நவயுகத்தில் பெண்ணியம்
கம்ப்யூட்டர் கல்லாக்கிப் போட்டதே
நம் பெண்களை
நவீன கலாச்சாரம்
நாசமாக்கிப் போட்டதே
நம் பெண்களை
வீணான விளையாட்டுக்களையும்
வேடிக்கைகளையும் பார்வையிட்ட
பெண்களை கொஞ்சம்
புதுமைப் பெண்ணாய்
மாறச் சொன்னார் நம் பாரதி
வேடிக்கை பார்த்தவள் வீரம் கொண்டாள்
வீணான விளையாட்டில் இருந்தவள்
வியப்படைந்தால் கல்வி கற்றாள்
விண்வெளி தேசம்
இன்று சென்று விட்டாள்
அடுப்பங்கரை மிதித்தே வளர்ந்தவள்
புகை மண்டலங்கள் பல தாண்டி
புகழ் மண்டலங்களான
பல்கலைக்கழகங்கள் பல சென்றாள்
சமையல்காரி என்னும் பெயர் வாங்கியவள்
சாதனைக்காரி என்று பெயர் பெற்றாள்
பின்புத்தி கொண்டவள்
பெண் என பெயர் கொண்டிருந்தவள்
பாராளுமன்ற சட்டம் இயற்றினாள்
வெட்கத்தில் தலை குணிந்தே நடந்தவள்
கொஞ்சம் கொஞ்சமாக
தலை நிமிரத் தொடங்கி விட்டாள்
விளம்பரத்திற்காகவும் விற்பனைக்காகவும்
பயன்படுத்தப்பட்ட பெண்
விளிப்புணர்வுக்காக பயன்படுத்தப்படுகிறாள்
அடிமைகளாகவும்
கைபொம்மைகளாகவும் இருந்த பெண்
அடிமையாகிறாள் கல்விக்கு மட்டும்
பாலியல் வண்புணர்வாலும்
பல துஷ்பிரயோகங்களாலும்
வீதி செல்லாது வீடு நுழைந்த பெண்
வீர் கொண்டு வீதி செல்கிறாள்
விலை மதிப்பை அளவிட முடியாத
கல்வியை பெறுகிறார்
சமத்துவமே கிடையாது என
ஆணடிமைத்துவ சாக்கடைக் கிடங்குகள்
பல வற்றுக்குள் தள்ளப்பட்ட பெண்
பெண் சமத்துவம்
தனை போராடிப் பெறுகிறாள்
சுதந்திரம் தனை ஆண்கள் எனும்
காலணித்துவ நாட்டிற்கு
அடிமைப்பட்டு தொலைத்த பெண்
பெண் விடுதலை பெற வேண்டும் என பேரணியைதிரட்டுகிறாள்
இப்படியாக எல்லாவற்றையும்
அடைவுகளைக் கண்ட
பாரதியின் புதுமைப் பெண்ணே
நீ ஏனடி உன் ஆடைக் கலாச்சாரத்தில்
அந்நிய கலாச்சாரத்திற்கு அடிமையாகி
உனக்கு நீயே ஆபத்தை
முடிசூட்டிக் கொள்கிறாய்?
வெட்கத்தில் சின்னமென
ஒரு காலத்தில் திகழ்ந்த நீ
ஏனோ இன்று அதில் ஏற்றங்களையும்
இறக்கங்களையும் காணுகிறாய்??
பொறுமைக்கும் தாய்மைக்கும்
முதலிடத்தைப் பெற்ற நீயோ
இன்று ஏனோ அதிகம்
ஆவேசம் கொள்கிறாய்
இன்று ஏனோ அதிக குடும்பக்
கட்டுப்பாடு தனை செய்கிறாய்
கம்ப்யூட்டர் யுகம் தான் உன்னை
நவயுகத்தில் ஒரு அறை குறை
புதுமைப் பெண்ணாய் மாற்றியதோ
பாரதி சொன்ன புதுமைப் பெண்ணும்
நான் சொன்ன புதுமைப் பெண்ணும்
நீயல்லவே
நீ நீயாகவே இரு உன் குணங்களிலும்
நடத்தைகளிலும் மாற்றங்களையும்
பெயர்களையும் தீயவைகளாய்
அடைந்து கொள்ளாதே
நீ உன் இலட்சியத்துக்கான
சகல அடைவுகளையும் அடைந்து கொள்
நீ உனக்கான பாதையில் முன்னேறிச் செல்
நவயுகப் பெண்மணியே