சுகாதார வழிமுறைகளுடன் கல்வியைத் தொடர்வோம்

  • 10

தளத்தில் பயணிக்கக்கூடிய மாணவ-மாணவிகள் மற்றும் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பக்கூடிய தாய் தந்தையர் உங்களின் கவனத்திற்கு என் அன்பான வேண்டுகோள்.

கல்வி என்பது எப்போதும் கற்றுக் கொள்ளக் கூடிய ஒரு விடயம். அது வயது எல்லை கிடையாது அதை கற்க நாம் வாழ வேண்டும். இப்போது இலங்கைத் திருநாட்டில் அனைத்து பாடசாலைகளும் வழமைக்கு திரும்பபட்டிருக்கிறது. அது சந்தோஷம் என்றாலும் எமது சமூகம் இந்த நாட்டில் என்ன நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை சற்று கவனத்தில் கொள்ள வேண்டி இருக்கிறது.

எங்களுடைய ஜனாஸாக்கள் கூட இன்று எரிக்கப்பட்டு கொண்டுதான் எமது சமுதாயம் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

எமது பிள்ளைகள் கட்டாயம் பாடசாலை செல்ல வேண்டும் என்று எந்த ஒரு நிபந்தனையும் கிடையாது. எமது பாதுகாப்பை நாம் தான் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இல்லை பிள்ளைகள் பாடசாலை செல்ல வேண்டுமென்று தாய் தந்தையர்கள் மாணவ-மாணவிகள் நீங்கள் எண்ணினால் உங்கள் பாதுகாப்பை நீங்கள் உறுதி செய்து கொள்ளுங்கள்.

அதுமட்டுமின்றி முக கவசம் கை கழுவுதல் இதுபோன்ற விடயங்களையும் கருத்தில் கொண்டு சமூகத்தையும் நாளைய தலைமுறையும் பாதுகாப்போம்.

முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டிய விடயம். பெண் பிள்ளைகள் இவர்களின் பாதுகாப்பு எமது சமூகத்தின் தலையெழுத்து. அதை அனைத்து பெற்றோர்களும் மற்றும் மாணவிகளும் கவனத்தில் கொள்ளுங்கள். இது உங்கள் சகோதரனாய் எனது தயவான வேண்டுகோள்.

மிகவும் மன உளைச்சலோடு எமது சமூகத்தின் நாளைய நிலை எண்ணியும் இந்த பதிவை பதிவிடுகிறேன்.

கவிதை காதலன்
அக்குறணை லஷாட்

தளத்தில் பயணிக்கக்கூடிய மாணவ-மாணவிகள் மற்றும் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பக்கூடிய தாய் தந்தையர் உங்களின் கவனத்திற்கு என் அன்பான வேண்டுகோள். கல்வி என்பது எப்போதும் கற்றுக் கொள்ளக் கூடிய ஒரு விடயம். அது வயது எல்லை…

தளத்தில் பயணிக்கக்கூடிய மாணவ-மாணவிகள் மற்றும் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பக்கூடிய தாய் தந்தையர் உங்களின் கவனத்திற்கு என் அன்பான வேண்டுகோள். கல்வி என்பது எப்போதும் கற்றுக் கொள்ளக் கூடிய ஒரு விடயம். அது வயது எல்லை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *