இந்த அரக்கனுகிட்ட இருந்து காப்பாத்துங்க.

  • 16

ஊமைக்காதல் நாடகம்
காட்சி :- 07

களம்: நுவரெலியா இனியாவின் வீடு, மற்றும் கடைத் தெரு.

கதாபாத்திரங்கள்:
இனியா (கதாநாயகி)
ராதன் (கதாநாயகன்)
மேனகா (இனியாவின் தாய்)
செல்லம்மா (ராதனின் தாய்)
கெளரி (ராதனின் சகோதரி)
அபி (இனியாவின் தங்கை)
சுவர்னா (ராதனின் அத்தை)
சோமு (காவலாளி)
சங்கர் (ராதனின் நண்பன்)
ராஜன் (துரையப்பாவின் மகன்)
வேலு (ராஜனின் நண்பன்)

(துரையப்பா, ராஜன் இருவருமாக இணைந்து ராதனை தீர்த்துக் கட்ட நினைத்தும் அதில் பாரதி உயிரிழந்து போனதால் அதிர்ச்சி அடைந்து போய் நின்றனர். ராஜன் ஏற்கனவே ராதன் மேல் வைத்திருந்த கோவத்தனை இன்னும் பண்மடங்காக அதிகரிக்கச் செய்து கொண்டான். என் அப்பாவால் செய்து முடிக்க இயலாத செயலை தான் செய்து முடிக்க வைராக்கியம் கொண்டான். இன்னும் இனியாவோடு தான் கொண்ட ஆசையை நிறைவேற்றத் துணிந்தால் ராதனை தானாகவே வரவழைத்து சாதிக்கலாம் என திட்டம் தீட்டினான். அதற்கேற்றாற் போல் தனது செயல்களில் ஈடுபட ஆரம்பித்தான். இறுதியில் இந்த முயற்சியிலும் தோல்வியை சந்திக்கிறான் ராஜன். கணவனை இழந்து தனியாக இருக்கும் வீட்டிற்கு ராஜன் அடிக்கடி வந்து வம்பு வளர்த்து செல்வதை ஓரிரு வாரமாக வைத்துக் கொண்டிருந்தான். இப்படியாக நிலமை இருக்கையில் ராதனின் வீட்டார் இனியாவின் வீட்டாரைப் பார்க்க வருகின்றனர். ராதனும் கூட.)

செல்லம்மா:- இனியா. இனியா வீட்டுல யாராவது இருக்கீங்களா?

சுவர்ன:- கதவ தெறந்து கிட்டு உள்ள போக வேண்டியது தானே மதினி. யாரு தான் கேக்க பாக்க போறாங்க?

கெளரி:- மொதல்ல வந்த எடத்துல எப்படி நடந்துக்கனும்னு படிச்சிகுங்க அத்த.

இனியா:- யாரு கொஞ்சம் தாமதமாகிரிச்சி. ஆ நீங்களா உள்ள வாங்கம்மா உள்ள வாங்க.

செல்லம்மா:- என்னம்மா எப்படி இருக்க செளக்கியமா?

இனியா:- எங்கம்மா நாங்க செளக்கியமா இருக்க? ஒன்னுக்கு பின்னால இன்னம் ஒன்னா வந்து கிட்டே இருக்கே? கண்ணீரும், கதியுமா இருக்கோம்.

கெளரி:- ஆண்டவன் எல்லாத்தயும் பாத்துக்கிட்டு தான் இருக்கான். எல்லா கெட்ட விஷயத்துக்கும் ஒரு முற்றுப்புள்ளி வச்சுதான் இருப்பான்.

சுவர்னா:- அது இருக்கட்டும் எங்க ஒன்னோட அம்மா? நல்லா சந்தோஷமா இருக்காளா?

கெளரி:- அத்த வார்த்தைய பாத்து பேசுங்க. தன்னோட புருஷன இழந்துட்டு நிக்கிறவ எப்படி சந்தோஷமா இருக்க முடியும்?

செல்லம்மா:- அம்மா இனியா நீ அத எல்லாம் கணக்குல போட்டுக்காதம்மா. அம்மா இருக்காங்களா பேசமுடியுமா?

இனியா:- அம்மா அம்மா ஒங்கள பாக்க ராதனோட அம்மா, தங்கச்சியும் வந்திருக்காங்க.

மேனகா:- வாங்கம்மா இப்படி உக்காருங்க. எப்படி இருக்கீங்க?

