இந்த ஓவியங்களுக்கு சொந்தக்காறி யார்?

  • 14

அவளோடு சில நொடிகள்
தொடர் 10

“அப்புடியெல்லாம் இருக்காது. சும்மா விளையாட்டுக்கு சொல்லாதிங்க.”

தன்னைத் தானே ஆறுதல் படுத்தி அப்படி எதுவும் இருக்காது என அடித்துக் கொண்ட தனது உள்ளத்தை திடமாக நிறுத்திச் சிரித்தாள் பஸியா.

“இந்த விஷயத்துலயலாம் சும்மா யாராவது விளையாடுவாங்களா. பொய் என்டா போய் நானாக்கிட்டயே கேளுங்க”

“என்ன சொல்றிங்க அப்ப உண்மையாவே கல்யாணத்துக்கு முதல்ல அவரு லவ் பண்ணி இருக்காறா? அப்ப என்ன எதுக்கு. எனக்கு தலையெல்லாம் வெடிச்சிடும் போல இருக்கு.”

பசியாவுடை கேள்விகளுக்கு விடைகொடுக்க விடால் குறுக்கிட்டது ஜெஸீறாவின் குரல்.

“சரி ராத்தா கூப்புடுது நான் போய் வேலயெல்லாம் கிடக்கு அதலாம் செய்யனும் போறனா.”

இனி நடக்கப் போகும் விபரீதங்கள் எதுவும் புரியாமல் வெகுளியாகவே சென்றாள் நஸீஹாவும், உணர்ச்சிகளை இழந்த ஒரு ஜடம் போல கட்டிலில் சரிந்தாள் பசியா.

கண்களைக் கட்டி வழி நடாத்தி வந்த விதி பேராணந்தத்தின் முன்னால் கட்டவிழ்த்து விடும் என்றிருந்தவளுக்கு பேரதிர்ச்சியின் முன்னாள் அல்லவா கட்டவிழ்த்திருக்கிறது. பாலைவனத் தணலில் விழுந்து துடித்த புளுவாக பதறித் தவித்தது அவளது உள்ளம்.

எதையும் தாங்குபவள் தான் பசியா, ஆனால் தனது திருமண வாழ்க்கைக்கே பங்கம் வந்து விட்டது என்று எண்ணும் போது எந்தப் பெண்ணும் அதற்கு விதிவிலக்கல்ல வலிக்கத் தான் செய்யும்.

“என்ன அல்லாஹ் என்ட வாழ்க்கைல இப்புடியும் ஒரு சோதனயா?” என்று தவித்தாள்.

மூன்று நாட்கள் அவனோடு பயணித்தும் கூட அவன் தன்னை புறக்கணித்த போதெல்லாம் அது அவனது கூச்ச சுபாவம் என்று எண்ணிக் கொண்டாளே தவிர, அவனது வெறுப்பின் ஆரம்பக் கட்டம் இது தான் என அவள் கடுகளவேனும் நினைத்தாளில்லை.

அவளுக்கு இது பேரதிர்ச்சி மட்டுமல்ல மீள முடியாத வலிச் சுமையும் கூட தான். அவள் உள்ளம் அத்தனை இலகுவில் இந்த காதலை ஆமோதிக்க இடமளிக்கவில்லை. காரணமே காதல் என்ற பெயரில் உருவாகும் இணைப்பை விபச்சாரம் என்ற கண்ணோட்டத்திலேயே பார்த்து பழகியவள் அவள். காதலை மட்டுமல்ல காதலிப்பவர்களையும் தன்பக்கத்தில் அனுமதியாதவள் தான் அவள்.

நவீன யுகத்தில் காதல் என்ற பெயரில், நாளுக்கு நாள் அரங்கேறும் அநாச்சாரங்களைக் கண்டும் சகித்துக் கொண்டு போகும் உலக வாழ்க்கையில் இந்த காதல் எனும் மாயைக்குள் வீழாமல் தங்கள் உள்ளங்களையும் கற்புக்களையும் பாதுகாத்துக் கொள்பவர்களைக் காணக் கிடைப்பதே அரிது. அப்படியாய் ஆயிரத்தில் ஒருத்தியாய் கியாசுக்கு கிடைத்த வரம் தான் இந்த பஸியா. வரத்தை சாபம் என்று எண்ணிக் கொண்டே அவனும் அவளை வெறுக்க ஆரம்பித்து விட்டான்.

மனதுக்குள் ஆயிரம் எண்ண அலைகள் குமுறினாலும் பொறுமையை இழந்து விட அவள் எத்தனிக்கவில்லை

“என்ன இருந்தாலும் எனக்கிட்ட அவரு இத சொல்லாம விட்டிருக்கக்கூடாது. என்னால இதல்லாம் அவருக்கிட்ட ரெக்டா கேக்கயும் ஏழாது”

மீண்டும் தனக்குள்ளயே பேசிக் கொண்டாள்.

அன்னார்ந்து அந்த ஓவியங்களை கலங்கிய கண்களோடு உற்று நோக்கினாள். யாரோ வாழ வேண்டிய இடத்துல விதி என்னக் கொண்டு நிப்பாட்டிட்ட என்று நினைத்தவளை மூளை இலேசாக உசுப்பியது

“இந்த ஓவியங்களுக்கு சொந்தக்காறி யார்?”

தொடரும்
ஏரூர் நிலாத்தோழி

அவளோடு சில நொடிகள் தொடர் 10 “அப்புடியெல்லாம் இருக்காது. சும்மா விளையாட்டுக்கு சொல்லாதிங்க.” தன்னைத் தானே ஆறுதல் படுத்தி அப்படி எதுவும் இருக்காது என அடித்துக் கொண்ட தனது உள்ளத்தை திடமாக நிறுத்திச் சிரித்தாள்…

அவளோடு சில நொடிகள் தொடர் 10 “அப்புடியெல்லாம் இருக்காது. சும்மா விளையாட்டுக்கு சொல்லாதிங்க.” தன்னைத் தானே ஆறுதல் படுத்தி அப்படி எதுவும் இருக்காது என அடித்துக் கொண்ட தனது உள்ளத்தை திடமாக நிறுத்திச் சிரித்தாள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *