
மன்னிப்பு
-
by admin
- 1
ஒவ்வொறு சந்திப்பின் போதும்
எப்படியாவது வந்துவிடுகிறது
சின்னச் சின்ன சண்டைகள் நமக்குள்
சில சமயம் செல்லச் சண்டைகள் கூட
வீண் பிரச்சினைகளில் – போய்
முடிந்ததும் உண்டு.
தவறு செய்தது நீதான் என்று நானும்
நான் தான் என்று நீயும்
மாறி மாறி சுமத்திக்கொள்கிறோம்
குற்றச்சாட்டுகளை!
இப்படியே
வெகுநேரம் பேசிப்பேசியே
முடிவு தெரியாமலே பிரிவோம்!
அதன் பிறகு என்ன நேருமோ?
என் இமைகள் அரித்துக்கொண்டிருக்கும்.
பிஞ்சு மனசு உறுத்திக்கொண்டிருக்கும்.
நான் – உன்னைக் காயப்படுத்தியதில்
என் இதயம் அதிகம் வலிக்கின்றது.
உன்னிடம் நான் மன்னிப்பு கேட்கும் வரை!
நீ – பேசாத அந் நாளும்
விடைபெறும் நேரமும் நெருங்கியது.
இரவும் கழிந்தது.
காலையும் விடிந்தது.
மகிழ்ச்சி மட்டும் மலரவேயில்லை.
நான் உன்னைக் காயப்படுத்தி விட்டேனே
என்ற குற்ற உணர்வு என்னுள்.
ஆனாலும் – நான் எதற்கு
உன்னைக் காயப்படுத்தி இருப்பேன்?
நீ என்னுடன் பேசாமல் இருப்பதற்கு
காரணம் தான் என்ன?
விடையில்லா வினாக்கள் பல என்னுள்.
மறுநாள் சந்தித்து உன்னுடன்
கதைப்பதற்காவே பல திட்டங்கள்
என்னுள் அடுக்கி வைத்தேன்.
ஆனால் – ஒன்றுமே கை குடுக்காதென்று
நானாகவே உணர்ந்து கொண்டேன்.
காரணம் -‘நான் உன்னுடன் இரவு பேசியும்
பதில் ஏதும் இல்லாததால் தான்.
உன் பதிலை எதிர்பார்த்தவளாகவே
காத்திருந்து காத்திருந்து
என் தலையணை பல வர்ணங்களில்
கண்ணீர் கோலமிட்டு
என்னை அறியாமலேயே
இரவுக்கு விடைபெற்றேன்.
உண்மை தான்
மன்னிப்பு கேட்கும் மனமும்
மன்னிக்கும் மனமும்
இருந்தால் காதல் செழிக்கும்!
நீ மீண்டும் என்னுடன் கதைப்பாய்
என்ற நம்பிக்கையுடன் இவள்
Shahna Safwan
Dharga Town
ஒவ்வொறு சந்திப்பின் போதும் எப்படியாவது வந்துவிடுகிறது சின்னச் சின்ன சண்டைகள் நமக்குள் சில சமயம் செல்லச் சண்டைகள் கூட வீண் பிரச்சினைகளில் – போய் முடிந்ததும் உண்டு. தவறு செய்தது நீதான் என்று நானும்…
ஒவ்வொறு சந்திப்பின் போதும் எப்படியாவது வந்துவிடுகிறது சின்னச் சின்ன சண்டைகள் நமக்குள் சில சமயம் செல்லச் சண்டைகள் கூட வீண் பிரச்சினைகளில் – போய் முடிந்ததும் உண்டு. தவறு செய்தது நீதான் என்று நானும்…