செல்லம்மா:- ஒங்க கதய கேட்டா எனக்கே சோகமா இருக்கு. நா இங்க என்ன நடந்துச்சுன்னு கேக்க வரல்ல. ஒங்கள பாத்துட்டு போகலாம்னு வந்தேன்.

கெளரி:- சோகமான கதய திரும்ப, திரும்ப கேட்க சோகம் தான் கூடும். அதுல இருந்து வெளில வர்ர வழிய தான் பாக்கனும். இல்லம்மா?

செல்லம்மா:- அம்மா இப்ப ஒரு வாரமா அவரும் இல்லாம வீட்டு செலவு, சாப்பாடு எல்லாம் எப்படி பாத்துக் கிட்டிங்க? நா இப்படி கேக்குறேன் எதுவும் நெனசிக்க வேனாம். யெதுக்குன்னா.

மேனகா:- இல்லம்மா என்னால புரிஞ்சிக்க முடியுது. நீங்க எப்பவுமே எங்க கூட பாசமாத்தான் இருக்கீங்க. அவரு எறந்துட்டாருன்னு செய்திய வந்து சொல்லிட்டு வீட்டு சாமான், சல்லியெல்லாம்.

சுவர்னா:- யாரு ராஜா தம்பி கொடுத்திருப்பாரே? இருந்தாலும் அவரு ரொம்ப தான் பாசமா இருக்காரு.

மேனகா:- அவரு இல்ல ராதன் தம்பி வந்து தந்துட்டு போனாரு. அந்த ராஜா தர்ர எந்த ஒரு பொருளோ ஒரு ரூபா பணமோ எனக்கு தேவயில்ல!

சுவர்னா:- அந்த மாதிரி பெரியவங்களோட கொஞ்சம் அனுசரிச்சி போனா அவங்க ஒங்கள ரொம்ப நல்லா பாத்துக்குவாங்க.

கெளரி:- அத்த இதுக்கு மேல பேசுனிங்க வெளிய போங்கன்னு சொல்லிடுவேன்.

மேனகா:- அட நீ எதுக்கும்மா அப்படி எல்லாம் சொல்ல போற? அப்படி எல்லாம் அவனுக்கு அனுசரிச்சி வாழ வேண்டிய தேவ எனக்கு கெடயாது!

செல்லம்மா:- அம்மா ராஜனால என்ன சரி ஒங்களுக்கு தொந்தரவு இருக்குன்னா இங்க இருந்து நம்ம வீட்டுக்கு வந்து இருக்கலாமே?

இனியா:- இப்ப ஒரு வாரமா அவனோட தொல்லை தாங்க முடியல! அம்மா வீட்டுல இப்படி இருக்குற நேரத்துல புரிஞ்சிக்காம தப்பா நடந்துக்க முயற்சி பண்ணிக்கிட்டே இருக்காரு!

சுவர்னா:- அடி பொண்ணே அவனோட நீ நல்ல விதமா இருந்தியன்னா அவ ஒன்ன நல்லா பாத்துப்பான்.

செல்லம்மா:- மதினி வெளில போறீங்களா இல்லயா இப்போ? இதுக்குத்தான் இங்க வந்தீங்களா?

அபி:- அம்மா அம்மா வெளில யாரோ ஒருத்தர் வந்து நின்னு கிட்டு இருக்காரு.

மேனகா:- இனியா போய் யாருன்னு பாரும்மா. அந்த ராஜனா மட்டும் இருக்க கூடாது!

இனியா:- யாரு வெளில நிக்கிறது? சொல்லுங்க என்ன?

ராதன்:- இனியா நான் தான். இதுல கொஞ்சம் பணமும், வீட்டு சாமானும் கொண்ணாந்து இருக்கேன் எடுத்துக்குங்க.

இனியா:- எங்களுக்காக நீங்க இப்படியும் பாடு படுறிங்க. ஆனா நான் தா அன்னக்கி தப்பா நடந்துகிட்டேன். என்ன மன்னிச்சிருங்க.

ராதன்:- அதெல்லாம் பரவால்ல. நான் இங்க இருந்து போயிட்றேன் ராஜனால எதுவும் பிரச்சன வந்துச்சுன்னா. நான் பாத்துக்குறேன்.

(இவள் மீண்டும் உள்ளே நுழையும் போது)

மேனகா:- என்னோட புருஷன் ஒங்க மகனுக்கு துரோகம் செய்ய பாத்தாரு. ஆனா ஆண்டவன் அவரையே எடுத்துக்கிட்டா. இது தான் நம்மலோட விதி!

செல்லம்மா:- அப்படி எல்லாம் சொல்லாதிங்கம்மா. அவரோட தப்பு எதுவுமே இல்ல. அந்த ராஜனும், துரையப்பாவும் தான் சதி பண்ணிருப்பானுங்க.

இனியா:- ராதன் தான் வந்துட்டு போனாரு கொஞ்சம் பணமும், சாமானும் கொடுத்துட்டு போனாரு.

கெளரி:- எது நடந்தாலும் எங்களுக்கு சொல்லுங்க நாங்க ஒங்கள கைதாங்க காத்துக்கிட்டே இருக்கோம்.

மேனகா:- ரொம்ம நன்றிம்மா நீ சொன்ன வார்த்த ரொம்ப ஆறுதலாக இருக்கு. நீ செய்ய எல்லாம் வேனாம் சொன்னது போதும்.

சுவர்னா:- சரி சரி வாங்க போகலாம். இனி என்ன நமக்கு வேல? (வீட்டை விட்டு வெளியே வந்ததும்)

செல்லம்மா:- இப்படியா போற எடத்துல நடந்துக்குறது? எனக்கு ரொம்ப அவமானமா போச்சி.

கெளிரி:- இனிமே இப்படி மோசமாக நடந்துக்காதிங்க.

சுவர்னா:- நா எத பண்ணுனா தான் அது பிழயாச்சே நான் போயிட்றேன்.

(இப்படி ராதனின் வீட்டார் சென்றதன் பிறகு மாலைப் பொழுதும் கடந்து போனது. வழமைபோல ராஜன் இரவு வேலையில் இனியாவின் வீட்டுப் பக்கம் வருகிறான்.)

ராஜன்:- டேய் வேலு தட்டி ஒடடா அந்த கதவ. இன்னக்கி எவனும் என்ன தடுக்க முடியாது.

வேலு:- அடியே யாருடி உள்ள கதவ தெறங்கடி. கதவ தெறங்கடி.

மேனகா:- கடவுளே மறுபடியும் வந்துட்னானே.

அபி:- அம்மா அம்மா ரொம்ப பயமா இருக்கும்மா மறுபடியும் அவரு வந்து கத்துறாரு மா.

மேனகா:- நீ எங்கடி போற? பேசமா இரு அவனே கத்திக்கிட்டு இருந்துட்டு போய்டுவான்.

இனியா:- இல்லன்னா மட்டும் என்ன சும்மா வா இருப்பான்? எப்படியும் அட்டகாசம் பண்ணி தெறக்க வச்சிடுவான். இன்னக்கி இவன் என்ன பண்ண போறான்னு பாத்துடுவம்.

இனியா:- எதுக்குடா இப்ப வீட்டுக் கதவ ஒடக்க பாக்குற? எதுக்கு கத்துற என்னடா சொல்லு?

வேலு:- என்னடி இப்படி எகிற்ற. போட்டன்னா கன்னத்துல ரெண்டு.

ராஜன்:- அட அட நீ எதுவும் பண்ணக் கூடாது. அவள எது பண்ணுறதா இருந்தாலும் நான் தா பண்ணனும். என் பொண்ணே சொகமா? என்ன பண்ணுற?

இனியா:- பாத்தா எப்படி தெரியுது? இப்ப எதுக்குடா இங்க வந்த கத்தாம சொல்லு.

வேலு:- ஒத்துளச்சிப் போனா ஒன்ன வேல எல்லாம் முடிஞ்சு சும்மா விட்டுறவும். இல்லன்னா அடக்கி அமைதி பண்ணிரறுவம்.

இனியா:- என்னடா இது புதுசா? என்ன உள்ள வர பாக்குற அம்மா இங்க பாரும்மா. மரியாதயா வெளிய போய்டு இல்லன்னா நா.

(இனியாவின் இரு கைகளையும் இறுகப் பிடித்த வாரே வீட்டினுள் நுழைந்து.)

ராஜன்:- என்னடி பண்ணுவ? பாவமேன்னு பொறுத்து போனா ரொம்ப கூத்து காட்டுற. டேய் போய் அந்த கெழவிய பாருடா.

மேனகா:- அடேய் நேம் பொண்ண என்னடா பண்ண போறிங்க விடுங்கடா. எங்கள யாராவது காப்பாத்துங்களே.

