சமைத்த கரும் பாத்திரமா? – உன் இதயம்

  • 43

ஆணுக்கு பெண் சமம் என
கோசம் போடும்
பெண்ணின சுதந்திரம் என
நாளும் தேடும்
பெண்ணே!

தன் நிலை உணர்ந்து
ஒரு நொடி சிந்தித்துப் பார்.
சுதந்திரம் நீ தேட வேண்டாமடி
என்பேன் கண்ணே!
புரிந்திடு பெண்ணே!

ஆண்மகன் தந்து சுதந்திரம் காண
காலனித்துவ நிலமோ நீ!
சிறந்த ஆண்மையை மதித்து
தரங்கெட்ட ஆண்மையை மிதித்து வாழ
சுதந்திரம் உன்னிடமே உண்டு.

கருவை சுமக்கும் தகுதி
தந்தது யாருக்கு?
இதிலே புரிந்து கொள் மனமே
ஆணுக்கு நிகரல்லவடி நீ!
ஆணை விட மேன்மை பெற்றவளே நீ தானடி.

சுதந்திரம் என அற்பமாய்
சிந்திக்கும் மனம் எனதில்லை.
இறை தந்த வரமாய் பிறப்பை போற்றி
பெண்ணாய் பெருமை கொள்ளும்
சுதந்திரப் பறவை இவள்.

தந்தைக்கு பெருமை சேர்க்க துடித்திடும்
பார்வையை தாழ்த்தி நடந்திடும்
உரிமை பரிக்க துணிவோர்க் கெதிராய்
போர் தொடுக்கும் உரம் கொண்ட
தந்தை வளர்த்த பெண் இவள்.

ஆணாக இருக்கும் தந்தை முன்
மகள் சுதந்திரமாய் வாழும்
ஆணாக வாழும் கணவன் முன்
மனைவி சுயமாய் சிரிக்கும் – இங்கு
சுதந்திரம் பறிக்கும் கபடன் யார்?

ஆணவமான ஆண்கள் முன்
சுதந்திரம் தேடி கொடி தூக்கும்
அகந்தையுடன் பெண் உறவுகள் பார்.
உலகம் புரியும் என சொல்லி வளர்த்த
தந்தையின் கனவு இவள்.

வளைக்க நினைத்து உடைக்கும் நீயே!
உடைத்த கூர்மையில் காயம்
உணர்ந்து துடிப்பாய்.
அன்பாய் பார்த்தால் அவளும் சேயே!
ஆணவம் முன்னே அவளும் தீயே!

கபடமில்லா பேதைகளை பார்
தாயென அன்பாய்
சகோதரியென உறவாய்
அங்கு காண்பாயா அவளை
வழிகெடுக்கும் வலையென?

சஞ்சலப் பார்வை உன்னில் இருக்க
சைத்தானின் ஆயுதம் பெண்.
சற்று சிந்தை வேண்டுமடா மானிடா.
சமைத்த கரும் பாத்திரமா? – உன் இதயம்
கழுவ வேண்டுமடா சுத்தமாய்.

Rafeeul

ஆணுக்கு பெண் சமம் என கோசம் போடும் பெண்ணின சுதந்திரம் என நாளும் தேடும் பெண்ணே! தன் நிலை உணர்ந்து ஒரு நொடி சிந்தித்துப் பார். சுதந்திரம் நீ தேட வேண்டாமடி என்பேன் கண்ணே!…

ஆணுக்கு பெண் சமம் என கோசம் போடும் பெண்ணின சுதந்திரம் என நாளும் தேடும் பெண்ணே! தன் நிலை உணர்ந்து ஒரு நொடி சிந்தித்துப் பார். சுதந்திரம் நீ தேட வேண்டாமடி என்பேன் கண்ணே!…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *