்
நீயே கல்விச் செல்வம்