வேலு:- நீ என்னடி புதுசா கத்துற போடி அந்த பக்கமா வந்துட்டா பெருசா.

(அவளின் கன்னத்தில் அடித்து விட்டான். மேனகா அப்படியே விழுந்து விடுகிறாள். இப்படி கலவரம் நடந்து கொண்டிருக்கையில் அபி வீட்டின் பின் பக்கமாக யாராவது அழைத்து வர வெளியேறிச் செல்கிறாள்)

சோமு:- அந்த பள்ளத்து லயத்துல ஏதா சத்தம் கேக்குதுல்ல சங்கர் சார்?

சங்கர்:- எவனாவது குடிச்சிட்டு வந்து கத்திக்கிட்டு கெடக்குறான் போல.

ராதன்:- ஒரு வேல இனியா வீட்டுலயோ தெரியல கொஞ்சம் போய் பாக்கலாமா?

சங்கர்:- டேய் என்னடா இதுக்குமாடா? அந்த வீட்டுக்கு இப்ப ராஜா இல்ல எவனும் போக முடியாது

சோமு:- அடி சின்ன பொண்ணு இந்த ராத்திரில எங்க போற? என்ன ஆச்சு யே அழுகுற?

சங்கர்:- என்னம்மா ஆச்சு ஒன்னோட வீட்டுலயா அது சத்தம்?

அபி:- என்னோட வீட்டுக்கு அந்த ராஜா மாமா வந்து அக்காவ என்னமோ பண்ண பாக்குறாங்க அம்மாவுக்கும் அடிச்சிடாரு!

ராதன்:- நான் சொன்னன்ல. சங்கர் வா சீக்கிரமா போகலாம்.

சங்கர்:- ராதா நீயும் சோமுவும் போங்க நான் இப்ப வந்துட்டுப் போற போலிஸ் வண்டிய போன் பண்ணி அழச்சிட்டு வாரேன்.

ராதன் :- அதுவும் சரிதா. நீ அந்த வேலய பாரு. வாங்க சோமு போகலாம்.

சோமு:- அம்மா நீ சீக்கிரமா போய்டு இல்லன்னா ஒன்ன குறி வச்சிடுவான்.

ராதன்:- டேய் ராஜா என்னடா நீ ஆம்பல இல்லாத வீட்டுல இந்த பொண்ணுக்கு பண்ண பாக்குற?

ராஜன்:- அடடா இத இத தான் நான் எதிர் பாத்தேன். ஹீரோ வந்துட்டாரு பாரு. டேய் வேலு மொதல்ல நல்லா ஒன்னு வைடா இவனோட மண்டக்கி.

இனியா:- ராதா எங்கள எப்படி சரி இந்த அரக்கனுகிட்ட இருந்து காப்பாத்துங்க.

வேலு:- டேய் ராதா கடன் காரனோட மவனே ஒன்ன என்ன பண்ணுறேன்னு பாரு!

அபி:- மாமா இந்தாங்க இந்த தடியால அவனோட கைக்கோ, காலுக்கோ அடிச்சிருங்க.

சோமு:- (அந்த தடியை வாங்கி) ஆகா நீயா இந்தா நீ பண்ண காரியத்துக்கு பரிசு. வாங்கிக்க.

(இப்படி சோமு வேலுவின் கைகளுக்கு அடித்ததும், வீட்டின் வெளியே இருந்த ஒரு தடியால் ராஜன் சோமுவின் கைகளுக்கு அடித்து விட்டு ராதனின் வயிற்றில் கத்தியால் குத்தி விடுகிறான். அப்படியே குடி மயக்கத்தில் தள்ளாடத் தொடங்குகிறான்.)

ராதன்:- அம்மா அடேய் என்னடா பண்ணுன? ஒன்னோட புத்தியே பின்னால வந்து தாக்குது தானே?

இனியா:- ஐய்யோ கடவுளே ஒங்களுக்கா இப்படி ஆகனும்? கடவுளே என்னோட ராதன எப்படி சரி காப்பாத்து! இப்படி கதறுறனே கேகெகலயா ஒனக்கு?

ராதன்:- சோமு அவன் இப்ப போதைல இருக்கான் அவனோட ரெண்டு கையயும் பின்னால இருக்கி பிடிச்சிகிங்க.

(சோமு இவ்வாறு இருக்கப் பிடித்து கொள்ளவே ராதன் அருகில் இருந்த ஒரு தடியால் ராஜனின் கால்களுக்கு தன்னைக் காத்துக் கொள்வதற்காக அடிக்கிறான். ராஜன் போதையின் உச்ச கட்டத்தில் இருந்ததால் அப்படியே கீழே விழுந்து விடுகிறான். ராதனும் வலி தாங்க முடியாமல் அப்படியே கீழே விழுந்து அமர்ந்து விடுகிறான்.)

சோமு:- என்ன தொர இன்னும் போலிஸ் வரல்ல? ரத்தம் வேர ரொம்ப கசியுதே?

இனியா:- இந்த துணிய கொஞ்சம் இருக்கமா கட்டி விடுங்க! ஆஸ்பத்திரிக்கு அழைச்சிட்டு போகலாமா இவர?

ராதன்:- இவனுங்கள ஒரு வழி பண்ணாம நான் இங்க இருந்து போக மாட்டேன். இனியா நான் வரும் வரக்கிம் பாத்துக் கிட்டே இரு எங்கயும் போவாத.

இனியா:- நீங்க திரும்ப வந்தா தான் எனக்கு வாழ்க்க உண்டு. இல்லன்னா எனக்கு எதுவுமே வேண்டாம். (என ராதனை இறுக்கி அனைத்துக் கொள்கிறாய் இனியா.)

(மயக்கம் தெளிந்து வந்த மேனகா இவர்கள் இப்படி இருந்ததையும் பாராமல்.)

மேனகா:- கடவுளே நீ எங்கள இன்னுமே சோதிச்சு முடியலையா? கடசில நம்மள காப்பாத்த வந்த தம்பியும் வீடாகிட்டாரே?

சோமு:- கடவுளே தொர மயங்கிட்டாரே தொர தொர.

சங்கர்:- ராதா நான் வந்திருக்கேன் டா. கண்ண தெறடா ஒனக்கு ஒன்றும் ஆகாது டா!! ராதா ராதா.

(இனியாவின் வீட்டை வந்தடைந்த பொலிஸார் உடனே ராதனை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்து விட்டு, ராஜனையும், வேலுவையும் கைது செய்து சிறைக்கு அழைத்துச் சென்றனர். ராதன் சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல படுகிறான்.)

(இப்படியாக ராஜன் தன் தந்தையால் செய்து முடிக்க இயலாத செயலை தான் செய்து முடிப்பதாக சபதம் எடுத்தும் அவனுடைய மதியை மிஞ்சிய இறைவனின் மதிநுட்பம் அவனது வாழ்க்கையை அவனை அழித்து கொள்ளும் படி செய்து விட்டது. ராதனின் பணிவான குணமும், ஒரு குடும்பத்தை கைவிடாத எண்ணமும் அவனது உயிரையே காக்க வழி செய்தது. நல்வினை செய்தால் நன்மை. தீ வினை செய்தால் தீமை. ராதன் மீண்டு இனயாவைப் பார்க்க வருவானா? பல தடைகளை எல்லாம் கடந்த இனியா, ராதன் காதல் கைகூடுமா? முடிவு என்ன? விடைகளை காணலாம் அடுத்த காட்சியில். இத்தோடு இன்றைய காட்சியை முடித்துக் கொள்கிறேன். மீண்டும் சந்திக்கலாம் அட்த்த காட்சியில்.)

ஊமைக் காதல் தொடரும்
இனியா-ராதன்

Fathima Badhusha Hussain Deen
Faculty of Islamic Studies and Arabic Language
South Eastern University of Sri Lanka

ஊமைக்காதல் நாடகம் காட்சி :- 07 களம்: நுவரெலியா இனியாவின் வீடு, மற்றும் கடைத் தெரு. கதாபாத்திரங்கள்: இனியா (கதாநாயகி) ராதன் (கதாநாயகன்) மேனகா (இனியாவின் தாய்) செல்லம்மா (ராதனின் தாய்) கெளரி (ராதனின்…

ஊமைக்காதல் நாடகம் காட்சி :- 07 களம்: நுவரெலியா இனியாவின் வீடு, மற்றும் கடைத் தெரு. கதாபாத்திரங்கள்: இனியா (கதாநாயகி) ராதன் (கதாநாயகன்) மேனகா (இனியாவின் தாய்) செல்லம்மா (ராதனின் தாய்) கெளரி (ராதனின்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *