கடூழிய சிறைத்தண்டணை விதிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க அவர்களின் பாராளுமன்ற உறுப்புரிமை இரத்தாகாது என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

இது பற்றி தனது முகநூல் பக்கத்தில் கருத்து தெரிவிக்கையில், அரசியலமைப்பின் பிரிவுகளான 89, 91 மற்றும் 105 என்பவற்றுக்கமைய ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்புரிமை இரத்தாகாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க அவர்களுக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நான்கு வருடம் கடூழிய சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளமை பற்றி அரசியல் வட்டாரங்களில் அவரின் பாராளுமன்ற உறுப்புரிமையை இழக்கப்படலாம் என கருத்துக்கள் முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

%d bloggers like this: