முஸ்லிம் ஜனாஸாக்கள் தகனம் செய்யப்படுவது மனித உரிமை மீறல்

  • 26

தகனம்

தகனம் என்ற இந்த வார்த்தை இலங்கை வரலாற்றில் பன்னெடுங்காலமாக நடைமுறையில் இருந்து வருகின்ற வார்த்தையாக இருந்தபோதிலும் உலக நாடுகளைப் பொறுத்த வரையிலும் சரி இலங்கையைப் பொறுத்தவரையிலும் சரி அண்மை காலமாக மிகப் பரவலாக பேசப்படுகின்ற ஒரு வார்த்தையாக காணப்படுகின்றது. உண்மையிலே தகனம் என்ற வார்த்தைக்கு கருத்து பெற முயற்சிப்போமே ஆயின் இறந்த ஒரு உடலை அதியுயர் வெப்பநிலையில் எரிப்பதாகும். இந்த செயல்முறையின் போது குறித்த உடலின் சாம்பலை தவிர வேறு ஒன்றையும் வெளியீடாக பெற முடியாது. இதனையே நாம் தகனம் செய்தல் என பயன்படுத்துகிறோம்.

அடக்கம் செய்தல்

அதாவது மரணித்த உடலை குறிப்பிட்ட சட்டதிட்டங்களோடு தமது மத அனுஷ்டானப்படி தரையில் குழி தோண்டி புதைப்தையே அடக்கம் செய்தல் என குறிப்பிடுகின்றனர்.

அடக்கம் மற்றும் தகனம் மற்றும் பற்றிய இன்றைய மதங்களின் நிலைப்பாடு

ஒவ்வொரு மதத்தவருக்கும் தமது மரணித்த உடலை தகனம் செய்ய அல்லது அடக்கம் செய்ய அனுமதி உண்டு. ஏனெனில் மரணம் என்பது உலக வாழ்வின் கடைசி முடிவு என்பதாலாகும்.

உதாரணமாக பௌத்த மதம் தானம் செய்தல் மற்றும் அடக்கம் செய்தல் ஆகிய இரு முறைகளையும் ஆதரிக்கிறது. எனினும் பெரும்பாலான பௌத்த மக்கள் தமது உடலை தகனம் செய்து அதன் சாம்பலை இறுதி வீடுகளில் வைப்பதை ஒரு நம்பிக்கையாக கொண்டவர்கள். (திரிபீடகம்)

அதேபோல இந்துமதமும் தகனம் மற்றும் அடக்கம் செய்தல் ஆகிய இரண்டு விடயங்களையும் பின்பற்றுவதற்கு வலியுறுத்தி உள்ளதோடு தகனம் செய்யப்பட்டால் அந்த சாம்பலை நீரில் மூழ்கி கலக்க செய்வதன் மூலம் குறித்த ஆன்மா சாந்தி பெறும் என்ற நம்பிக்கையை வலியுறுத்துகிறது. (பகவத் கீதை)

இன்னும் கிறிஸ்தவ மதத்தைப் பொறுத்தவரையில் மரணித்த உடலை அடக்கம் செய்வதையே வலியுறுத்துவதோடு மரணித்த உடலை தகனம் செய்வதை வெறுக்கிறது. (பைபிள்)

இறுதியாக இஸ்லாம் மதம் மரணித்த உடலை அடக்கம் செய்வதையே வலியுறுத்துகிறது. ஏனெனில் இஸ்லாம் மதத்தின் அடிப்படையில் அவர்களின் மரணத்திற்குப் பின்னர் உள்ள ஒரு உலகை அவர்கள் நேசிப்பவர்களாக இருக்கின்றனர். இஸ்லாமிய கலாச்சாரப்படி மரணித்த ஒரு உடலை தகனம் செய்வது தடுக்கப்பட்டது. இஸ்லாமிய மத வழிகாட்டுதலின் படியும் மரணித்த உடலை தகனம் செய்வது தடுக்கப்பட்டது. ஏனெனில் இஸ்லாமிய வழிகாட்டலின் படி ஒரு உடலை எரிப்பதற்கு உரிய அதிகாரம் இன்னொரு மனிதனுக்கு கிடையாது. ஒரு உடலை எரிப்பதற்காக அதிகாரம் அல்லாஹ்வுக்கு மாத்திரமே உரியது. ஆகவே தகனம் செய்வதை இஸ்லாம் மதம் மிகக்கடுமையாக தடுக்கிறது. (அல்குர்ஆன்)

இவ்வாறு சகல மதங்களும் அடக்கம் செய்ய வழி காட்டியிருக்கும் சந்தர்ப்பத்தில் தற்போது நிலவி வரும் கொரோனா அசாதாரண சூழ்நிலையை சாட்டாக வைத்து இலங்கை அரசு 20 நாள் குழந்தை இரண்டு மாத குழந்தை என பார்க்காது முஸ்லிம் ஜனாஸாக்களை அதாவது கொரோனா தொற்றால் மரணித்த முஸ்லிம் ஜனாஸாக்களை தகனம் செய்து வருகிறது.

முஸ்லிம் ஜனாஸாக்கள் தகனம் செய்யப்படுவது ஒரு மனித உரிமை மீறலா?

இன்றைய காலகட்ட பெரும்பான்மை சமூக மக்கள் முஸ்லிம் ஜனாஸாக்கள் தகனம் செய்யப் படுவதை சர்வசாதாரணமாக நினைத்துக் கொண்டிருக்கின்றனர். உண்மையிலே இது ஒரு மனித உரிமை மீறலா? ஆம். இது ஒரு மனித உரிமை மீறல் என்பதை தர்க்க ரீதியாக நிறுவலாம்..

உண்மையிலே கொரோனா என்பது ஒரு வைரஸ். அதுவும் ஒரு உயிர்கொல்லி வைரஸ். இதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் கொரோனாவால் மரணித்த உடலை தகனம் அல்லது அடக்கம் செய்ய முடியும் என உலக சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்தி இருக்கும் நிலையில் எதிர்க்கட்சி எப்போது எதைக் கேட்டாலும் எதிர்த்து கேட்டாலும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டலின் படியே நடந்து கொள்வதாக கூஇம் இலங்கை சுகாதார அமைச்சு நல்லடக்கத்தில் அடக்கம் செய்ய அனுமதிக்காது மனித உரிமை மீறல் அல்லவா?

உலகத்தில் உள்ள 198க்கும் அதிகமான நாடுகளில் அடக்கம் செய்யும் போதும் இலங்கை அரசு அடக்கம் செய்யாமல் இருப்பது மனித உரிமை மீறல் இல்லையா?

உலகில் முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் மியன்மார் இத்தாலி இந்தியா போன்ற நாடுகளிலும் கூட முஸ்லிம்கள் அடக்கம் செய்ய அனுமதிக்கப்படும் போது இலங்கை அரசு அனுமதிக்காமல் இருப்பது ஒரு மனித உரிமை மீறல் இல்லையா?

எமது நாட்டின் தலைசிறந்த விஞ்ஞானிகள் அதேபோன்று பல உயர் சுகாதார அதிகாரிகள் இன்னும் பல கல்விமான்கள் கொரோனா தொற்றாள் மரணித்த முஸ்லிம் ஜனாஸாக்களை அடக்கம் செய்வது நாட்டிற்கு எந்த பாதிப்பையும் தராது என கூறிக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் அடக்கம் செய்ய அனுமதிக்காமல் இருப்பது மனித உரிமை மீறல் அல்லவா?

கொரோனா தொற்றாளர் பாவித்த கழிவுகள் அதேபோன்று மலம் சிறுநீர் என்பன நிலத்தின் கீழ் சென்று நிலத்தடிநீரை பாதிக்காது என கூறும் அதே இலங்கை விஞ்ஞானம் முஸ்லிம் ஜனாசா அடக்கம் செய்யும்போது நிலத்தடி நீர் பாதிக்கும் என முட்டாள்தனமாக பேசி அடக்கம் செய்ய அனுமதிக்காமல் இருப்பது ஒரு மனித உரிமை மீறல் அல்லவா?

இது எல்லாவற்றுக்கும் மேல் இலங்கை கல்வி அமைச்சின் கல்வித் திட்டத்தின் கீழ் வெளிவந்த இன்றைய பாடசாலைகளில் கல்வி புகட்டபட்டுக் கொண்டிருக்கும் தரம் 10 விஞ்ஞானம் புத்தகத்தில் இறந்த உடலில் வைரஸ் உயிர் வாழாது என கற்பித்துக் கொடுத்து விட்டு ஜனாசா நல்லடக்கத்தில் போது மாத்திரம் இறந்த உடலில் வைரஸ் உயிர் வாழும் என தர்க்கம் செய்வது ஒரு முட்டாள் தனமாக உள்ளது என்பதோடு இந்த தர்க்கத்தை வைத்து ஜனாசா நல்லடக்கத்தில் அனுமதி வழங்காமல் இருப்பது ஒரு மனித உரிமை மீறல் அல்லவா?

இன்னும் நாட்டின் சர்வமத அமைப்புக்கள் உட்பட்ட பல முக்கிய பிக்குகள் தலைமையிலான பல அமைப்புகள் ஜனாசா நல்லடக்கம் செய்ய அனுமதி வழங்குமாறும் அதற்கான தமது ஆலோசனைகளை பரிந்துரை செய்துள்ள இந்த நிலையில் முஸ்லீம் ஜனாஸாவை அடக்கம் செய்ய அனுமதி வழங்காமல் இருப்பது ஒரு மனித உரிமை மீறல் அல்லவா?

இவை எல்லாவற்றுக்கும் மேல் இந் நாட்டில் முஸ்லிம்களுக்கு என்று ஒரு தனியான சட்டம் இருக்கின்றது. அதுதான் முஸ்லிம் தனியார் சட்டம் இதை பாராளுமன்றமும் அங்கீகரித்துள்ளது. அவ்வாறிருக்க அந்தம் முஸ்லீம்களின் மதத்தில் அவர்களது மத உரிமையை மறுப்பது ஒரு மனித உரிமை மீறல் அல்லவா?

இன்னும் தனது உடலைத் தான் மரணித்த பின்னர் தனது விருப்பத்திற்கேற்ப அடக்கம் செய்ய அனுமதிக்காது இருப்பதே ஒரு தனி மனித உரிமை மீறல் அல்லவா?

கொரோனா சூழ்நிலை அதனால் இந்த சட்டமும் இங்கே முக்கியம் அல்ல நாட்டு நலன் தான் முக்கியம் என பலர் பேசுகின்றனர். இது ஒரு மத சார்பான விடயம். குறித்த மதத்தினரது அது உணர்வு சார்பான விடயம். குறித்த மதத்தினரது கலாச்சாரம் சார்பான விடயம். குறித்த மதத்தினரின் நம்பிக்கை சார்பான விடயம். முறையான ஆதாரம் இன்றி தகுந்த சாட்சிகள் இன்றி விஞ்ஞானபூர்வமான கருத்துக்கள் இன்றி அவர்களது உணர்வுக்கு மதிப்பளிக்காது அவர்களது கலாச்சாரத்தை மதிக்காது அவர்களது நம்பிக்கையை பொருட்படுத்தாது அடக்கம் செய்ய அனுமதிக்காமல் இருப்பது ஒரு மனித உரிமை மீறல் அல்லவா?

ஒரு முஸ்லிம் மரணித்த தன் பின்னர் அந்த மரணித்தவருக்காக நிறைவேற்ற வேண்டிய 4 கட்டாய சமூக கடமைகள் உள்ளன.

  1. குளிப்பாட்டுதல்
  2. கபனிடுதல்
  3. தொழுவித்தல்
  4. அடக்கம் செய்தல்

இஸ்லாம் மதம் இவ்வாறு வழிகாட்ட உலக சுகாதார ஸ்தாபனம் ஏனைய மூன்று விடயங்களையும் தடுக்கின்ற நிலையில் இலங்கை முஸ்லிம்களும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டல்களுக்கு ஏற்ப தமது அந்த மூன்று கிரியைகளையும் தியாகம் செய்து விட்டு உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி வழங்கியுள்ள இறுதியான அடக்கம் செய்யும் கிரிகையையே கேட்கின்றனர்.

நாட்டில் ஒரு சட்டம் நடைமுறைக்கு வருமாயின் அது எந்த ஒரு சாராருக்கும் பாதிப்பு தரக்கூடியதாக இருக்க முடியாது. இருக்கவும் கூடாது. அது ஜனநாயக ஆட்சி முறையும் அல்ல. அவ்வாறிருக்க இந்த சட்டம் பிற மதத்தவர் அது உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத சர்வாதிகாரப் போக்கில் அமுல் ஆகியிருப்பது ஜனநாயக ஆட்சி முறையா? என்ற கேள்வியை எழுப்புகிறது.

ஆகவே ஒட்டுமொத்தமாக நோக்குகையில் கொரோனாவினால் மரணிக்கும் ஜனாசாக்களை அடக்கம் செய்வதற்கு பல தரப்பினரதும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது உலக சுகாதார ஸ்தாபனம் அதேபோன்று இன்றைய விஞ்ஞானம் ஆகியவையும் அதற்கு தடையாக இல்லை. இந்நிலையில் முஸ்லீம் ஜனாஸாக்களை தகனம் செய்வது நாட்டின் சட்டரீதியாக அனுமதிக்கப்பட்டு இருக்கின்ற போதிலும் அவர்களது மத ரீதியாக அனுமதிக்கப்படவில்லை. இங்கு மதமா? சட்டமா? என்ற குழப்ப நிலை தோற்றுவிக்க படுகின்றது.

இறைபக்தியுள்ள ஒருவர் இதனை தெரிவு செய்வது என்பது மிகக் குழப்பமான ஒரு விடயம். இவ்வாறானதொரு குழப்பநிலை நமது நாட்டின் எதிர்கால போக்கிற்கு எந்த ஒரு நலனையும் வழங்காது. மாறாக நாட்டின் வளர்ச்சிப் போக்கு வீழ்ச்சியிலேயே செல்லும். ஆகவே இந்த வகையில் நோக்கினாலும் முஸ்லீம் ஜனாஸாக்கள் தகனம் செய்யப்படுவது என்பது அனுமதிக்க முடியாது என்பதோடு ஒரு மனித உரிமை மீறலும் ஆகும் என்பதே நடுநிலையாக சிந்திக்கும் கல்வி அறிவுள்ள ஒவ்வொருவருக்கும் தெளிவாக புரியும் என்பதே இந்த ஆய்வின் முடிவாகும்.

பஸீம் இப்னு ரஸுல்
(உயர்கல்வி நிறுவனமொன்றின் ஆய்வுக்கட்டுரைக்காக எழுதப்பட்டது)

தகனம் தகனம் என்ற இந்த வார்த்தை இலங்கை வரலாற்றில் பன்னெடுங்காலமாக நடைமுறையில் இருந்து வருகின்ற வார்த்தையாக இருந்தபோதிலும் உலக நாடுகளைப் பொறுத்த வரையிலும் சரி இலங்கையைப் பொறுத்தவரையிலும் சரி அண்மை காலமாக மிகப் பரவலாக…

தகனம் தகனம் என்ற இந்த வார்த்தை இலங்கை வரலாற்றில் பன்னெடுங்காலமாக நடைமுறையில் இருந்து வருகின்ற வார்த்தையாக இருந்தபோதிலும் உலக நாடுகளைப் பொறுத்த வரையிலும் சரி இலங்கையைப் பொறுத்தவரையிலும் சரி அண்மை காலமாக மிகப் பரவலாக…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *