தோழி

நட்பால் என்னை வென்றவள்
அன்பால் என்னை அணைப்பவள்
தக்க தருணத்தில் கை தருபவள்
தவறு செய்தால் சுட்டி காட்டுபவள்

அவளிடம் எதையும் மறைத்து
சமாளிக்க முடியாது
கழுகுப் பார்வையால்
கண்டுபிடித்து விடுவாள்

என் முகம் வாடினால்
அவள் விழி கலங்கும்
என் இதழ் புன்னகைத்தால்
அவள் உள்ளம் குளிரும்

சில போது கோபித்தும் கொள்வாள்
சில போது திட்டியும் தீர்ப்பாள்

ஆனாலும் அவள் என்னை
விட்டுக் கொடுக்கவும் மாட்டாள்
நட்பை விட்டு விடவும் மாட்டாள்

என்னை சீண்டி
கதி கலங்க வைப்பதில்
அவளுக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி
என்றாலும் பிறர் கேலி செய்தால்
பொங்கி எழுவாள் எனக்காக

அவளை தாயாக கண்டேன்
மனம் கலங்கிப் போன தருணங்களில்
அவளை சகோதரியாக கண்டேன்
முகம் வாடிப்போன தருணங்களில்

அவளை வழிநடத்துபவளாக கண்டேன்
தவறிழைத்து தவித்து போன தருணங்களில்
அவளை அருளாக கண்டேன்
நிர்க்கதியற்று நிலைகுலைந்த தருணங்களில்

இத்தனைக்கும் அவளுக்கு நண்பி என்ற
அடையாளம் மட்டும் தான் உண்டு
ஆனாலும் என்னில்
அதிக உரிமை எடுத்துக் கொள்கிறாள்
அனுமதி இன்றியே
அவளே என்னில் இனியவள்
என் தோழி

Noor Shahidha
SEUSL
Badulla

Leave a Reply

Your email address will not be published.