இனியும் வேண்டாம் இக் கொடுமை

  • 29

பிஞ்சுக் குழந்தை நீ – உந்தன்
பிரிவுச் செய்தி – காற்றலைகளில்
பின்னிப் பிணைந்து – நெஞ்சக்கிடங்கில்
பிரம்படியாய் துக்கக் கணைகளை வீசியதே

அன்னை ஈன்ற பொழுதினில்
அகமகிழ்ந்த
அன்புத் தாயே – குழந்தாய் நீ
அன்று இறந்த பொழுதினில்
அந்த ஈனச் செய்தியை
அறியாமல் தவிக்கிறார் தனிமையில்

கொன்றுவிடும்
கொரோனாவிற்காய் – குழந்தாய்
கொஞ்சும் உனை தாயிடமிருந்து
கொடுரமாய் பிரித்தது நீதியா?

இரண்டரை நாளேயாயினும்
ஈன்றவளை பிரிந்த ஏக்கம்
இளம் பிஞ்சுப் பாலகனை
ஈற்றில் துடிக்கச் செய்யும் என்பதை
இதமாய் மறந்தனர் ஏனோ
ஈழ வைத்தியர்கள்

இறுதித் தருவாயில் – உன்தன்
இனிய வதனமதை
இறுதியாய் இரசித்திட
இல்லை இடம் உந்தன்
இரக்கமிகு தந்தைக்கும்

கொஞ்சும் குழந்தாய் நீயும்
கொரோனா எனும்
கொள்ளைப் பெயருடனே
கொடும் நீதியுடன்
கொடூரத் தீயில்
கொதித்து மறைந்திட்டாய்
கொடையாளனின் நாட்டப்படியே

பரிவுமிகு தாயிடம்
பால் அருந்த விடாமல்
பிரித்து – உந்தனை
பீடைக்குள் தள்ளினரே
புட்டிப் பாலை அருந்த வழிசெய்து
பூப் போன்ற உந்தன் மேனி
பெயர் மறையச் செய்தனரே

இறைவா வேண்டாம்
இனியும் இக் கொடுமை
இப்பூவுலகில்
இறுதிமுடிவை
இனிதாய் அமைத்திடு

மஸிய்யா அஸாத்

பிஞ்சுக் குழந்தை நீ – உந்தன் பிரிவுச் செய்தி – காற்றலைகளில் பின்னிப் பிணைந்து – நெஞ்சக்கிடங்கில் பிரம்படியாய் துக்கக் கணைகளை வீசியதே அன்னை ஈன்ற பொழுதினில் அகமகிழ்ந்த அன்புத் தாயே – குழந்தாய்…

பிஞ்சுக் குழந்தை நீ – உந்தன் பிரிவுச் செய்தி – காற்றலைகளில் பின்னிப் பிணைந்து – நெஞ்சக்கிடங்கில் பிரம்படியாய் துக்கக் கணைகளை வீசியதே அன்னை ஈன்ற பொழுதினில் அகமகிழ்ந்த அன்புத் தாயே – குழந்தாய்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *