என் கல்வி

தொலைவில் நீ இருக்கும்போது
பல ஏக்கம் வாழ்வில்
எட்டி விடும் தூரத்தில் நீ இருக்கும்போது
சிறு கவலை மனதில்

அதற்காக உன்னை
விட்டு விடவும் முடியாது
உன்னை கண்டுகொள்ளாமல்
கடந்து செல்லவும் முடியாது

ஏனென்றால் உறங்காமல் தினமும்
நான் கண்ட முதல் கனவே நீ தானே
உன்னை எதற்காகவும்
விட்டுக் கொடுக்கும் மனநிலை எனக்கில்லை

எத்தனை பேர் மூளையை
சலவை செய்ய வந்தாலும்
என் மனதிலிருந்து உன்னை
நான் சலவை செய்திட மாட்டேன்

Noor Shahidha

Leave a Reply

Your email address will not be published.