இரு மனங்கள் இணைந்த திருமணம்

  • 18

ஊமைக் காதல் நாடகம்
காட்சி :- 08

களம்:- ராதனின் வீடு
கதாபாத்திரங்கள்:-
இனியா (கதாநாயகி)
ராதன்(கதாநாயகன்)
செல்லம்மா(ராதனின் தாய்)
மேனகா (இனியாவின் தாய்)
கெளரி(ராதனின் தங்கை)
அபி(இனியாவின் தங்கை)
சங்கர்(ராதனின் நண்பன்)
சுவர்னா ( ராதனின் அத்தை)
சங்கவி ( ராதனின் சித்தி)

(பல தடைகளையும் தாண்டிய இனியா, ராதனின் இருவரினதும் காதல் இணையும் தருணம் வருகிறது. உலக நியதி இது தான் இருவரை இணைக்க நினைத்தால் எத்தனை பேர் பிரிக்க நினைத்தாலும் பிரிக்க முடியாது. அதே போல் இரு இதயங்களை பிரிக்க நினைத்தால் எத்தனை பேர் இணைந்து இணைத்து விட நினைத்தாலும் அதனை இணைக்க முடியாது. அது தான் உலக நியதி. அதே போல் ஒரு காதல் ஜோடிக்கு இடையிலோ அல்லது ஒரு கனவன் மனைவிக்கு இடையிலோ, இடையூறு விளைவித்து தன் பக்கம் ஒருவர் ஈர்க்க நினைப்பது என்னைப் பொறுத்த மட்டில் தெய்வ குற்றமாகும். அது ஆரம்பத்தில் இனிக்கும் முடிவில் கசக்கும். இங்கே ராஜனின் வாழ்க்கை இறுதியில் கசந்து போனது. இவ்வளவு காலம் ஊமைக்காதலர்களாய் இருந்த இனியா, ராதன் இருவருமே இணைந்து உலகமறியும் கனவன், மனைவியாக, உலக காதலர்களாக மாறிவிட்டனர். ராதன் வைத்தாயசாலையில் இருந்து மீண்டு வந்ததும், இனியா ராதன் இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இனியாவின் தாயின் தாமதிக்கும் காலம் முடிந்தவுடன் திருமணம் நடைபெற்றது.)

(இனியா, ராதன் இருவருக்கும் கோயிலில் திருமணம் முடிந்து கணவன், மனைவியாய் ராதனின் வீட்டுக்குள்ளே நுழைகிறார்கள்.)

செல்லம்மா:- வலது கால எடுத்து வச்சு உள்ள வாங்க ரெண்டு பேரும்.

கெளரி:- அம்மா இந்தாங்க ஆர்த்தி தட்டு. ஆரத்தி எடுங்க ரெண்டு பேரையும்.

இனியா, ராதன்:- (செல்லம்மா, மேனகா இருவரின் கால்களிலும் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டனர்.) அம்மா நீங்க ரெண்டு பேரும் நாங்க நீண்ட காலம் சேந்து சந்தோஷமா வனும்னு ஆசிர்வாதம் பண்ணுங்க.

செல்லம்மா, மேனகா:- நீங்க ரெண்டு பேரும் நீண்ட ஆயுளோட, ரொம்ப சந்தோஷமா. நெறய புள்ள குட்டிங்களோட, தீர்க ஆயிசா வாழனும்.

ராதன்:- ஒங்கள மாதிரி பெரியவங்கட ஆசிர்வாதம் இருந்தாலே நாங்க தீர்க ஆயுசோட சந்தோசமா இருப்போம் மா.

கெளரி:- எப்படியோ ரெண்டு பேரும் கல்யாணமே பண்ணிடுங்க. நாங்க தான் இன்னும் காஞ்சி போய் காத்துக் கிட்டு இருக்கோம்.

இனியா:- எப்படியோ கல்யாணம் பண்ணிடமா? பொறுமயா இருந்து பண்ணிட்டோம்.

சுவர்னா:- உள்ள வாங்க பதிய பொண்ணு. இனி வாழ் நாள் பூராகவும் எங்க குடும்பத்த பிரியாத படி நீங்க தான் பாத்துக்கனும் உக்காந்துகிங்க.

இனியா:- என்ன ராதா இவங்க இப்படி பேசுறாங்க என்னால நம்பவே முடியல.

ராதன்:- அது அப்படித்தான் பேசுவாங்க நீ கண்டுக்காத சிரிச்சி கிட்டே சரிங்க அத்தன்னு சொல்லு.

இனியா:- சரிங்க அத்த நா ரொம்ப நல்ல படியா நீங்க சொன்ன படியே பார்த்துக்கிறேன்.

சங்கவி:- இந்தாங்க மருமவளே இத நீங்களும் குடிச்சிட்டு. ஒங்க புருஷனுக்கும் குடுங்க. இது என்னோட கையால நானே செஞ்ச பால்.

இனியா:- இது என்னங்க புதுசா இருக்கு? இவங்க பால் கொடுக்குறாங்க? எனக்கு இதெல்லாம் புதுசா இருக்கு.

ராதன்:- அத சந்தோசமா வாங்கி குடிச்சிட்டு எனக்கும் கொடு. இனிமே எல்லாம் இப்படித்தான் நீயும் இதெல்லாம் கத்துக்க.

அபி:- நீங்க ரெண்டு பேரும் எல்லாத்தயும் பருகுனா எனக்கு ஒன்னுமே இல்லயே?

ராதன்:- ஒனக்கு இல்லாததா? இங்க வா என்னோட மடில ஒக்காரு. இதுல ஒனக்கும் இருக்கு இந்த குடி.

அபி:- எனக்கு வெளயாடுறதுக்கு இருந்தது ஒரே ஒரு அக்கா தான். அவள நம்ம வீட்டுக்கு அனுப்பி வெக்க மாட்டீங்களா? எனக்கு அழுகயே வருது இனி எனக்கு யாருமே கெடையாது!

இனியா:- (கண்கள் கலங்கிய படியே) ஆமா ராதா இவ இல்லாம நா எப்படித்தான் இருப்பேனோ? இவளோட குரும்புத்தனம், சத்தமும் இல்லாம நான் எப்படித்தான் இருப்பேனோ? என்ன எந்நாளும் என்னோட அம்மா வீட்டுக்கு கூட்டிட்டு போங்க.

ராதன்:- என்னோட செலவுல இவ்ளோ பெரிய குடும்பத்துக்கே செலவு செய்யும் போது ஒன்னோட அம்மாவும், தங்கச்சியும் அவ்வளவு பாரமா? இல்ல பெருசா? யாரையும் நான் பிரிச்சி வெக்க போறதில்ல.
நாங்க எல்லாரும் ஒன்னாத் தான் இருக்கப் போறோம். நீ அக்காவோட மட்டும் இல்ல மச்சானோடயும் வெளயாடிக்க.

இனியா:- நா கடவுளுக்கு தான் நன்றி சொல்லனும். என் கண்களுக்கு இவ்வளவு நல்ல கணவன காட்டித் தந்ததுக்கு. இது வரக்கிம் என்னோட குடும்பத்த நீங்க விட்டுக் கொடுத்ததே இல்ல ராதா. நன்றி என்னோட இவ்வளவு பாசமா இருக்குறதுக்கு.

செல்லம்மா:- நாங்க எப்பவுமே ஒங்கள யாருக்காக வேண்டியும் விட்டுக் கொடுக்கும் போறதில்ல கைவிடவும் போறதில்ல.

அபி:- அப்ப நா இந்த மாமாவ மச்சான்னு சொல்லனும் அப்படியா? இங்க நான் இருந்தா என்ன எங்க எல்லாம் கூட்டி போவிங்க?

ராதன்:- ஆமா அப்புடித்தான் கூப்புடனும். ஒன்ன நான் இன்னும் கொஞ்சம் நாளைல பிரான்ஸுக்கே அழச்சிட்டு போயி அங்கயே வச்சிக்கிறேன் போதுமா?

அபி:- அது எங்கம்மா இருக்கு ரொம்ப தூரம் போகனுமா?

மேனகா:- எனக்கு அந்த வாழ்க்க எல்லாம் தேவயில்ல மாப்புள நீங்க இந்த அந்தரத்துல இருந்து எங்கள கைதாங்கினிங்களே. ஒங்க கால்ல விழுந்தாலும் போதாது.

கெளரி:- என்னம்மா இவ்ளோ பெரிய வார்த்தையெல்லாம் பேசிக்கிட்டு. நீங்க ரெண்டு பேரும் எங்களுக்கு என்ன பெரிய பாரமா?

சுவர்னா:- பழச எல்லாம் மறப்போம். மறந்து புதுசா சந்தோசமா ஒரு வாழ்க்கைய ஆரம்பிப்போம்.

சங்கவி:- பழசயெல்லாம் பேசிடோம்னு என்ன தான் நடக்க போவது? புதுசா ஒரு வாழ்க்கைய ஆரம்பிக்கலாம்.


சங்கர்:- அடடா இவங்களே சொல்லிட்டாங்க நாம முடியாதுன்னா சொல்லிட போறோம்?

ராதன்:- வாடா என் நண்பா நீ என் வாழ்க்கைல இல்லாத எடமே இல்லடா?

சங்கர்:- நா உன் வாழ்க்கைல எல்லா எல்லா எடத்துகெகும் உன் கூட வருவன்டா. அது இருக்கட்டும் ரோமியோ, ஜூலியட் சேந்துடாங்கப்பா.

இனியா:- ஆஹா இன்னொரு ரோமியோ, ஜூலியட் சைலன்டா இருக்காங்க, அவங்களும் சேந்துடுவாங்க.

சங்கர்:- ஆஹா அவங்க யாரு இது என்ன புதுசா இருக்கு?

ராதன்:- கண்ணா ஒனக்கு ஒன்னுமே தெரியாதா?

இனியா:- கெளரி சங்கர் காதலும் எங்களுக்கும் தெரியும் இல்ல கெளரி?

கெளரி:- அப்பா அப்படி ஒன்னுமே இல்லம்மா அது எல்லாம் பொய்.

சங்கர்:- ஆட்கடத்தல்காரர்களின் பொய்யான வார்த்தைகளை நம்ப வேண்டாம். இதுக்கும், எனக்கும் எந்த தொடர்பும் கெடயாது.

ராதன்:- டேய் நண்பா தப்பிச்சிக்க பாக்காத.

(இப்படியாக காலை முதல் நேரத்தை மிகவும் மகிழ்ச்சியாகவே கழித்தனர். இரவிலே இனியாவும், ராதனும் தனிமையில் பேசுகின்றனர்.)

இனியா:- நான் கனவுல கூட நெனக்கல நீங்க எனக்கு கிடைப்பிங்கன்னு.

ராதன்:- நானும் தான் உன்ன கண்டதும் நான் நெனச்சது இவ்ளோ பெரிய எடத்துல கோட்டை கட்டுறனேனு.

இனியா:- எவ்வளவு தடைகள் வந்துச்சி ஆனா நீங்க என்ன மறக்கல்லயே?

ராதன்:- நீயும் தான் தங்கமே எந்த நெலயுலயும் என்ன தூக்கி எறியலயே?

இனியா:- ஆனா நான் தா நீங்க பண்ணுன எல்லாம் மறந்து ஒங்களுக்கு அப்படி பேசிட்டேன்.

ராதன்:- ஹய்யோ அத எப்பயோ நான் மறந்துட்டேன். நீ என் மேல வெச்ச உச்ச கட்ட காதலும். என் வீட்டுல எனக்கு எதுவும் சொல்லிட கூடாதுன்னு உள்ள பாசமும் தா ஒன்ன அப்படி பேச வச்சது. அது தப்பில்ல இனியா ஆனா கொஞ்சம் கவல பட்டேன்.

இனியா:- என்னால புரிஞ்சிக்க முடியுது. அத நெனச்சி நானும் அழாத நாட்களே கெடயாது மன்னிச்சிருங்க ராதா.

ராதன்:- அதெல்லாம் மன்னுச்சாச்சு. ஆனாலும் இனியா என்னோட புள்ளய மட்டும் இப்படி வாயாடியா பெத்துடாத. எனக்கு நீ மட்டும் தா வாயாடியா இருக்கனும்.

இனியா:- என்னப்போல வாயாடியா ஒரு புள்ளயும், ஒங்கள போல அழகான அமைதியான பையன் ஒன்னும் பெத்துக்கலாம்.

ராதன்:- அது தா ஒன்னோட ஆசன்னா அப்படியா பண்ணிடலாம். ஒன்னோட ஆசையெல்லாம் என்னோட ஆச. நீ ஆசபடுற ஒரு பொருள் ஏழு கடல் தாண்டி இருந்தாலும் அத நா கடல் எல்லாம் தாண்டி நீந்தி எடுத்து வருவேன்டி.

இனியா:- அப்படியா? அப்ப எனக்காக ஒன்னு பண்ணுவிங்களா? ஒங்கள நா கட்டிபுடிச்சிக்கிவேன். என்ன விட்டு எங்கயும் போவ மாட்டீங்கன்னு என்ன கட்டி புடிச்சி சொல்லுவீங்களா?

ராதன்:- அதுக்கென்னடி இந்தா ஒன்ன இப்பயே கட்டி புடிச்சிக்கிறேன். என் வாழ்க்கையில என்ன கஷ்டமோ, துன்பமோ வந்தாலும் ஒரு போதும் ஒன்ன கைவிடவும் மாட்டேன். ஒன்னோட எடத்துல இன்னொருத்திய வச்சி காக்கவும் மாட்டேன் இது சத்தியம்.

இனியா:- நானும் அது மாதிரியே சத்தியம் பண்டி தாரேன். எந்த சூழ்நிலையிலயும் ஒங்கள விட்டு கொடுக்கவும் மாட்டேன். ஒங்கள தவிர எந்த ஒருத்தரயும் நெனக்கல கூட மாட்டேன்.

ராதன்:- அடுத்த மாசமே நான் பிரான்ஸ்கு போயிறனும். இந்த எட்டு மாசமா இங்க இருந்த படியே என்னோட வேலையெல்லாம் பாத்துக்கிட்டேன். இப்ப அங்க இருந்தும் அழைப்புக் கடிதம் வந்திரிச்சி.

இனியா:- ராதா அப்ப நான் மட்டும் இங்க இருந்து என்ன பண்ண? இப்ப தான் ஒங்கள சேந்த சந்தோசத்துல இருந்தேன். இப்படி பண்ணப்போறீங்களே?

ராதன்:- அடி என்னோட பொண்டாட்டி நீ இல்லாம நா எந்த எடத்துலடி நா இருக்க போறேன். நா போற எடமெல்லாம் நீயும் என்னோட இருப்பாய். ஒன்னயும் என்னோட அழச்சிட்டு தான் போவேன்.

இனியா:- அப்ப என்னோட அம்மா, அபி, ஒங்க அம்மா எல்லாம்.

ராதன்:- முதலாவது நாங்க போகலாம். அப்படியே படிப்படியா எல்லாரயும் கூப்டுக்கலாம் சரியா பொண்டாட்டி?

இனியா:- இல்லயே? பிழயாச்சே?

ராதன்:- என்னடி நா பிழ செஞ்சிட்டேன்? எல்லாம் சரியாத்தானே பண்ணுறேன்? எதுல ஒனக்கும், என்னோட குடும்பத்துக்கும் கொற வச்சேன்?

இனியா:- ஹய்யோ ராதா நீங்க எதையுமே தப்பா பண்ணல, யாருக்கும் எந்த கொறயும் வெங்கல. எனக்கு எறக்கமா கொஞ்சம் முத்தம் கொடுங்க. அதுக்குத் தா பிழனு சொன்னேன்.

ராதன்:- அடியே கொஞ்சம் முத்தம் என்னடி கோடி முத்தம் ஒனக்கு தா இந்தா வாங்கிக்க.

(இப்படியே நீள்கிறது இனிய இரவும், இருவரது வாழ்வும்.)
சுபம்

(இப்படியாக இருவரும் பேசிக் கொண்டே தமது சந்தோசமான வாழ்க்கையை ஆரம்பித்து விட்டனர். அவர்களது வாழ்வின் வெற்றியை அடைந்து விட்டனர். வாழ்வில் எந்த ஒரு சூழ்நிலை வந்த போதிலும் தங்களை நம்பியவர்களை கை விடக் கூடாது. எவ்வளவு எதிர்ப்புகளும், தடைகளும் வந்தாலும் தனது தனது இலட்சியம், குறிக்கோள் என்பவற்றை கைவிடக் கூடாது. அதுவே இந்த நாடகத்தில் என்னால் எடுத்துக் காட்டப்படுகிறது. இனியா தனது தகுதி பார்க்காமல் ராதன் மீது கொண்ட காதல் அவனது வியர்வை கூட சுவர்க்கம் தான் என நம்பிக்கையோடு ஆசைவைத்தாள். ராதன் ஆரம்பத்தில் ஆகாயத்தில் தான் கோட்டை கட்டுகிறேனோ? என அஞ்சிய போதும் இறுதிவரை அவளை எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் கைவிடக் கூடாது என்ற எண்ணத்தோடு காப்பாற்றினான். ஒரு கடன்காரனின் மகன் முன்னேற்றக்கூடாது என எத்தனையோ எதிர்ப்புகள் வந்த போதிலும் அவற்றை எல்லாம் பொறுமையுடன் கடந்து வந்து, தன்னை கொலை செய்ய முயன்ற பாரதியையும் மன்னித்து அவரது குடும்பத்தையே கைதாங்கியமை, தன்னை நம்பியவளை கைவிடாமை, விட்டுக் கொடுக்காமை என்பன ஒரு சிறந்த குடும்பத் தலைவனுக்கு, ஒரு சிறந்த காதலனுக்கு இருக்க வேண்டிய பண்பினை எடுத்துக் காட்டுகிறது. இனியா எந்த சந்தர்ப்பத்திலும் ராதனை கைவிடமாட்டேன், அவனது இடத்தில் இன்னொருவரை நினைக்க கூட மாட்டேன் என்று தனது உச்ச கட்ட காதலை வெளிப்படுத்தியமை என்பன ஒரு சிறந்த மனைவிக்கு, ஒரு சிறந்த காதலிக்கு இருக்க வேண்டிய குணங்களை சித்தரிக்கின்றது. இன்னும் பொறுமை, நம்பிக்கை என்பன எந்த சூழ்நிலையிலும் வாழ்க்கையில் நம்மை கை விடாது. அதே போல நாம் அதிகம் நம்பிக்கை வைத்த ஒரு விடயம் நம்மை விட்டுச் சென்றதென்றால், செல்லும் நிலையில் இருக்கின்றதென்றால், அதன் மேல் உண்மையான பாசம் இருக்குமானால் அது என்றோ ஒரு நாள் மீண்டும் நமக்கே சிறப்பாக்கி, மேன்மையாக்கி, நம் வாழ்க்கை முழுவதும் நம்மோடு பயணிக்கும் ஒரு நீண்ட பயணியாக இறைவனால் நமக்கே மீண்டும் தரப்படும் என இறைவன் மீது முழுமையான நம்பிக்கை வைக்க வேண்டும். அதுவே வாழ்க்கைக்கு வெற்றியைத் தரும். நம்பிக்கை தான் வாழ்க்கை. வாழ்க்கை நம்பிக்கைகளால் சூழப்பட்டது. அதுவே இந்த நாடகத்தில் எடுத்துக் காட்டப் படுகிறது. எனது இந்த நாடகமே வெறுமனே எனது கற்பனைகள் மாத்திரமே! இதில் நிறைய தவறுகள், பிழைகள் இருக்கலாம். அதனையும் தெளிவாக அறியப்படுத்துங்கள். எனது அடுத்த முயற்சிகளில் திருத்திக் கொள்கிறேன்.

என்னுடைய ஊமைக் காதல் நாடகம் இதுவரை அறிந்திராத இரு முகங்கள் தங்கள் மனதுக்குள்ளே காதல் வைத்து, பின் படிப்படியாக முகம் பார்த்து, பல இன்னல்கள், எதிர்ப்புகள், தடைகள் எல்லாம் கடந்து இறுதியில் உலகம் அறியும் கனவன், மனைவியாய் இணையம் படியாக எழுதியுள்ளேன்.

எனது இந்த கதை வடிவம் உங்கள் அனைவரினதும் உள்ளங்களை கவர்ந்திருக்கும் என நம்புகிறேன். இவ்வளவு நாட்களும் எனக்காக நேரம் ஒதுக்கி இதனை வாசித்து மகிழ்ந்த, திருப்தி அடைந்த, அடையாத அனைத்து வாசகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இன்றுடன் எனது ஊமைக் காதல் நாடகம் முடிவடைகிறது. இன்னுமொரு ஆக்கத்தில் மீண்டும் அனைவரையும் சந்திக்கிறேன்.)

நன்றிகள் அனைவருக்கும்
ஊமைக் காதல் முற்றும்
சுபம்
இனியா ராதன்

Fathima Badhusha Hussain Deen
Faculty of Islamic Studies and Arabic Language
South Eastern University of Sri Lanka

ஊமைக் காதல் நாடகம் காட்சி :- 08 களம்:- ராதனின் வீடு கதாபாத்திரங்கள்:- இனியா (கதாநாயகி) ராதன்(கதாநாயகன்) செல்லம்மா(ராதனின் தாய்) மேனகா (இனியாவின் தாய்) கெளரி(ராதனின் தங்கை) அபி(இனியாவின் தங்கை) சங்கர்(ராதனின் நண்பன்) சுவர்னா…

ஊமைக் காதல் நாடகம் காட்சி :- 08 களம்:- ராதனின் வீடு கதாபாத்திரங்கள்:- இனியா (கதாநாயகி) ராதன்(கதாநாயகன்) செல்லம்மா(ராதனின் தாய்) மேனகா (இனியாவின் தாய்) கெளரி(ராதனின் தங்கை) அபி(இனியாவின் தங்கை) சங்கர்(ராதனின் நண்பன்) சுவர்னா…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *