அளவோடு பேசுகிறாள்
அர்த்தமாய் பேசுகிறாள்
பண்போடு பேசுகிறாள்
பவ்வியமாக பேசுகிறாள்

பலதை மறைக்கிறாள்
காரணத்துடன் சிலதை
உரைக்கிறாள் காலநிலையுடன்

அதிகமாக பேச நினைத்தால்
அதிகமாக மௌனம் கொள்கிறாள்
அதற்காக என்னை
உதாசீனப்படுத்தவும் இல்லை

திட்டினாலும் புன்னகைக்கிறாள்
வாழ்த்தினாலும் புன்னகைக்கிறாள்
எல்லை தாண்டி அவளோடு பேச முடியாது
எண்ணிலடங்கா கேள்வி கேட்டு
வதைத்து விடுவாள்

சில போது தவிர்ப்பாள்
சில போது எதிர்ப்பாள்
அவளை புரிந்திட முடியாது
புரிந்தால் பிரிந்திட முடியாது

வினாவும் அவள் தான்
விடையும் அவள் தான்
அவள் ஒரு புதிர்

Noor Shahidha
SEUSL
Badulla

Leave a Reply

%d bloggers like this: