சமூக ஒற்றுமையின் முக்கியத்துவம்

  • 12

சமூக ஒற்றுமையும் ஐக்கியமும் இன்றியமையாத தேவை. காலங்காலமாக நிலவிவரும் பாரம்பரிய முரண்பாடுகளை மூட்டை கட்டிவிட்டு ஐக்கியப்பட வேண்டிய காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எமது கரங்களில் அரசியல் பலமும் ஊடகபலமும் இருந்தாலும் எமது சமூகத்தின் ஐக்கியம் சீர்குலைந்து விட்டால் எம்மால் எதனையும் சாதிக்க முடியாது.

சண்டையும் சர்ச்சையும் வேற்றுமையும் முரண்பாடுகளும் பிளவும் பிரிவினையும் இருக்குமிடங்களில் வெற்றி கிடையாது. வெறும் 14 மில்லியன்களைக் கொண்டிருக்கும் யூத சமூகத்தினர் இன்று உலகின் மிகப் பெரும் சக்தியாக விளங்குகிறார்கள். இதற்கான காரணம் என்ன அறிவு (Knowledge), விஞ்ஞானம் (Science), தொழில்நுட்பம் (Technology), பொருளாதாரம் (Finance), உலக சந்தை (World Trade) என சகல வளங்களையும் தன்னகத்தே கொண்டிருந்தும், அந்த சமூகத்திற்கு மத்தியில் நெருக்கமான இறுக்கமான கட்டமைப்பும் சமூக ஐக்கியமும் காணப்படுகிறது.

அந்த சமூகத்திடமிருந்து இலங்கை முஸ்லிம் சமூகம் பாடம்படிக்க வேண்டும்.

இயல்பிலேயே சிறுபான்மை சமூகம் பலவீனமானது. அது தனக்குள் பிளவுபட்டால் இன்னும் பலவீனமடையும். அது ஐக்கியப்பட்டு ஒன்றுபட்டால் பிளவுபட்டிருக்கும் ஏனைய சமூகத்துக்கு முன்னால் பலம்மிக்க சக்தியாக நிமிர்ந்து நிற்க முடியும் என்ற யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இயக்கவாதம், தரீக்காவாதம், கட்சிவாதம், பிரதேச வாதம், ஊர் வாதம் என்று எல்லா ஜாஹிலியாக்களிலிருந்தும் எமது சமூகம் விடுபட வேண்டும். இனியும் இப்படி காலம் கடத்தலாகாது. ஆபத்துக்கள் வந்து விட்டன. பேரனர்த்தம் நடந்து முடிந்துவிட்டது. இனியும் இத்தகைய வன்முறைகள் நடக்கலாம் என்ற அச்சம் நிலவுகின்ற நிலையில் அல்லாஹ் எம்மைப் பாதுகாக்க வேண்டுமானால் பௌதிகக் காரணிகள் உச்ச நிலையில் செயற்படுத்தப்பட வேண்டும். இன்று சாத்தான்கள் வேதம் ஓதும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

முஸ்லிம் சமூகத்தைப் பார்த்து,

“தலைமைத்துவம் ஒன்றை உருவாக்கிக் கொள்ளுங்கள், உங்களுக்கு மத்தியில் ஒற்றுமை இல்லை. அதன் விளைவுதான் இது.”

என்று மற்றவர்கள் விரல் நீட்டும் அளவுக்கு எமது நிலைமை மோசமடைந்திருக்கிறது. எனவே, எமது சமூகத்தின் கட்டுக்கோப்பை பாதுகாக்கின்ற கடப்பாடு ஒவ்வொரு முஸ்லிமுக்கும் இருக்கிறது.

இன்று மார்க்க அரசியல் மற்றும் சிவில் தலைமைத்துவங்கள் வகைதொகையின்றி விமர்சிக்கப்படும் நிலை உருவாகியிருக்கின்றது. ஆனால் மார்க்கம் என்பது உபதேசமாகும் என்ற அடிப்படையில் உபதேசங்கள் மூலமும் அழகான அறிவுரைகளை வழிப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் காலப்போக்கில் தலைமைத்துவம் இல்லாத சமூகமாக, மாலுமியில்லாத கப்பலில் பயணிக்கினற சமூகமாக மாறும் துர்ப்பாக்கிய நிலைஏற்படலாம்.

ஏ.எம். முஹம்மத் ஸப்வான்
சீனன்கோட்டை, பேருவளை

சமூக ஒற்றுமையும் ஐக்கியமும் இன்றியமையாத தேவை. காலங்காலமாக நிலவிவரும் பாரம்பரிய முரண்பாடுகளை மூட்டை கட்டிவிட்டு ஐக்கியப்பட வேண்டிய காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எமது கரங்களில் அரசியல் பலமும் ஊடகபலமும் இருந்தாலும் எமது சமூகத்தின்…

சமூக ஒற்றுமையும் ஐக்கியமும் இன்றியமையாத தேவை. காலங்காலமாக நிலவிவரும் பாரம்பரிய முரண்பாடுகளை மூட்டை கட்டிவிட்டு ஐக்கியப்பட வேண்டிய காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எமது கரங்களில் அரசியல் பலமும் ஊடகபலமும் இருந்தாலும் எமது சமூகத்தின்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *